இளம் இன்பநிதி உதைநிதி இசுடாலினாருக்கு பாரதரத்னா விருது!

February 13, 2024

உடையப் போகும் செய்தி…

1 சூன் 2024:

2024 மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் 500+ எம்பிக்களுக்கு மேல் பெற்று வெற்றி வாகை சூடிய இண்டி கூட்டணியின் சீரிளமைசார் அரசு இன்றைய தினம் அமைந்து பாரதப் பிரதமராக முட்டுவேல் கருணாநிதி இசுடாலினாரும், துணைப் பிரதமராக மமதா பேனர்ஜியாரும் பொறுப்பேற்று நாட்டையே திராவிடமாடல் பாதையில் ஏகோபித்துச் செலுத்திக்கொண்டு பாய்ந்து முன்னேறப் போவதை நாம் அறிவோம்.

இப்பேரின்பப் பெருவிழாவைத் தொடர்ந்து, எல்லாம் வல்ல பேரீசன் சபரீசன் திருவருளால், அதே நாளில், திருமிகு உதைநிதி இசுடாலினார் தமிழக முதலையமைச்சராகவும் பொறுப்பேற்று திராவிடமாடல் செங்கோல் கன்னக்கோல் ஓச்சிவர ஓடோடி வருவதையும் நாம் மட்டமல்ல, இப்பூவுலகமே அறியும்!

முதல் தேர்தல் வாக்குறுதி நிறைவேறியது!

ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும்: இந்தியாவை திராவிடியாவாக்குவோம் என்பது இண்டி கொள்கைக் கூட்டணியின் நான்காவது வாக்குறுதிதான்.

அப்படியானால் முதல் வாக்குறுதி என்ன?

…முன்னதாக – புதிய திராவிடியாவை நோக்கி அறைகூவிச் சூளுரைக்கும் இளவல் இன்பநிதிக்கு பாரதரத்னா வாங்கிக் கொடுப்போம், என்ன செலவானாலும் பரவாயில்லை…

…எனத் துரைமுருகன், ஆராசா, டிஆர்பாலு, கிவீரமணி, சுபவீரபாண்டியன், நடிகர் வடிவேலு, கமலகாசனார் போன்ற மாபெரும் திராவிடியா போராட்டத் தியாகித் தலைவர்கள் தொடர்ந்து சுயநலமற்று வற்புறுத்தினர்.

அதனை அடுத்து,  இண்டி கூட்டணி – பெருந்தன்மையுடன் அந்தக் கோரிக்கையை ஏற்று, அதனையே முதல் வாக்குறுதியாக வைத்துக் கொண்டது. ஏனெனில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அது உதவும் எனும் அசைக்க முடியாத உண்மையை அது கண்டுகொண்டது.

முக்கியமாக, இண்டி கூட்டணி மத்திய ஆட்சி அமைத்தால், முதல் அரசாணைக் கையொப்பம் என்பது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகத்தான் இருக்கும் எனவும் பரப்புரை செய்யப்பட்டது.

பார்க்கப் போனால், இந்த வாக்குறுதியின் காரணமாகத்தான் இண்டி கூட்டணி இந்திய அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்று சொன்னால் மிகையாகாது.

ஆகவே இது போர்க்கால ரீதியில் நிறைவேற்றப் பட்டதை நாம் மிகுந்த, அளவிலா மகிழ்ச்சியுடன் புரிந்து கொண்டு இறும்பூதடைவதுதான் முறை. விருதாவுக்கான விருது என்று கருதினாலும் சரியே!

இப்போது இரண்டாவது வாக்குறுதியைப் பார்க்கலாம்:

கீழ்கண்ட  சான்றோர் பெருமக்களுக்கு அவர்களுக்கேற்றாற்போல உரிய மரியாதையும் விருதுகளும் கொடுத்து அவர்களுடைய பணிகளைப் போற்றும் வகையில், அவர்கள் புகழ் பரப்பப்படும்:  துர்கா இசுடாலிர் அம்மையார், செந்தில் பாலாசியார், கிறிச்துகா உதைநிதி, ஆராசா, செல்வி, மாவீரர் சபரீசனார், ராசாத்தியம்மையார், கனிமொழி கருணாநிதி,  வேலுப்பிள்ளை பிரபாகரனார், சந்தனப்போராளி வீரப்பனார்.

மூன்றாம் வாக்குறுதி:

இண்டி கூட்டணி பொறுப்பேற்றவுடன் பாரதரத்னா விருது திராவிட முத்து எனப் பெயர் மாற்றம் செய்யப் படும். முதல் வாக்குறுதி நிறைவேற்றத்துக்குப் பின் கொடுக்கப்படும் அரசுரீதியான விருதுகளில் இருந்து பத்ம பாரத பரம போன்ற முன்னொட்டுகள் திராவிட என மாற்றப்படும்.

நான்காம் வாக்குறுதி:

அரசு சாசனத்திலிருக்கும் ‘இந்தியா தட் ஈச் பாரத்’ என்பது திராவிடியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாட்டிலும் உலகத்திலும். அமைதியும் சுபிட்சமும் நீடூழிப் பரவ ஆவன செய்யப்படும்.

நன்றி.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *