அநியாயமாக, நாமெல்லாம் மறந்தேவிட்ட சங்ககாலப் புலவர் சூரியனார் – குறிப்பு
September 14, 2024
திராவிடத்தின் தொன்மை (அது சங்ககாலத்துக்கும் முந்தியதே) என்பதை ஐயந்திரபற உணர்த்திய இனிமைக்கரனார் ஐயனர் அவர்களின் பள்ளியில் உதித்துப் பொன்னெழுத்துகளில் பொரித்தெடுக்கப் பெற்று உருவாகிய செம்மல்தாமவர்!
ஆரிய வந்தேறிகளின் சதியால், ஆவக்காய வடுகர்களின் கள்ளத்தால் இதுவரை மறைக்கப் பட்டுள்ள சூரியனார்களின் பிரகாசம் கிரகணத்திலிருந்து வீறிட்டு வெளியேறுவது திண்ணம்.
…அவர் குறித்த இந்த முக்கியமான ருசுவை, நம்முலகத்துக்குக் கொணர்ந்த தமிழார்வலர் – இளம் திரு சுபி தளபதி அவர்களுக்கு நன்றியுடன், இந்த சங்ககாலச் சித்திரம் பதிப்பிக்கப் படுகிறது…



September 15, 2024 at 18:16
த்ராவிடியாக்கள் டமிலுக்கும் டமிலனுக்கும் செய்த செயற்கரிய சம்பவங்களுக்கு கட்டியம்கூறும் விதமாய் அமைந்துள்ள இப்புகைப்படைத்தைப் பகடி செய்யும் ஆரியசதியை அறிந்திடடா என் உடைபருப்பே! டமிலுக்கு ஓர் இலக்கணமாம் அதை மீறுதல் இழுக்காம், ஆதிக்கசாதியினர் அலறித்துடிக்கின்றனர்!
கேளாய் இருநூறே, டமிலனாய்ப் பிறந்த அனைவரையும் டம்மிலனாக்கி, அவன் தாய்மொழியே அறியாத தற்குறியாய்த் திரியும் சுதந்திரத்தைப் பெற்றுத்தர அரைநூற்றாண்டுக்கும் மேலாய் நாம் செய்துவரும் காரியங்கள் கண்கிலடங்குமா? தமிழுக்காகத் தலைகொடுக்க ரயில் ஓடாத தண்டவாளத்தில் படுத்த நம் தியாகத்தை மறந்திட்டாயா? இந்தி தெரியாது போடா என இன்றைக்கும் இந்திப்படமெடுத்து ஆடிவரும் த்ராவிடியா கூத்தாடிகளை இறுமாப்புடன் கூவவிட்டு அதற்காக டம்மிலனை டாஸ்மாக் ஃபுல்லடித்து புல்லரித்துத் திரியவிட்டோமே, அதைக் கண்டிட்டாயா?
இந்தியா முழுதும் ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வியளிக்கும் நவோதயா பள்ளிகளை இன்றுவரை தமிழ்நாட்டில் தடுக்கின்றோமே, இதைச் செய்ய வேறெவரும் இங்குண்டா? அரசுப்பள்ளிகளிலே இந்தியை ஒழித்து அதையே நம் வாரிசுகளின் தனியார் பள்ளிகளே கோடிகளைக் கறக்கும் தொழிலாக்கிக் கொழிக்கின்றோமே அது சாதனை இல்லையா? சமச்சீர் கல்வி என்ற பெயரிலே கல்வித்தரத்தை வன்கலவிசெய்து மாணாக்கரைப் பாடையிலேற்றி நீட்டோலமிட்டு அரசியல் புரிகின்றோமே அதை உணர்வாரில்லையா?
தமிழ்நாட்டில் இதுதானடா டமிலின் நிலை, நீங்கள் வாக்களித்த த்ராவிடியாக்களின் கொடை என்று நம்மை நோக்கிச் சங்கிகள் சிலர் அவதூறுகளை வீசுகின்றனர்?! பதவிக்கும் பணத்துக்கும் த்ராவிடியாக்கள் எதுவரை செல்வோமென நம் தந்நை பக்கம் 21 லே அன்றே ஐயந்திரிபுற விளக்கினாரே? டம்மிலன் தன் தாய்மொழியை அவன் மனம்போல் பேசவும் எழுதவும் உரிமையில்லையா? தமிழ் சரி டமில் தவறெனச் சொல்ல இந்த கலாச்சாரக் காவலர்களை யார் அழைத்தது? அது டம்மிலனின் பிறப்புரிமையைப் பறிப்பதாகாதா? ஊருக்கெல்லாம் சமச்சீர் கல்வியை வழங்கி நம் குடும்ப வாரிசுகளுக்கு மட்டும் கோடிகளைக் கொட்டி கான்வென்ட் கல்வியளித்தும் அவை த்ராவிடியா தற்குறிகளாய்த் திரிகையில் அடுத்தவனை அட்சரசுத்தமாய் பேசவிடலாமா? ஆகவேதான் அனைவரையும் காயடித்து பதராக்கி நம்பின்னே அணிவகுக்க வைக்கின்றோம் என்பதை நீ அறிந்திடடா அடலேறே!