BREAKING NEWS: முதுவரசர் முக இசுடாலிர் முடிசூட்டு விழா!

December 13, 2022

“இளவரசர் முடிசூட்டு விழா!” எனக் கொண்டாடுகிறோம் நாம்…

…மாறாக, பொச்சரிப்பில் வாடும் மாற்றுக் கட்சியினர் நக்கல் செய்கிறார்கள்!

எங்கள் பட்டத்து இளவரசர் உதயநிதி இசுடாலிர் கோமகர் அமைச்சராகப் போகிறாராம். முடிசூட்டு விழா நடக்கப் போகிறதாம்! பொறாமையில் பொருமுகிறார்கள்.

ஹ்!

ட்டேய்!! இந்தவொரு நாள் முடிசூடும் விழாவுக்கே இப்படிக் கதறுகிறீர்களே!


எங்கள் நிரந்தரக் கருமுடித் தலைவர், முதுதலைவர் மூதரசர் இசுடாலிர், அனுதினமும் செய்யும் விஷயம் தானே இது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் எங்கேடா போய் முட்டிக் கொள்வீர்கள்?

ஒவ்வொரு நாளும் அரங்கேற்றப்படும் இந்த விழாவின் நாயகர் அவர் தானேடா!

நித்தியகருமுடிசூடிச் சோழனென்றால் அவர்தானே!

அவர் திருமுடிமேல் உதித்த உதயசூரியன் இளவலாகிய இவர்தான்! பொசுங்கி சாவுங்கடே!

முடிசூடா இளவரசருக்கு முடிசூட்டும் விழா நடக்கப் போகிறது! பர்னால் தடவுக்குங்கடே!

இவர்தாண்டே அண்ணன் உதய்ணாசூரியன்!

ஆக, ‘பொறாமையில் எரியாதீர்கள் பொச்சரிப்புப் பொறம்போக்குகளே’ என எங்கள் கருத்தியல் எதிரிகளிடம் கண்ணியமாகச் சவால் விட்டு, இளவரச-அரையையும் முதுவரச-அரையையும் வாழ்த்த வயதில்லாமல் வணங்கி மகிழும்…

யிவண், யிப்படிக்கு:

உடன்பருப்புகள்
நித்திய விக் ரமாதித்த திராவிடன் நற்பிணி மன்றம்

3 Responses to “BREAKING NEWS: முதுவரசர் முக இசுடாலிர் முடிசூட்டு விழா!”

  1. mukhilvannan's avatar mukhilvannan Says:

    Look ahead. The little prince is very keenly watching. He may step into his father’s shoes any time.


  2. If anyone conflates the very last image in the post, with that of Inbanidhi Stalin lad below, you are sadly mistaken. It was not intended so.

    I was stressing on the ‘Wig’ template rather than anything else. Say, like Wigramofathimayam a la Vikramourvashiyam of Kalidasa.

    Ha!

    inba the inbox

    OTOH, it appears to be a remarkable coincidence, wot? Inba is indeed in the Inbox. Yay!


Leave a Reply to mukhilvannan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *