நகைக்கத் தக்க, முட்டாள்தனமான கேள்வி: கடுமையாக உழைக்கும்போது விபத்துகளால் இறக்கும் பட்டாசுத் தொழிலாளர், மீனவர், கட்டிடத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வெறும் ஒன்றிரண்டு லட்சம் தான் நிவாரணம், ஆனால் வெறும் போதைக்காக திராவிடக் கள்ளச்சாராயம் குடித்து இறந்த குற்றவாளிகளுக்கு பத்து லட்சமா? இது நியாயமா?

June 23, 2024

சர்வ நிச்சயமாக, தெள்ளத் தெளிவாக – இது நியாயம் தான்!

இன்னொரு விஷயம்: தெருப்பொறுக்கி #திராவிடமாடல் எனும் வடிகட்டின அயோக்கியத்தனத்தைக் கொஞ்சமேனும் அறிந்தவர்கள், இப்படியொரு கேள்வியைக் கேட்கவே மாட்டார்கள்! திராவிடக் கள்ளச் சாராயத்தின் பொருளாதாரப் பின்புலங்களை அறிந்தவர்கள், வெட்டிப் பிலாக்கணம் வைக்கவே மாட்டார்கள்!

ஆனாலும், விவரம் தெரிந்தவர்களும்கூட இப்படி வெள்ளந்தியாக அறச்சீற்றாவேசக் கேள்வியாக இதனை வைக்கிறார்கள். சிர்ப்புசிர்ப்பா வர்ருதுபா. :-(

மிகுந்த பரிவுடன் சொல்கிறேன்: இவர்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக இருக்கலாம், இளகியமனம் கொண்டவர்களாகவும் இருக்கலாம் – ஆனால், என்ன செய்ய – அவர்கள் வடிகட்டிய முட்டாக்கூவான்கள். வேறென்ன சொல்ல.

புரிந்துகொள்ளுங்கள் ஐயன்மீர்!

உப்புக் காற்று நசநசப்பில் உயிரைப் பணயம் வைத்து இரவெல்லாமும் மீன்பிடித்து, பொருளீட்டுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடுகிறார்கள் மீனவர்கள். மாற்றுக் கருத்து இல்லை.

ஆபத்து விளைவிக்கக் கூடும் வெடியுப்புகளோடு அன்றாடங்காய்ச்சி பட்டாசுத் தொழிலாளர்கள் வாடுகிறார்கள். உண்மைதான்.

உடலை மிகவும் வருத்திக்கொண்டு கடும் பாரங்களைச் சுமந்துகொண்டு பணி செய்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்கள். ஒப்புக் கொள்கிறேன்.

…இவர்களைப் போன்றவர்களை உளமாறப் போற்றுகிறேன். ஏனெனில், இவர்கள் நேர்மையாக, உழைத்துச் சம்பாதிப்பவர்கள். கம்பீரமாக இருப்பவர்கள். 

ஆகவே அதிராவிடர்கள். நான்-திராவிடியன்ஸ்.

ஆனால் இவர்களுடைய தொழில்களின் வழி, இவர்களுடைய செலவினங்களால், நேரடியாக – நம் திராவிடன்கள் அவர்கள்தம் குண்டிகொழுத்த குடும்பப் பொறுக்கிகள் பலன் பெறுகிறார்களா?

இல்லை.

அவர்கள் சார்ந்திருக்கும் தொழில் முதலாளிகள் வழியாக, தொழிலாளர் சங்கங்கள் வழியாக மாதா மாதம் திராவிடத் தலைவக் கொள்ளைக்கார முதலைகள் கையூட்டோதிகையூட்டு பெறுகிறார்களா?

இல்லவே இல்லை.

இந்த நேர்மையான தொழிலாளர்களால் என்னதான் நம் செல்ல திராவிடப்பொறுக்கிகளுக்கு என்னதான் லாபம், சொல்லுங்கள்?

இவர்களால், நம் ஊடகப் பேடிகளுக்காவது பைசா பிரயோஜனம் உண்டா? நடிகக் கோமாளிகளுக்கோ கம்மீனிஸ்களுக்கோ அறிவுஜீவிக் கோமகன்களுக்கோ ப்ரொட்டெஸ்ட்வாலா ரௌடிகளுக்கோ ஒரு சுக்குப் பயனுண்டா?

இல்லவே இல்லையே!

காவல்துறையினருக்கும் ரெவென்யு அதிகாரிகளுக்கும், உள்ளூர் திராவிட ரௌடிகளுக்கும் ஏதாவது நேரடியாக, மாதாமாதம் வருமான உபயோகமுண்டா? 

இல்லையே!

அந்தத் தொழிலாளர்கள், கும்பல்கும்பலாக,  உடனடி ஆதாயம் (பணம், இலவசப் பரிசுகள் கொட்டகையில் தண்டக்கருமாந்திர உதை சினிமா இத்தியாதிகள்) கிடைத்தால் ஓட்டுப் போடும் மந்தைகளா?

அப்படித் தெரியவில்லையே! அவர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு எனப் பெரும்பாலும் கடமையே கண்ணாயினராக இருப்பவர்தாமே! உழைத்துப் பொருளீட்டுபவர்கள் தாமே!

மாறாக.

‘அன்றாடங்காய்ச்சி’ விஷச் சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளச் சாராயம் விற்பவர்கள், குடிப்பவர்கள் – இவர்கள் அனைவர் மூலமாகவும் மாதாமாதம், ஏன் ஒவ்வொரு நாளும் – திராவிடப் பொறுக்கிகளிலிருந்து காவல்-ஏவல் துறைகள் ஊடாக, அனைவருக்கும் பெருங்கொள்ளைப் பணம் கிடைக்கிறதே!

கள்ளச் சாராயம் ஒரு பக்கம் என்றால் அரசுச் சாராயம் வேறு, ஊழலின் மகாமகோ ஊற்றுக் கண்.

இவற்றின் மூலம் கோடிகோடியாகப் பணம் கொழுக்கிறதே நம் திராவிடன்களுக்கு!

-00-0-0-0-00-

இதனால்தான் சொல்கிறேன்.

ஒரு குடிகாரக் கூவான் செத்தால், அவன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கக் கூட திராவிடனால் முடியும்.

ஏனெனில், மேன்மேலும் இந்த முட்டாட்கள் குடித்துக் கொண்டே இருந்தால்தானே, அவர்களை அப்படி ஊக்கப் படுத்தினால் தானே திராவிடன்களுக்கு பெருங்கொள்ளைப் பணம் வந்து சேரமுடியும்? இல்லாவிட்டால் அவர்கள் குடிப்பது குறைந்தால் திராவிடச் சாராயத்தைக் காய்ச்சும் திராவிடக் களப்பணியாளர்களும் நொந்துபோவார்களே! அவன்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடுமே….

ஆகவே புரிந்து கொள்ளுங்கள். திராவிடன்கள் கொடுக்கும் இந்தப் பிச்சைப் பணம், அவர்களுடைய  கொள்ளை வருமானத்துக்கு ஒரு இன்ஷூரன்ஸ் ப்ரிமியம் மாதிரி…

மேலும் இந்த திராவிடப் பொறுக்கிகள் தம் சொந்தப் பணத்தையா இந்த ப்ரிமியத்துக்காக அள்ளிக் கொடுக்கிறான்கள், சொல்லுங்கள்…

என்னைப் பொறுத்தவரை, நேர்மையாக உழைப்பவர்கள் – உழைக்கும்போதே தங்கள் பக்கம் ஒரு தவறும் இல்லாதபோதே இறந்தாலும், அதற்கு திராவிட அரசே காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பைசா கொடுக்கத் தேவையில்லை.

ஏனெனில் அவர்களால் திராவிடன்களுக்கு பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை.

-00-0-0-0-00-

இப்போதாவது விஷயத்தின் சூட்சுமம் புரிந்ததா?

தயை செய்து இனிமேலாவது திராவிட மாடலைப் புரிந்து கொள்ளுங்கள், இல்லையேல் அவன்கள் புரிந்து கொல்வான்கள். கபர்தார்!

நன்றி!

One Response to “நகைக்கத் தக்க, முட்டாள்தனமான கேள்வி: கடுமையாக உழைக்கும்போது விபத்துகளால் இறக்கும் பட்டாசுத் தொழிலாளர், மீனவர், கட்டிடத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வெறும் ஒன்றிரண்டு லட்சம் தான் நிவாரணம், ஆனால் வெறும் போதைக்காக திராவிடக் கள்ளச்சாராயம் குடித்து இறந்த குற்றவாளிகளுக்கு பத்து லட்சமா? இது நியாயமா?”

  1. Paramasivam Natarajan's avatar Paramasivam Natarajan Says:

    Absolutely correct Ram!

    Sivam


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *