அப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும்

July 29, 2015

பயப்படாதீர்கள்.

இது அஞ்சலியல்ல. ஏற்கனவே – என் தாயார் கடந்த இரண்டு நாட்களாக, வரைமுறையே இல்லாமல் அப்துல்கலாம் புகழ் பாடிப்பாடியே, அவருக்குப் பதில் என்னுடைய உயிர் போயிருக்கக்கூடாதா, எனக்கும் 78 வயதாகிவிட்டதே, மஹான் போய்விட்டாரே – எனத் தொடர்ந்து கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இந்தத் தொல்லையைத் தாங்க முடியவில்லை.  ஆகவே.

ஆனால் – என்னுடைய இருவேறு நண்பர்கள் எனக்கு அனுப்பியுள்ள செய்திகளிலிருந்து (அனுப்பியவர்களின் நம்பகத் தன்மையைக் கருதி) கீழ்கண்டவைகளைக் கொடுக்கிறேன்…

-0-0-0-0-0-0-0-0-

[1] இந்த முதல் செய்தி/கருத்து எந்த காரணத்துக்காக எப்போது யாருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், இது மிகச் சரியானதொரு கணிப்பு. ஆலூர் ஷாநவாஸ் போன்றவர்கள் ஆர்ப்பரிக்கும்- பொய்மைகளைப் பரப்பும் இன்னாட்களில் இந்த ஆடுதுறை ஷாஜஹான் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆசுவாசமளிக்கிறது. ஆனால்,  இவர்களால் நெறிப்படுத்தப்படும் நிலையில் குளுவான்கள் இல்லையோ?

Screenshot from 2015-07-29 08:22:23

சமுதாய இளைஞர்களின் சிந்தனையும், போக்கும் கவலை தருவதாக இருக்கிறது. முகநூளில் பதியப்படும் கருத்துக்கள் சமுதாயதிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. நம் கையில் கிடைத்து இருக்கக்கூடிய இந்த மின்னணு ஊடகத்தை அற்புதமாக பயன்படுத்த பல வாய்ப்புகள் இருத்தும் நாம் தவற விடுகிறோம். தேவையற்ற விமர்சனங்கள், தேவையற்ற வீர வசனங்கள், எத்தனை நல்ல விஷயமாக இருந்தாலும் கூட அதிலும் தவறு எங்கே இருக்கிறது என்று ஆராயும் போக்கு நிச்சயம் சமுதாயதிற்கு நல்லது அல்ல. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கிடும் முயற்சியில் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இது அவசியமும், அவசரமும்கூட…

:-(

-0-0-0-0-0-0-0-

[2] ஆனால், இந்த மொஹமத் ஷைய்க் போன்ற ஒருவரே போதும், முஸ்லீம்களுக்கு மாளா அவப்பெயரை வாங்கித்தர; பொதுப் புத்திப் புலத்தில் ‘முஸ்லீம் என்றாலே வன்முறைக்காரன்’ என்ற முத்திரை குத்தல்களை காத்திரப் படுத்துவதற்கு – இவர்கள் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களே போதும்.

Screenshot from 2015-07-29 08:21:41

என்ன அசிங்கமான அற்பத்தனம், அயோக்கிய மதவாதிப் பார்வை! இந்தக் குளுவான்களையெல்லாம் யார் குடுகுடுவென்று ஓடிவந்து அஞ்சலிக்கருத்துக் குப்பைகளை அள்ளித் தெளிக்கச் சொல்கிறார்கள்?

இந்த மொஹமத் ஷைய்க் – மற்ற சமுதாயத்தினருக்கே விடுங்கள் – தம்முடைய சொந்த சமுதாயத்துக்கேகூட என்ன மசுரைப் பிடுங்கியிருக்கக்கூடும்? வெறும் காரணமற்ற அற்ப வெறுப்பை ஊதிஊதிப் பெரிதாக்குவதைத் தவிர…

இம்மாதிரி ஒரு காமாலைக் கண்ணை வைத்துக்கொண்டு இந்த இளைஞரால் எந்த நல்லதைத்தான் நினைக்கமுடியும் – ஆக்கபூர்வமாகச் செயல்படுவதையே விடுங்கள்…

…இம்மாதிரி இளைஞர்(!)களை – அவர்களுடைய சொந்த நன்மைக்காகவேகூட – நெறிப்படுத்த, மட்டுறுத்த அல்லது மட்டம் தட்டி உட்காரவைக்க – பேராசிரியர் ஜவாஹிருல்லாக்கள், வன்முறையாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் பெயருக்குஆசிரியர் அமார்க்ஸ்கள் என்னதான் செய்கிறார்கள்?

