உதை ஸ்டாலினும் ஆப்பசைத்த குரங்கும் – புத்தம்புதிய நவீன ‘உலகத்தின் ஆதிக்குரங்கு செங்குரங்கு திராவிடக்குரங்கு’ செம்பதிப்பு
September 7, 2023
अव्यापारेषु व्यापारं यो नरः कर्तुमिच्छति ।
स एव निधनं यति कीलोत्पाटीव वानरः ॥
~~ எவனொருவன் தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் தலையிட முயல்கிறானோ, அவன் ஆப்பு அகற்ற முயற்சித்த குரங்கைப் போல, முடிவைச் சந்திக்கிறான்.
-0-0-0-0-
இது, அறிவழகர் உதை ஸ்டாலின் உதிர்த்த முத்துகள் குறித்த பதிவு. (ஆனால் எழுதியது, திரு வ மு முரளி, பொருள்புதிது தளக்காரர் – அவருடைய அனுமதியுடன் பிரசூரிக்கிறேன்)
#ஆப்பசைத்த_குரங்கு
‘கவர் பிளந்த மரத்துளையில் கால் வைத்துக் கொண்டு ஆப்பசைத்த குரங்கதனைப் போல’ அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறார் திமுகவின் இளவரசர் திரு. உதயநிதி ஸ்டாலின். கூடியிருந்த முட்டாள்களின் கரவொலியைப் பெறுவதற்காக, ‘சனாதனத்தை ஒழிப்போம்’ என்று உளறிவிட்டு, இப்போது, “நான் இந்து மதத்தை ஒழிப்பதாகச் சொல்லவில்லை” என்று பம்முகிறார்.
சனாதனம் என்றால் அவரது பார்வையில் இந்து மதத்தின் பிற்போக்குக் கருத்துகள். அதாவது பிராமணர்களை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் வர்ணாசிரம தர்மம். ஆனால், நாடு உழுவதும் சனாதனம் என்றால் எவ்வாறு கருதுகிறார்கள் என்ற சிந்தனை கொஞ்சமேனும் வேண்டாமா? சனாதனம் என்றால் உண்மையில் என்ன என்று கூறவோ, அதன் திரிபுகளை உதயநிதிக்கு விளக்கிச் சொல்லவோ திமுகவில் பகுத்தறிவுள்ள ஒரு அறிவாளி கூடவா இல்லை?
உதயநிதியின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பியவுடன், மரப்பிளவில் வால் சிக்கிக்கொண்ட குரங்கு போல கதறிக் கொண்டிருக்கின்றனர் திமுக ஆதரவாளர்கள். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்களே உதயநிதியின் பேச்சை ரசிக்கவில்லை. அவர்களுக்குத் தெரியும், இதன் பின்விளைவுகள் தேசிய அளவில் என்னவாகும் என்று. ஆனால், தமிழகத்தில் உள்ள முட்டாள்கள், இன்னமும் உதயநிதி தவறாக ஒன்றும் பேசிவிடவில்லை என்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். விநாசகாலே விபரீத புத்தி!
கலைஞர் என்ற அடைமொழியும் மு.கருணாநிதியும் ஒன்று தான் என்பது திமுகவின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் தெரியும். இது வட மாநிலங்களில் உள்ளவர்களுக்குத் தெரியாது. அதுபோல, சனாதனம் என்பதும் ஹிந்து மதம் என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள் என்பது திமுகவினருக்குத் தெரியாது. இப்போது தெரிந்துவிட்டதல்லவா? எனவே கம்யூனிஸ்ட்களின் மேடையில் ஏறி அறியாமல் பேசிய பேச்சின் அனர்த்தத்தை உணர வேண்டும்; அதற்காக உதயநிதி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தவறை உணர்பவனே மனிதன். அப்போது தான் அதைத் திருத்திக் கொள்ளவும், அனுபவ பாடம் மூலம் முன்னேறவும் முடியும்.
