ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)

November 30, 2013

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4

சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.

ஆனால், நம்மை  யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே  முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரி புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.

நமது ஜாதியை நினைவுபடுத்திக்கொண்டு, நாம் இந்த ஜாதியைச் சார்ந்தவர்களாக இருப்பதால்தானே என்று கண்ணீர் உகுத்து… அல்லாடுவோம்… அவன் அந்த ஜாதிக்காரன் தானே, அவன் அப்படித்தான் நம் ஜாதிக்காரனுக்கு, இனத்துக்கு துரோகம் செய்வான் எனப் பொதுமைப்படுத்தப்பட்ட கோபமடைவோம்.

இல்லையேல், அவள் இந்த மதத்துக் காரி தானே, நம் மதத்தைக் கேவலமாகத்தான் எண்ணுவாள் என நினைப்போம்.  (இல்லையில்லை. எனக்குத் தெரிந்தவரை, பெண்கள், ஆண்களைப் போலப் படுகேவலமாக ஜாதியினமதம் பிரித்து மக்களைப் புரிந்து கொள்பவர்கள் இல்லை. அவர்கள் பொதுவாகவே இதயபூர்வமான, ஆத்மார்த்தமான உறவுகளை விரும்புபவர்கள்; எப்போது இதனை நினைக்கும்போதும் இது எனக்கு மாளா  ஆச்சரியம் தரும் விஷயம்தான்!)

பண்டைய இஸ்லாமில் நகைச்சுவை / ஃஃப்ரேன்ஸ் ரொஸெந்தால் / ப்ரில் பதிப்பகம் / 2011; பொதுவாக இஸ்லாம் பற்றிய எண்ணம் அது வெகு கறாரான மதம் என்பது. அதில் கலைகளுக்கோ, நகைச்சுவைக்கோ, வாழ்க்கையை அதன் சகல் போக்குகளிலும் ரசிப்பதற்கோ இடமே இல்லை என்று தான்  நம்மில் பலருக்கும் (எனக்குத் தெரிந்து, பல முஸ்லீம்களுக்குக் கூட) எண்ணம். இப்படிப்பட்ட நகைக்கத் தக்க பின்புலத்தில், நம் அறிவின்மை சார்ந்த சூழலில் -- இப்படிப்பட்ட புத்தகங்கள் அவசியம் படிக்கப் படவேண்டும்.  யாரோ உளறினார்கள் என நாமே வகுத்துக் கொள்ளும் தேவையற்ற பொய்ப் பிம்பங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். செய்வோமா?

பண்டைய இஸ்லாமில் நகைச்சுவை / ஃப்ரேன்ஸ் ரொஸெந்தால் / ப்ரில் பதிப்பகம் / 2011 (முதலில் 1956ல் பதிப்பிக்கப் பட்டது – பல இஸ்லாமிய சான்றோர்களால் வெகுவாகப் புகழப் பட்டது; பல இஸ்லாமிய பல்கலைக் கழக முதுகலைவகுப்புகளுக்கு பாடப் புத்தகமாக பலபத்தாண்டுகளாக உபயோகப் படுத்தப்பட்டு வந்துள்ளது, வருகிறதும்கூட!)  பொதுவாக இஸ்லாம் பற்றிய எண்ணம் — அது வெகு கறாரான, ஒற்றை வழியை முன்வைக்கும் மதம் என்பது. அதில் கலைகளுக்கோ, நகைச்சுவைக்கோ, வாழ்க்கையை அதன் சகல போக்குகளிலும் ரசிப்பதற்கோ இடமே இல்லை என்று தான் நம்மில் பலருக்கும் (எனக்குத் தெரிந்து, பல  முஸ்லீம்களுக்கும் கூட) எண்ணம். இப்படிப்பட்ட நகைக்கத் தக்க பின்புலத்தில், நம் அறிவின்மை சார்ந்த சூழலில் — இப்படிப்பட்ட புத்தகங்கள் அவசியம் படிக்கப் படவேண்டும். முக்கியமாக, வஹ்ஹாபிய அரைகுறைகளிடமிருந்து இஸ்லாம் தன் ஆன்மாவைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.  யாரோ உளறினார்கள் என நாமே வகுத்துக் கொள்ளும் தேவையற்ற பொய்ப் பிம்பங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். செய்வோமா? amazon

ஆக, நாம் ஆண்களாக இருக்கும் பட்சத்தில், அவன் இந்த மதத்துக் காரன் தானே, நம் மதத்தைக் கேவலமாகத்தான் எண்ணுவான் என நினைப்போம் – ஏனெனில் அவன் மதம் அவனுக்கு அப்படி கீழ்த்தரமாகப் போதனை செய்கிறது என நினைப்போம்.