குறைந்த பட்சம், அவர்கள் ஏகோபித்து உளறுவதையாவது தரவுகள் சார்ந்து செய்யலாமல்லவா?

-0-0-0-0-0-0-

நான், எதிர்காலத்தின் மீதான என் நம்பிக்கையை இழந்து வருகிறேனோ?

அய்யா ஆடுதுறை ஷாஜஹான்! உங்களைப் போன்றவர்கள் மிக அதிக அளவில் வளரவேண்டும், சமூக அதிகாரத்தைப் பெறவேண்டும். இல்லாவிட்டால் இந்திய முஸ்லீம்களுக்கு கதிவிமோசனம் என்பது ஜிஹாதிகளால் மட்டுமே நிர்ணையிக்கப் படும். அதாவது, அவர்கள் கொம்பு சீவிவிடப்பட்டு வளர்ந்து, ஒருகாலத்தில் அவர்களுக்கு எதிரானவர்களின் தலைகள் கொய்யப்படல்  மட்டுமே நடக்கும்.

அலுப்பு.

பாரதத்துக்கு இது தேவையா?
-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

11 Responses to “அப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும்”

  1. nparamasivam1951 Says:

    ஆடுதுறை ஷாஜஹான் அவர்களுக்கு ஒரு சல்யூட். ஒன்றல்ல பல. நீங்கள் கூறுவது போல் “அய்யா ஆடுதுறை ஷாஜஹான்! உங்களைப் போன்றவர்கள் மிக அதிக அளவில் வளரவேண்டும், சமூக அதிகாரத்தைப் பெறவேண்டும். இல்லாவிட்டால் இந்திய முஸ்லீம்களுக்கு கதிவிமோசனம் என்பது ஜிஹாதிகளால் மட்டுமே நிர்ணையிக்கப் படும். அதாவது, அவர்கள் கொம்பு சீவிவிடப்பட்டு வளர்ந்து, ஒருகாலத்தில் அவர்களுக்கு எதிரானவர்களின் தலைகள் கொய்யப்படல் மட்டுமே நடக்கும்.”

    சிறுமை மனத்தினர் முஹம்மது ஷைக் போன்றோரை மறப்போம். உண்மை இஸ்லாமியர் எவரும் இவர் போன்ற எண்ணம் கொண்டு இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

  2. ravi Says:

    //குறைந்த பட்சம், அவர்கள் ஏகோபித்து உளறுவதையாவது தரவுகள் சார்ந்து செய்யலாமல்லவா?//
    உளறுவது என்று முடிவு எடுத்து பிறகு எதற்கு தரவுகள் ??
    //அமார்க்ஸ்// இவரை எல்லாம் இன்னும் நம்புகிறீர்களா ??

    அய்யா மொஹமத் ஷைய்க் அவர்கள் நல்ல காமெடி செய்கிறார் .. கொஞ்சம் http://iraiyillaislam.blogspot.in/
    இந்த தளத்தை அவ்வபோது பார்ப்பது நல்லது .

    • முகம்மது அலி ஜின்னா Says:

      **அகற்றப் பட்டது**


      • யோவ் முகம்மது அலி ஜின்னா! திருநெல்வேலி வெயிலில் மூளை இளகி விட்டதா?

        என்ன அய்யா இது, நீங்கள் ஒரு கிறுக்கரோ? பொறுத்துப் பொறுத்துப் பார்த்தால் – தொடர்ந்து அற்பக் குசுக்களையே விட்டுக்கொண்டிருக்கிறீர்?

        உங்களது மேலான கருத்துகளை உங்கள் வீட்டுப் பெண்களிடமே தெரிவிக்கவும். அவர்கள் உங்களை ஆவன செய்துவிடுவார்கள்.