இந்த சர்ச்சையின் உச்சமாக, தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால்கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பிரபலங்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டுக்கு கடந்த செப். 6ஆம் தேதி எழுதியுள்ளனர். இவர்களில் 14 பேர் நீதிபதிகள், 130 பேர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் (20 பேர் தூதர்களாக இருந்தவர்கள்), 118 பேர் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
“தமிழக அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கருத்துகள் மறுக்க முடியாத வகையில் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்புப் பேச்சாக உள்ளது. பாரதத்தை ஒரு மதச்சார்பற்ற தேசமாகக் கருதும் இந்திய அரசியலமைப்பை இந்த வெறுப்புப் பேச்சு தாக்குகிறது….
“வெறுப்புப் பேச்சால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம். மாநில அரசு உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அதோடு தமிழகத்தை ஆட்சி செய்வோர் அவரது பேச்சை நியாயப்படுத்தி வருகின்றனர். எனவே உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இதனை விசாரிக்க வேண்டும்”
-என்று அவர்கள் இக்கடிதத்தில் கோரியுள்ளனர். இதன்மீது தலைமை நீதிபதி எடுக்கப்போகும் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
இதுபோன்ற சூழல்கள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. இதுகாலம் வரை, அறிவுஜீவிகள், முற்போக்குவாதிகள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களால் தூண்டப்பட்ட சிலர் தான் பாஜக உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு எதிராக, இவ்வாறு ஒன்றாகத் திரண்டு தலைமை நீதிபதியிடம் மனு அளிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது தேசத்தின் மனநிலை மாற்றம் காரணமாக, இந்தக் காட்சியும் மாறி இருக்கிறது.
இதற்குப் பின்னரும் உதயநிதி, “ஆமாம் நான் பேசியது சரிதான். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று பேசிக்கொண்டிருக்கிறார். இவர் பேசவில்லை, இவரது ‘ஜீன்’ பேசுகிறது.
இவரது பாட்டனார் திரு. மு.கருணாநிதி பேசாத பேச்சா? “தில்லை நடராஜரையும் சீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?” என்று மேடையில் பேசியவர் கருணாநிதி. ”ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏனுனக்கு தியாராசா?” என்று மேடையில் பாடியவர் அவர்.
”இந்து என்றால் திருடன் என்று பொருள்” என்று சொல்லிவிட்டு, அவ்வாறு வெளிநாட்டினர் யாரோ எழுதிய அகராதியில் இருப்பதாக அழிச்சாட்டியம் செய்தவரும் அவர்தான். தனது கட்சி எம்எல்ஏ ஒருவர் (கள்ளக்குறிச்சி ஆதிசங்கர்) நெற்றியில் வைத்திருந்த குங்குமத் திலகத்தைப் பார்த்து நெற்றியில் என்ன ரத்தம் வழிகிறதா என்று கேலி பேசியவரும் அவரே. ‘இந்துமதம் என்று ஒன்றே கிடையாது; இலங்கைக்கு பாலம் கட்டியதாக கூறப்படும் ராமன் எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தான்?” என்றெல்லாம் பகடி செய்தவரும் தான் அவர்.
ஆனால் அந்தக் காலம் வேறு. இன்று போலவே அன்றும் ஊடகங்களில் பெரும்பாலானவை திராவிட அடிவருடிகளாக இருந்தன. மக்களின் எதிர்ப்பு அப்போது பெரும் வினையாற்றவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல. உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குப் பதிலடியாக சன் டிவியைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரம் சமூக ஊடகங்களில் அதி தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் சன் டிடிஹெச் தட்டுகளை உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருக்கின்றன. இது உண்மையான ஜனநாயகம் மிகுந்த சமூக ஊடகங்களின் காலம்.