ஸேக்ரெட்ப்லே - பரிசுத்த விளையாட்டு: தெற்காசிய மதங்களில் கும்மாளச் சடங்குகளும், நகைச்சுவையும் / செல்வ ஜே ராஜ், கொரின்  ஜி டெம்ப்ஸி / ஸூனி ப்ரெஸ் / 2010 / இந்து க்றிஸ்தவ இஸ்லாமிய பவுத்த மரபுகளில் உள்ள நகைச்சுவையுணர்ச்சியை வெளிக்கொணரும் தன்மைகளைப் பற்றிய, பலரால் எழுதப் பட்ட கட்டுரைகளைக் கொண்டது இப்புத்தகம். ஒரு தடவை நிச்சயம் வாசிக்கலாம். amazon

ஸேக்ரெட்ப்லே – பரிசுத்த விளையாட்டு: தெற்காசிய மதங்களில் கும்மாளச் சடங்குகளும், நகைச்சுவையும் / செல்வா  ஜே. ராஜ், கொரின் ஜி. டெம்ப்ஸி / ஸூனி ப்ரெஸ் / 2010 / இந்து க்றிஸ்தவ இஸ்லாமிய பவுத்த மரபுகளில் உள்ள நகைச்சுவையுணர்ச்சியை வெளிக்கொணரும் தன்மைகளைப் பற்றிய, பலரால் எழுதப் பட்ட கட்டுரைகளைக் கொண்டது இப்புத்தகம். ஒரு தடவை நிச்சயம் வாசிக்கலாம். amazon

ஆக, நமக்கு, தன்னைப் பார்த்துத் தானே சிரிக்க முடியும் சத்சிதானந்த மனோபாவம், ஒரு சுக்குக்கும்  இல்லவே இல்லை. அதை வளர்த்தெடுக்கும் பயிற்சியும் இல்லவே இல்லை.

இதற்கு ஒரு சான்று: தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியில்லை என்று யாராவது சொன்னால், பொங்கிச் சீறி, வசைபாடி – அவர்கள் சொல்வதை நம்மையும் அறியாமல் ஆமோதிப்போம்.

ஆகவே…

-0-0-0-0-0-0-0-0-

நம்முடைய இந்த நகைச்சுவை உணர்ச்சிக் குறைவையும் நாம் உள்மனத்தில் ஒரு ஆண்மைக் குறைவாகத்தான் கருதுகிறோம். ஆகவே… ‘பேராண்மைத்தாழ்வு இழப்பீட்டுத் தத்துவம்’படி – அதாவது சாளரம்#3ன்படி, அபத்தமான தொலைக்காட்சி நகைச்சுவைகளையும், திரைப்பட விரசக் கந்தறகோளங்களை ரசித்து நம்முடைய ஆற்றாமையைத் தணித்துக்கொள்வோம்.

நமக்கு ஒரு இரண்டாம் மனிதரை, ஒரு மூன்றாம் மனிதர் கிண்டல் செய்தால் அதை ரசிக்க முடியும். அதாவது நம்முடைய உள்ளார்ந்த வடிவேலுகளையும், செந்தில்களையும், கவுண்டமணிகளையும் (‘Inner Vadivelu’ et al 8-)) போஷகம் செய்து, நம்மைப் பார்த்து நாமே வாய் விட்டுச் சிரிக்காமல், வெளியுலக வடிவேலுகளையும், செந்தில்களையும், கவுண்டமணிகளையும் ரசிப்போம்.

ஆனால் — ஒரு நிமிடம்கூடச் சிந்திக்க மாட்டோம் – அவர்கள் நகைச்சுவை செய்வது நம்மைத்தான் என்பதை. அதற்கும் மூளை கொஞ்சம் மேலதிகமாக வேலை செய்யவேண்டும் இல்லையா? (இது அடுத்த விஷயம்: தமிழர்களாகிய நமக்கு, மேல்மாடி மெஷின்கள் கொஞ்சம் பழுதானவை – திராவிடக் கருத்தாக்கங்களுக்கு மிகப்பல நன்றிகளுடன்)