        இனிமேல் உங்கள் பெயர்தாங்கிய எழவுகள் நேரடியாக ஸ்பேம் போய்விடும். த்தூ!


    • பூவண்ணனின் அதர்க்கரீதி சக்ரவ்யூகத்தில் தேவைமெனெக்கெட்டு மாட்டிக்கொண்டு வாடும் ரவி அவர்களே! ;-)

      //குறைந்த பட்சம், அவர்கள் ஏகோபித்து உளறுவதையாவது தரவுகள் சார்ந்து செய்யலாமல்லவா?//
      உளறுவது என்று முடிவு எடுத்து பிறகு எதற்கு தரவுகள் ??

      —>>> ஒரிஜினல் அக்மார்க் உளறல்கள் ஒருவிதம்; கடன் வாங்கிய உளறல்கள் (=தரவுகள்) மீதான மேலதிக உளறல்கள் என்பது இன்னொரு விதம்! பலசமயங்களில் பேராசிரியர் + பேருக்குஆசிரியர் உளறல்கள் முதல்வகையினைச் சார்ந்தவை! இரண்டாம் வகையிலாவது இவர்கள் – இன்னொருவர் உளறியதன்மீது பழியைப் போடலாமே! (ஒரு நல்ல எண்ணம்தான்!)

      //அமார்க்ஸ்// இவரை எல்லாம் இன்னும் நம்புகிறீர்களா ??

      —>>> ஆ! என்ன அபாண்டமான கேள்வி கேட்டுவிட்டீர்கள் ரவி! எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. என்னுடைய ஆதர்ச போராளியே அமார்க்ஸ்தான்! உங்களுக்கு ஃபுல் மார்க்ஸ்!

      உங்கள் சுட்டியைப் பின்னர் பார்க்கிறேன். நன்றி.

  3. ravi Says:

    உங்களின் நண்பர் !! பரவாயில்லை ,, நன்றாக எழுதியுள்ளார் …
    http://www.nisaptham.com/2015/07/blog-post_14.html
    http://www.nisaptham.com/2015/07/blog-post_66.html

  4. க்ருஷ்ணகுமார் Says:

    ராம்!

    அன்பர் மொஹம்மத் ஷேய்க் ஏதோ தனியாள் என்று நினைத்து விடலாமா?

    கண்டு தலையிலடித்துக்கொள்ள

    அப்துல் கலாமின் மௌனம் – கேலிச்சித்திரம்

    இன்னும் பூவண்ணன் சார் என்ன கதிகலங்கடிக்கப்போகிறாரோ என்று நெனச்சா ………… கட்ட ப்ரம்மச்சாரிக்கு வீடு வாடகைக்கு விட்ட திகிலுடனான வீட்டுசொந்தக்காரர் போல ஸஸ்பென்ஸாக காத்திருக்கிறேன்.

    மேஜர் சார், விதிவிலக்கில்லாமல் இந்த வ்யாசத்துக்கும் மாட்டுக்கறி, கோத்ரம், நேபாளம் என்று உங்களுடைய ஏதாவது பெட் டாப்பிக்கையோ ……. அல்லது வினவாளர்கள் போல தங்களுடைய மேதாவிலாசத்தையோ …… எப்போ அட்ச்சு வுடப்போறீங்கன்னு …………. ஸஸ்பென்ஸ் கூடிய திகிலுடன் காத்திருக்கிறேன். விரைந்து வருக . ஸஸ்பென்ஸை உடைக்க.

    • முகம்மது அலி ஜின்னா Says:

      **அகற்றப் பட்டது**

    • poovannan73 Says:

      முஹம்மத் ஷேக் அவர்களின் பதிவு அப்படியே நம் ஒத்திசைவாரின் பதிவை/பல பதிவுகளை அச்சு எடுத்தது போல இருக்கிறது.தனக்கு பிடிக்காத தலைவர்களை,இயக்கங்களை ,மக்களை அவர் பேசுவதை போல இன்னொருவரும் இருப்பது விந்தை தான்

      உங்களுக்காக கிருஷ்ணகுமார் சார்

  5. முகம்மது அலி ஜின்னா Says:

    **அகற்றப் பட்டது**


Leave a reply to ravi Cancel reply