இன்றைய இளைஞர்கள், தொழில்நுட்பத்தின் உதவியுடன் திமுகவின் முகத்திரைகளைக் கிழித்து தோரணமாகத் தொங்க விடுகிறார்கள். எனவே முன்பு போல எதையாவது உளறிவிட்டு, ‘அப்படி நான் சொல்லவில்லை; நான் சொன்னதன் அர்த்தம் வேறு’ என்றெல்லாம் ஜகா வாங்க முடியாது. கிறிஸ்தவர்களின் விழாவில் பங்கேற்று “எனது மனைவி கிறிஸ்தவர். எனவே நானும் கிறிஸ்தவர்” என்று உதயநிதி அளித்த வாக்குமூலம் இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பகிரங்க ஊடக உலகில் எதையும் மறைக்கவோ, மறக்கச் செய்யவோ முடியாது.
இத்தனைக்குப் பிறகும், உதயநிதிக்கு வக்காலத்து வாங்குகிறார் அவரது தந்தையும் மாநில முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின். தான் மாநில மக்கள் அனைவருக்குமான முதல்வர் என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்றே தெரியவில்லை.
தமிழகத்தில் சுமார் 25 சதவிகிதம் வாழும் கிறிஸ்தவர்கள், கிறிப்டோ கிறிஸ்தவர்கள் (அரசு சலுகைக்காக ஹிந்துப் பெயரில் ஒளிந்திருக்கும் கிறிஸ்தவர்கள்), இஸ்லாமியர்கள் ஆகிய சிறுபான்மையினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் தேர்தலில் வென்று விடலாம் என்ற தெளிவான அரசியல் கணக்குடன் தான் மு.க.ஸ்டாலின் இயங்கி வருகிறார். இந்த மைனாரிட்டி 25 சதவிகிதத்துடன் கட்சி சார்பு ஓட்டுகள், ஜாதிரீதியாகப் பிளவுபடும் ஓட்டுகள், பாஜக எதிர்ப்பு ஓட்டுகள், கூட்டணி வலுவால் கிடைக்கும் ஓட்டுகளின் கூடுதல் துணை கொண்டு எளிதாக வென்று விடலாம் என்ற கணக்கின் அடிப்படையில் தான், திமுக முரண்டு பிடிக்கிறது. உதயநிதியின் இந்த அநாகரிகப் பேச்சை ஆதரித்தும், சனாதனத்தைக் கேவலப்படுத்தியும் சமூக ஊடகங்களில் எழுதுவோரில் பெரும்பகுதியினர் மைனாரிட்டி சமுதாயத்தினராக இருப்பதைக் காணும்போது, திமுகவின் தேர்தல் கணக்கு புரிகிறது.
ஆனால், காலம் மாறிவிட்டது என்பதை திரு. ஸ்டாலின் இன்னமும் உணரவில்லை. அவரது கால்களுக்குக் கீழே திராவிட நிலம் நழுவிக் கொண்டிருக்கிறது. அவரது தலைக்கு மேலே, அவரும் அவரது குடும்பத்தினரும் செய்த பாவங்களின் சுமை கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
’இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் பிற மாநிலங்களில் நடக்கும்போது அதில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் செல்கையில் இந்த வேறுபாட்டை உணர்வார். ”உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு எதிராக பாஜக அமைச்சர்கள் தீவிரமாக பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வேறு தனியே உத்தரவிட்டிருக்கிறார். இதில் இருந்தே இந்த சர்ச்சையின் அரசியல் தீவிரம் புலப்படுகிறது. உதயநிதி மீது நாடு முழுவதும் பல இடங்களில் வழக்குகள் பதிவாவது தனிக் கதை.
இதே தமிழகத்தின் சேலத்தில் 1968இல் ஸ்ரீராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தினர் தி.க. குண்டர்கள். விநாயகர் சிலைகளை நடு ரோட்டில் உடைத்து, அரசு ஆதரவுடன் தங்கள் பகுத்தறிவை அவர்கள் வெளிப்படுத்தி மார்தட்டியபோது பக்திமான்களான ஹிந்துக்கள் செய்வதறியாது மனம் புழுங்கினர்.