ஒரு மாதிரியான  எடுத்துக்காட்டாக, நம்முடைய அரசியல் தலைவர்களின் ஃப்லெக்ஸ் தட்டி விளம்பரங்களைப் பாருங்கள். அல்லது நம் சினிமா விளம்பரச் சுவரொட்டிகளை, ஃப்லெக்ஸ் தட்டிகளைப் பாருங்கள். அவற்றை ஊன்றிக் கவனியுங்கள்; அவற்றிலுள்ள அதீத நகைச்சுவை சார்ந்த படிமங்களை, குறியீடுகளைக் காணுங்கள்…

ஹ்ம்ம்… ஆனால், நாம் இப்படிச் செய்யவே மாட்டோம். ஏனெனில் நமக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது இல்லவே இல்லை. அது மட்டும் கொஞ்சமாவது இருந்திருந்தால், அந்தத் தட்டிகளில் ஒன்றையாவது பார்த்து நம்மில் யாராவது  ஒருவராவது விழுந்து விழுந்துக் கெக்கெலி கொட்டிச் சிரித்து மாரடைப்பு வந்து மகா சந்தோஷத்துடன் இறந்திருக்க மாட்டோமா?

இப்படி, ஒரு தட்டிக்கு ஒரு இறப்பு வீதம் ஆகியிருந்தால், நம் நகைச்சுவை உணர்ச்சி காரணமாக, நம் தமிழ் நாட்டின் மக்கள்தொகையானது, சுமார் 10 என்ற அளவுக்குச் சுருங்கியிருக்குமே!

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஸ்ரீலங்கா பிரச்னையில் நம் தமிழக அரசியல் கட்சிகள், புகழும் பராக்கிரமமும், வீரியமும், இளமையும் மிக்க ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’காரர்கள், தொழில்முறை மனிதவுரிமைக்காரர்கள், திரா விட இயக்கங்கள் எடுத்திருக்கும் —  அடிப்படைகளையே புரிந்துகொள்ளாத சுற்றிச் சுற்றிக் கும்மியடித்தல்களை, பல்வேறு திகைப்பூட்டும் நிலைப்பாடுகளைப் பார்த்த, தொடர்ந்து பார்க்கும் பாக்கியம் பெற்ற, தமிழர்களாகிய நம்முடைய எதிர்கொள்ளல் எப்படி இருக்கவேண்டும்? குறைந்தபட்சம் ஒரு நமட்டுச் சிரிப்பு, அதிக பட்சம் விலா நோகச் சிரிப்பு என்பதாகத்தானே இருக்கவேண்டும்?

ஊக்க போனஸாக எக்காளச் சிரிப்புச் சிரித்து ஒரிருவராவது மாரடைப்பு வந்து செத்திருக்கவேண்டாமா??

ஆனால், நமக்குச் சுட்டுப் போட்டாலும் நகைச்சுவை உணர்ச்சி இல்லாத காரணத்தால், நாம் இவர்கள் போடும் கூச்சல்-கூப்பாடுகளுக்கு, அரைகுறைத்தனங்களுக்கு மதிப்பெல்லாம் கொடுத்து இந்தக் கூத்துகளைப் பற்றித் தெரிந்துகொள்ள பைசா செலவழித்து பத்திரிக்கைகள் படிக்கிறோம், தொலைக்காட்சி பார்க்கிறோம், த்சோ த்சோ டெசொ புசோ என்கிறோம். இவர்களைப் படு சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம்!

பேச்சுவாக்கில் சில நாட்கள் முன்பு என் நண்பன் சொன்னான்: நம்முடைய நாடு, ஆட்சி, அண்டைய நாடுகளுடன் உறவு, சட்டம் போன்ற பலவற்றை நன்கு தெரிந்திருக்க வேண்டிய, மேதகு ‘பலதடவை முன்னாள் முதலமைச்சர்’ கருணாநிதி அவர்கள் இனிமேல் டெஸோ மூலமாக ‘கச்சத்தீவுக்காகப் போராடப் போகிறேன்’ என்று சொல்லியிருக்கிறாராம்.

நமக்கு நகைச்சுவை உணர்ச்சி இப்போதாவது, இக்காரணம் கொண்டாவது பிறக்க, பல்கிப் பெருக, அவரவர் நம்பும் ஆண்டவன் அருள் புரிவானாக.

டெஸோ புஸ்புஸோவாய  நமஹ.

யோசித்துப் பார்த்தால், இந்த அக்ஷயத்ரிதியை அற்ப ஜந்து  மூலமாவது, ஸ்வர்ணமஹல், ஜிஆர்டி தங்கமாளிகை, லலிதா ஜுவெல்லரி, ஜாய் ஆலுக்காஸ், ஸார்ரோ போண்டாஸ், இன்னபிற வழியாகவாவது வளர்ந்தால்தான் உண்டு, நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி… ஹ்ம்ம்ம்…

-0-0-0-0-0-0-0-

நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்தெடுப்பதற்கு நமக்கு அடிப்படை பயிற்சி தேவை. முதற்கண் நாம் நம் பிறப்புறுப்பைப் பார்த்துச் சிரிக்க, நம் அற்பத்தமிழப் பேராண்மை எண்ணங்களின் ஊற்றுக்கண்ணைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரிக்கப் பழகவேண்டும். ஆனால் இந்த மகாமகோப் பாவித் தொப்பையானது குறுக்கிட்டு சண்டித்தனம் செய்கிறது. ஏனெனில், நம் தமிழர்களுக்கு திரைப்பட அற்பங்களைப் பற்றி ஓய்வில்லாமல் ரசிப்பதற்கு அடுத்தபடி உள்ள தணியா ஆர்வம் – இந்தத் தொப்பைமுதல்வாதம்தான். என்னதான் செய்வது?

ஆகவே இதற்கு, முதலில், நாம் ஒரு ஆளுயரக் கண்ணாடி ஒன்றை வாங்கி, அதற்கு முன் அம்மணமாக நின்று கொண்டு – நம் குறியைக் குறித்துக் காட்டி புன்சிரிக்க ஆரம்பிக்க வேண்டும். புன்சிரிப்பு எக்காள, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கும் சிரிப்பாக மாறி, மாரடைப்பு வரவேண்டும். ‘காக்காய்’ வலிப்பு வரவேண்டும்.

நம்மைப் பார்த்து முதலில் நாம் தான் சிரிக்கவேண்டும். இந்த விஷயத்திற்கு, நாம் நமக்குத்தான் முன்னுரிமை தந்து கொள்ளவேண்டும். சிரிப்பும் மனப் பழக்கம்தான்.

பின் தனக்குத்தானே சிரித்துக் கொள்ளலாம்.

பின்னர், மற்றவர்கள் நம்மைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்துச் சிரிக்கலாம்.

அதற்குப் பிறகு, பிறரைச் சாதாரணமாகவே பார்த்துச் சிரிக்கலாம். (முதலில் ஒரு மாதிரியாக இருக்கும்; பின்னர் பழகி விடும்; அதாவது, அவர்களுக்கு)

(கொஞ்சம் ‘ஏசு வருகிறார்’ போல ஆகிவிட்டது. மன்னிக்கவும்)

கடைசியாக ஒரு குட்டி ‘ஜோக்’ சொல்கிறேன். சிரிப்பீர்களா?

கிட்டே வாருங்கள், காதில் சொல்கிறேன்.

… … …

திராவிட இனம்!

…  … … *பொத்* … … …

… … எங்கடா அந்த 106 ஆம்புலன்ஸூ! ஃபோன் செஞ்சி அர மண்ணேரமாவது, இன்னமும் வரல்லயே! ஆள் பூட்டான் போல்ருக்கே!!  சிர்ச்சிக்கினே செத்துப் பூட்டாண்டா, பாவி!  மவனே, கல்யாணப் பாடை கட்றா! ங்கொம்மாள,  எவ்ளோ கொட்த்து வெச்சுர்க்ணம்டா, இப்டீ சாவ்றத்துக்கு! அனயாச மரணண்டா மச்சீ! மண்டையப் போட்றத்னா ங்கோத்தா,  இப்டீதாண்டா போட்ணும் மாமூ, இன்னாடா நாஞ் சொல்றது!

சுபம்.

-0-0-0-0-0-0-0-

மேலும், அடுத்தது…  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)

தொடர்புள்ள பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

4 Responses to “ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)”

  1. Packirisamy Neelagandam's avatar Packirisamy Neelagandam Says:

    //நமது ஜாதியை நினைவுபடுத்திக்கொண்டு, நாம் இந்த ஜாதியைச் சார்ந்தவர்களாக இருப்பதால்தானே என்று கண்ணீர் உகுத்து…அல்லாடுவோம்… அவன் அந்த ஜாதிக்காரன் தானே, அவன் அப்படித்தான் நம் ஜாதிக்காரனுக்கு, இனத்துக்கு துரோகம் செய்வான் எனப் பொதுமைப்படுத்தப்பட்ட கோபமடைவோம்.//

    உண்மையாகவா ?

