அஞ்சலி + வீரவணக்கம்: ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் மரணத்தின் ஐந்தாமாண்டு நினைவேந்தல்

March 10, 2018

நேற்று திவசம். தகத்தகாய மாஜி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குஞ்சாமணிகளே!  பொன்னெழுத்துகளில் பொறித்துக் கொறிக்கப்படவேண்டிய இந்த வைர நாளை மறந்தேபோன எனக்கு மன்னிப்பு உண்டா? :-(

உங்களை நான் எப்படி மறக்க முடியும்?

உங்களுடைய அளப்பரிய பராக்கிரமங்களையும் நற்சேவைகளையும் களப்பணிகளையும் தமிழகம் மறக்கத்தான் கூடுமா?

ஐந்து வருடங்கள் முன்னால் உலகத்தைக் குலுக்கிய உங்கள் மகாமகோ அற்பப் போராட்டத்தின்போது – உங்கள் திருக்கைகளால் வீசப்பட்ட கல்லினால் தானே எங்கள் பள்ளிக்குழந்தை திரு அடி பெற்று, ரத்த தானம் கொடுத்து — உடனே எங்களால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு ஓட முடிந்தது?

உங்களுடைய ‘களப்பலி’ சாகும்வரை ஒரேஒருவேளை உண்ணாவிரத அறப் போராட்டத்திற்குப் பின் – தியாக பிரியாணி சாப்பிட்ட எச்சங்களை – பள்ளி வாசலில் நீங்கள் போட்ட குப்பைகூளங்களை அள்ளும் பாக்கியம், எங்களுக்கு, உங்களால்தானே கிடைத்தது?

உங்கள் அளப்பரிய தியாகத்தை, தன்னலம் பாரா போராட்டத்தை எப்படி உங்கள் தங்கத் தமிழகம் மறக்க முடியும்??

நாமெல்லாரும் மறந்தாலும், எப்படி அந்த ஸ்ரீலங்கா தமிழர்கள், உங்களின் மகாமகோ உதவிகளை மறக்க முடியும்???

ராஜபக்ஷவை ஐநா சபைகாரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தூக்கில் போட்டு விட்டார்களாமே!

‘தமிழ்’ ஈழமும் சந்தடிசாக்கில் உதித்து விட்டதாமே? என்னே நும் பராக்கிரமம்!

இதுவரை கமுக்கமாக ஒளிந்துகொண்டிருக்கும் அற்புத ஆளுமை மிக்க ஆனானப்பட்ட பிரபாகரனே திரும்ப உயிர்த்தெழுந்து வந்து மறுபடியும் திருப்பலிகள் கேட்கிறாராமே!

தன் முயற்சியில் தளர்ச்சியடையாத டெஸோ-வும் மூப்பர் கருணாநிதியின் உதவியுடன் மறுபடியும் முருங்கமரத்தில் ஏறிக்கொள்ளப் போகிறதாமே?

-0-0-0-0-0-0-0-

எல்லாப் புகழும் அந்நாள் ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் மாஜி குஞ்சாமணிகளுக்கே!

வளர்க உம் தொப்பை!

வால்க நும் வீரதீரம்!!

ஓங்குக ஸ்டூடென்ட் போராட்டம் + பிரியாணி விற்பனை.

-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள, திராவிடத் தமிழ் ஸ்டூடென்ட் பராக்கிரமத்தைப் பறைசாற்றும் ஆவணப் பதிவுகள்:

2 Responses to “அஞ்சலி + வீரவணக்கம்: ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் மரணத்தின் ஐந்தாமாண்டு நினைவேந்தல்”

  1. Unknown's avatar Anonymous Says:

    அஞ்சு வருஷத்தில சிலபஸ் எத்தனை தடவை மாறியாச்சு! நீங்க இன்னும் அப்டேட் ஆகலியே?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *