திமுக தன்னுடைய சாராயம், நீட், அதிமுக ஊழல் இன்னபிற குறித்த தேர்தல் வாக்குறுதிகளைத் துப்புரவாக நிறைவேற்றினாலும் சங்கிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்!
March 13, 2024
இது நியாயமா?
திமுகவினருக்கும் தமிழ்மொழிக்கும் அம்மாவாசை-அப்துல்காதர் போன்ற தொடர்பு மட்டுமே உண்டு – குறிப்பாக ல ள ழ போன்ற தமிழ்ச் சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடியவே முடியாது என்பதை அறிந்த சங்கிகள் இப்படி அபாண்டமாக கீபல்ஸ் பிரச்சாரம் செய்யலாமா?
திமுகவினர் 2021 தேர்தலின்போது என்ன சொன்னார்கள் என நம்புகிறோம்?
நீட் தேர்வை ஒழிப்போம்!
டாஸ்மாக் சாராயக் கடைகளை ஒழிப்போம்!
ஊழல் அதிமுகவினரை ஓழிப்போம்!
பிரச்சினை என்னவென்றால் – அவற்றில் பிரச்சினைக்குரிய ழ இருக்கிறது.
ஆகவே அவர்கள் அதனை ள அல்லது ல எனத்தான் உச்சரித்தார்கள்.
அதாவது இப்படியாக:
நீட் தேர்வை ஒளிப்போம்! (அல்லது ஒலிப்போம்!)
டாஸ்மாக் சாராயக் கடைகளை ஒளிப்போம்! (அல்லது ஒலிப்போம்!)ஊழல் அதிமுகவினரை ஒளிப்போம்! (அல்லது ஒலிப்போம்!)
ஆனால் நாம் நம்முடைய அரைகுறைப் புரிதலில் அவர்கள் ழ-வைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என நினைத்து அப்போது லூஸ்லவுட்டுவிட்டு இப்போது பொங்குகிறோம்! தேவையா??
உண்மை என்னவென்றால் அவர்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். பொய் பேசவேயில்லை அக்குசும்பர்கள்.
அந்தப் ‘பிரச்சினை’களை அவர்கள் ஒளிக்கிறார்கள் அல்லது சும்மா ஸவுண்டு வுட்டுக்கினு வெட்டிப்பேச்சு ஒலிக்கிறார்கள்!
அதாவது, அவர்கள் வாக்குறுதிகளை, அக்ஷரம் தவறாமல் நிறைவேற்றியிருக்கிறார்கள்!
அது மட்டுமா?
வாக்குறுதிகளில் இல்லாத போதைப் பிரச்சினையையும் பெரிய அளவில் கட்சிக்கான கட்டுபாட்டுக் கடமை கண்ணியத்துடன் ஏற்படுத்தி வளர்க்கிறார்கள். தங்கள் குடும்பத்தையும் அப்படியாப்பட்ட மேன்மை தரும் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.
அடுத்த தடவை அவர்கள் வெற்றியை அதிகவிலை கொடுத்து வாங்கினால், போதைமருந்து பிரச்சினையையும் டோட்டலாக ஒளித்து விடுவார்கள் என, சர்வ நிச்சயமாக நம்பலாம்.
பெரியாரண்ணா கும்பல்கள் நமக்குத் தொடர்ந்து போடும் #திராவிடமாடல் நாமம் வால்க!
—