  2. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    நகைச்சுவை உணர்வு வளர நல்ல மருந்தொன்று சிபாரிசு செய்கிறேன். நல்ல நகைச்சுவை சொல்பவருக்கு முதல் லட்சணம் சொல்பவர் தாம் சிரிக்கக் கூடாது. இது விஷயத்தில் சன், ஜெயா, கலைஞர் (முறையே ஏறுவரிசையில்) செய்தித் தொலைக்காட்சிகளின் செய்திவாசிப்பாளர்களைப் பார்க்குந்தோறும் எனக்கு பிரமிப்பு உண்டாகும்.
    உதா: நல்ல மழைநாளில்:

    ஜெயாடிவி: மள பெஞ்சே சுவடே இல்லீங்க. தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சுருச்சுங்க. நான் நிக்கற இடம் ஈரமா இருக்கு பாருங்க, அதெல்லாம் தேன், பாலுங்க….

    கலைஞர்:
    நாலு நாளா மள பேஞ்சு தீக்குதுங்க. இந்த ஆச்சில (பாட்டி அல்ல) அதிகாரிங்க, அமைச்சருங்க ஒத்தருமே வந்து எட்டிப் பாக்கலீங்க. பிள்ள குட்டிங்களோட நாலு நாளா தெருவுல நிக்கறோமுங்க.
    இரண்டிலுமே பொது மக்கள் கருத்துக்குப் பின் செய்தியாளர் லாகவமாக அடுத்த செய்தித்(நகைச்சுவைக்கு) தாவுகிற லாகவம் இருக்கே, அது ஜென் புத்த துறவிகளுக்குக்கூட வராது.
    (ஆஹா, இந்த செய்தி எத்தனை வாசிப்பாளர்களைப்பார்த்திருக்கும்! செய்தி வாசிப்பாளர்கள் எத்தனை கேமிராக்களைப்பார்த்திருப்பார்கள்! )

  3. க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

    அன்பின் ராம்

    டமில் War Dance காரர்கள் பத்தி (அதாஞ்சாமி போர் ஆட்டக் காரர்கள்) எழுதத் துவங்குகையில்

    நகைச்சுவையாய் எழுதப்போவதில்லை என்று திகிலுடன் ப்ராரம்பித்தீர்கள்

    இது என்னடா இந்த இணையத்திற்கு வந்த சோதனை என்று நான் நினைக்கையில்……

    அமராவதி (அதான் பானுமதியம்மா) யைப் பற்றியன்றி இறைவனைப் பற்றி நீ நூறு பாட்டு பாட வேண்டும் என்று

    அம்பிகாபதிக்கு ( அதாங்க சிவாஜி கணேசன்) கட்டளையிடப்பட டி.எம்.எஸ் குரலில்

    சிம்மக்குரலோன் வாயசைக்க என்ன ஆகுமோ என்ற திகிலில் இருக்க

    எண்ணிக்கை தவறோ என்ன எழவோ அம்பிகாபதி பணால்

    இங்கே ராம் அம்பிகாபதி Track ல் வந்ததும் – ஸ் ஸப்பாடா முடியல

    என்று பெருமூச்சு விட்டேன்.

    சும்மனாச்சிக்கும் கூட நகை வேண்டாம் சுவை வேண்டாம் என்று

    படுத்தி எடுக்காதீர்கள்

    இது த்ராவிட ஈன மானத்துக்கு அடுக்குமா

    அல்லது குறளோவியத்துக்குப் போட்டியாக குறள் எழுதித் தொலைத்த

    குண்டி நெளிந்த வள்ளுவருக்கு

    உதய குமார சோழன் அளித்த சாபமாய்

    பக்ஷிகளின் அமேத்யத்தால் அபிஷேகம் செய்யப்படுவீர்

    என்ற சாபத்துக்குத் தான் அடுக்குமா

    ஆகவே

    ஜாயே போற்றி ஆலுக்காஸே போற்றி

    சுவையே போற்றி டயாபட்டீஸே போற்றி

    எனத் தொடர த்ராவிட துர்த்தேவதைகளுக்கு விசில் அடித்து இறைஞ்சுகிறேன்.

    I thought twice to post it or not. anyhow it goes.

  4. Packirisamy Neelagandam's avatar Packirisamy Neelagandam Says:

    //ஆனால், நம்மை யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.//

    Comments are enough to prove this statement. Good one


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *