நான்கு வயது குழந்தைக்கு என்ன தெரிய வேண்டும்?
September 27, 2013
“நாலு வயசாச்சு, ஒண்ணுமே தெரியல இவளுக்கு!” அலுத்துகொண்டார் அந்த தாய். நாலு வயசு குழந்தைக்கு என்ன என்ன தெரிஞ்சிரிக்கணும்? என்ற அவரது கேள்விக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில்கள், எனக்கு கவலையையும், எரிச்சலையும் தருகின்றன.
ஒரு தாய் மிகப் பெருமையாக கொடுத்த பட்டியலில், நூறு வரை எண்ணத் தெரியும், பெயர் எழுத தெரியும், ஒன்பது கோள்களின் பெயர்கள், என்று அடுக்கிக் கொண்டேபோனார். இன்னும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு பல விஷயங்கள் மூன்று வயதிலிருந்தே தெரியுமென்று வெறுப்பேற்றினார்கள். சொற்பமான சில பேர் ஒவ்வொரு குழந்தையும் அதனது வேகத்தில் கற்றுக் கொள்ளும், கவலைப்படத் தேவையில்லை என்றாரர்கள்.
ஏற்கனவே நொந்து போய் கேள்வி கேட்ட அந்த தாய், மற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு தெரியுமா என்று இன்னும் அதிகமாக கவலைப் பட ஆரம்பித்து விட்டார்.
மேலும் படிக்க: நான்கு வயது குழந்தைக்கு என்ன தெரிய வேண்டும்?
(இந்தக் கட்டுரையை எழுதியுள்ள ராமசுப்புவை (+ அவர் குடும்பத்தை) எனக்குப் பல வருடங்களாகத் தெரியும்)
27 செப்டம்பர் 2013 – 1630: மன்னிக்கவும்; எழுத்துருக் குழப்பத்தைச் சரிசெய்து விட்டேன். சில பரிசோதனைகள் செய்யும்போது தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.