ராமாயணத்துக்கு எதிராக ’கீமாயணம்’ எழுதிப் படித்து மகிந்தார்கள் சில கிறுக்கர்கள். திமுக நிறுவனரான சி.என்.அண்ணாதுரையே, ‘கம்பரசம்’ என்ற பெயரில் ஆபாச நூல் எழுதினார். இவர்களது குலகுருவான (பெரியார் என்று திராவிட பக்தர்களால் அழைக்கப்படும்) திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வாழ்நாள் முழுவதும் ஹிந்து மதத்தையும் இந்திய நாட்டையும் பிராமணர்களையும் துவேஷித்தே வாழ்ந்து மறைந்தார்.
அவரது அடியொற்றி, ராமாயணத்துக்கு மாற்றாக புலவர் குழந்தை என்ற பிராமண வெறுப்பாளர் எழுதிய ‘ராவண காவியம்’ நூலை பள்ளிப் பாடமாக ஆக்கி மகிழ்ந்தார்கள் திமுகவினர்.
“ஆபாசத்தில் சிறந்தது மகாபாரதமா, ராமாயணமா?” என்று திகவினர் திமுக அரசின் ஒத்துழைப்புடன் 1989-90களில் தமிழகம் முழுவதும் பட்டிமன்றம் நடத்தினர்.
ஆவணி அவிட்ட நன்னாளில் பன்றிக்குப் பூணூல் அணிவிப்பது, தெருவில் செல்லும் பிராமணர்களின் குடுமியை அறுப்பது, பூணூலை அறுப்பது என்று, கடவுள் மறுப்பாளர்கள் என்ற பெயரில் தி.க. குண்டர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமா, நஞ்சமா? இவை அனைத்தும், இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுகவின் கூட்டாளிகளுக்குத் தெரியப்படுத்தப்படுத்தப்பட்டாலே போதும், திமுகவின் தேசிய அரசியல் அபிலாஷைகள் முடங்கிப்போகும்.
ஆனால், நிலைமையின் தீவிரத்தை உணராமல், இன்னமும் இனவெறுப்பு அடிப்படையில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும், உதயநிதியின் தவறை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவினரைக் காண்கையில், பரிதாபமாக இருக்கிறது. ஆப்பசைத்த குரங்குகளால் வேறென்ன செய்ய முடியும்?
இத்தனை பிரச்னைக்கும் காரணமான, சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை, இலக்கியப் பிரிவாகிய தமுகஎச அமைப்பினர், ஓரக்கண்களால் நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்க்கின்றனர். அவர்களுக்கென்ன, அடி வாங்குவது திமுகவின் இளவரசர் தானே?
வர்க்கபேதத்தின் அடிப்படையில், சமூகப் பொருளாதாரப் பார்வையுடன் அரசியல் நடத்த வேண்டிய இடதுசாரிகளின் வீழ்ச்சி, திமுகவின் வீழ்ச்சியை விட மோசமானது. பிராமணர்களிலும் அடுத்த வேளை சோற்றுக்கு ஏங்கும் பரம ஏழைகள் உண்டு; தலித்துகளிலும் செல்வந்தர்கள் உண்டு என்ற சிந்தனை இருந்திருந்தால், கம்யூனிஸ்ட்கள் தடம் புரண்டிருக்க மாட்டார்கள்.
இதே தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரின் இனவெறுப்பு அரசியலுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த திரு. பி.ராமமூர்த்தி மேடைதோறும் முழங்கினார். அவரது ‘ஆரிய மாயையா, திராவிட மாயையா? (விடுதலைப் போரில் திராவிட இயக்கம்)’ நூல் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல்.
அதேபோல, திராவிட இயக்கத்தினர் கம்ப ராமாயணத்தையும் மக்களின் பக்தியையும் கேவலப்படுத்தியது கண்டு பொறுக்க முடியாமல், ஊர் ஊராகச் சென்று கம்பன் கழக மேடைகளில் முழங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவரான திரு. ப.ஜீவானந்தம். திராவிட இயக்கத்தினரால் மறைக்கப்பட்ட மகாகவி பாரதியின் புகழைப் பரப்பியதிலும் ஜீவா முன்னின்றார்.
அத்தகைய அறிஞர்கள் தலைமை தாங்கிய தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று தி.க. அளவுக்குத் தரம் தாழ்ந்துபோய், ஒரு (ஹிந்து) மதத்தையும், ஒரு குறிப்பிட்ட (பிராமணர்) ஜாதியையும் ஒழிப்பதாகக் கூறி, சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திக் கொண்டிருப்பது காலத்தின் கோலம்.
சனாதன ஒழிப்பு என்றால் ஹிந்து மத ஒழிப்பல்ல என்று, அவர்களும் இப்போது வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (இவர்களின் தமுகஎச மேடையிலேயே சனாதன ஒழிப்பு என்பது இந்து மத ஒழிப்பு தான்” என்று நேர்மையாக விளக்கம் அளித்திருக்கிறார் தி.க. தலைவர் திரு. கி.வீரமணி. அவருக்கு நன்றி).
இத்தருணத்தில் ஒரே ஒரு வேண்டுகோள்: இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தங்கள் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, து.ராஜா ஆகியோரிடம் வலியுறுத்தி, “சனாதனத்தை ஒழிப்போம்” என்ற தீர்மானத்தை ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்ற தமிழக கம்யூனிஸ்ட்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்களின் விளக்கத்தை ஏற்கலாம்.
ஒரு சதவீதம் கூட வாக்குவங்கி இல்லாத இந்த கம்யூனிஸ்ட்களை நம்பி, அவர்கள் கொடுத்த மேடையில் நின்றுகொண்டு, தனக்கு விரிக்கப்பட்ட வலையை அறியாமல் உளறிக் கொட்டிவிட்டு, இப்போது பின்வாங்கவும் இயலாமல் தவிக்கிறார் திருவாளர் உதயநிதி.
இனிமேலேனும், இதுபோன்ற சமூகத்தைப் பிளவுபடுத்தும் நிகழ்வுகளைத் தவிர்த்து, இத்தகைய நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்து, நல்லாட்சிக்கான முயற்சிகளில் திரு. உதயநிதி ஸ்டாலின் கவனம் கொடுக்க வேண்டும். அதற்கான நல்ல புத்தியை உதயநிதியின் அன்னையார் வணங்கும் அதே ஹிந்து தெய்வங்கள் தான் அருள வேண்டும்.
-வ.மு.முரளி


September 7, 2023 at 22:56
I am appalled by the level of ignorance exhibited by Udayanidhi in this issue. He thinks he will be portrayed as a hero at the national stage. Equally appalled by his father’s backing him up. How he could have spoken about a matter that was defined 1000s of years ago in Vedic hymns, Ramayan and Mahabharat and which is believed to be one of the ways to attain heavenliness, without really understanding it. Secondly, the most abominable silly comparison of something being held noble by many Hindus with insects, virus etc…it talks a lot about his maturity. He needs to be tried in court. Period.
September 8, 2023 at 11:40
முன்னாள் நீதிபதிகள், தூதர்கள், அறிஞர்கள் பலர் கையொப்பமிட்டு தலைமை நீதிபதிக்கே கடிதம் எழுதி நான்கு நாட்கள் மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்கிடையில் அந்த கூமுட்டை கட்சியின் எம்.பி. மீண்டும் மோசமாக பேசியிருக்கிறார். மற்ற மதங்கள் என்றால் நீதி மன்றங்கள் தானே ஓடி வந்து நடவடிக்கை எடுப்பதும், அதுவே இந்து மதம் என்றால் கண்டுக்காமல் நழுவுவதும் தான் நீதிபோலும் !
September 30, 2023 at 05:53
Sir, I have posted excerpts in my Facebook page, duly acknowledging source and this blog.
October 1, 2023 at 12:52
Sire,
Nothing at the othisaivu.in (or the earlier othisaivu.wordpress.com) website is under any copyright. It is totally copyleft.
No attribution whatsoever is needed. Some folks have juat copied&pasted stuff from here, elsewhere without any acknowledgement. It is fine too. No hassles.
Thanks for sharing it though – if possible please give the link.