அஅஅஅஅஅ… ! – ஒரு பகீர் தொடர்!!

April 1, 2017

ண்ணன் ன்னக்கண்ணன் வர்களின் றிவியல்பூர்வமான லப்பரை றிவுரைகள் – இன்னொரு தவணை!

டாக்டர் அன்னக்கண்ணன் அவர்களின் படுஸீரியஸ்ஸான வினோத சிந்தனைகள் தொடர்ந்து ஆற்றொழுக்கு போல வந்துகொண்டேயிருக்கின்றன.  (மகாமகோ ஃபேஸ்புக்டிவிட்டர்வாட்ஸப் விஞ்ஞானிகள் (அல்லது) யேஸ்ஸுவே! பாவப்பட்ட என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்! :-(  09/02/2017)

…எப்படித்தான் இப்படி அதியுன்னத நிலையில் இருக்கிறாரோ இந்த மஹ்ஹான், அன்னக்கண்ணன் மஹ்ஹான்!  என் ஒண்ணரைக்கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. :-)

ஃபேஸ்புக் டிவிட்டர் வாட்ஸப் முதலிய நாடுகளில் மாக்களின் பேத்தாதரவு பெற்ற கோபால்பல்பொடிக்காரர் இவர்தானோ?

-0-0-0-0-0-0-

மீனவரைக் காப்பது எப்படி

….இராமேஸ்வரம் மீனவரை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என இலங்கை மறுத்துள்ளது. இந்திய அரசு இப்போது புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். தோட்டா என்ன வகை, துப்பாக்கி என்ன வகை, எவ்வளவு தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளது? எத்தனை மணிக்குச் சுட்டார்கள்? அப்போது கடலில் உலாவிய படகுகள் / கப்பல்களைப் புவியிடங்காட்டி மூலம் கண்டறிய முடியுமா? படகில் இவருடன் சென்றவர்கள், இவர் சுடப்படுவதற்கு முன், தொலைபேசியில் பேசியுள்ளார்; அதைக் கொண்டு அவரது படகு இருந்த இடம், அந்தப் பகுதியில் செயலில் இருந்த இதர உள்நாட்டு / வெளி நாட்டுச் செல்பேசிகள் / வாக்கி டாக்கிகள், செயற்கைக்கோள் தொலைபேசிகள், அதில் பகிரப்பட்ட செய்திகள்… எனப் பலவற்றையும் ஆராய வேண்டும். இதன் மூலம், உண்மை என்ன என அறிந்து, குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த முடியும்.

அத்துடன் உடனடியாக இந்தியப் படகுகள் அனைத்திலும் புவியிடங்காட்டியுடன் சிசிடிவி கேமராக்களையும் பொருத்த வேண்டும். இவற்றுக்கு மின் கலம் மூலம் மின்சாரம் வழங்கலாம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஏதுவாக, படகுகளில் தகடுகளைப் பொருத்த வேண்டும். மேலும் இந்தியக் கடல் எல்லையில் டிரோன்கள் எனப்படும் பறக்கும் கருவிகளில் நிழற்படக் கருவிகளைப் பொருத்தியும் கண்காணிக்க வேண்டும். எல்லா மீனவர் செல்பேசிகளிலும் SOS எனப்படும் அவசர உதவி பொத்தானைச் செயலாக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள், இந்தியக் கடல் எல்லையை நெருங்கும் பட்சத்தில், அவர்களைப் புவியிடங்காட்டி மூலம் கண்டறிந்து, எச்சரிக்க வேண்டும். இந்தியப் படகுகள் அனைத்திலும் இந்திய தேசியக் கொடியை, இருட்டிலும் ஒளிரும் வண்ணம் பறக்கவிட வேண்டும்.

http://www.twitlonger.com/show/n_1spmeno

மரக்கன்று நடுவது எப்படி

…பொறுப்புகளைக் கை கழுவுவது, இன்னொருவரைக் கை காட்டுவது, பல மட்டங்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வே. இதற்குத் தெளிவான திட்டமிடலும் பொறுப்புகளைப் பகிர்தலும் வலுவான தகவல் தொடர்பும் தேவை. இந்தச் சிக்கலைப் பொறுத்த வரை, மரக் கன்றை நடும் முன்பே, அதனைப் பராமரிக்கும் பொறுப்பினை ஒருவரிடமோ, ஒரு குழுவினரிடமோ ஒப்படைத்திருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். தெருவாசிகள், குடியிருப்பு வாசிகள், கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்கள்…. என மரக் கன்று நடப்படும் இடத்திற்கு ஏற்ப, பொறுப்பாளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவர் தொடர்ந்து கவனிக்க இயலாது எனில், வாரத்துக்கு ஒரு நாள் என எழுவரிடம் ஒப்படைக்கலாம். திங்கள் இவர், செவ்வாய் அவர் என வரிசை முறை அமைக்கலாம். இவர்கள் மரக் கன்றுக்கு நீர் பாய்ச்சுவது, வேலி அமைப்பது, பாதுகாப்பு அளிப்பது ஆகிய பணிகளைச் சுழற்சி முறையில் மேற்கொள்ளலாம்.

ஒப்புக்கொண்டபடி, பொறுப்பாளி ஒருவரால் இதை நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் இன்னொருவரிடம் இதை ஒப்படைக்கலாம். இன்னொருவர் கிடைக்கும் வரை, அவரே இதை நிறைவேற்ற வேண்டும். தண்ணீர், வேலி, உரம் உள்ளிட்ட உதவிகளுக்கு அவர் வனத் துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி உள்ளிட்ட துறைகளை அணுகலாம். குப்பையிலிருந்து உரம் தயாரித்து, நகர நிர்வாகமும் இவர்களுக்கு உதவலாம்.

இந்த மரக் கன்றுகளுக்கு எண் இட்டு, புவியிட அமைவைக் குறியிட்டு, இணையத்தில் பட்டியலிட்டு, ஒவ்வொரு நாளும் அதற்கு நீர் வார்த்த பிறகும் பாதுகாப்பை உறுதி செய்த பிறகும் அதை செல்பேசிச் செயலி வாயிலாக உறுதி செய்யலாம்.

நீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து, இவற்றுக்குத் திருப்பி விடலாம். அதுவும் கிடைக்காத இடங்கள் எனில், அங்கிருந்து அவற்றை வேறு இடங்களுக்குப் பெயர்த்து, வேறு பொறுப்பாளிகளிடம் ஒப்படைக்கலாம். பொறுப்பாளிகளே சரிவரக் கிடைக்காத நிலையில் மரக் கன்றுகளை நடுவதைத் தவிர்க்கலாம்.

ஒவ்வொரு மரக் கன்று நடும்போதும் இந்த நடைமுறையைக் கையாண்டால், பின்னர் அவை நன்முறையில் வளர்வதை உறுதி செய்ய முடியும். இந்த முறையில், வெறும் விளம்பரத்திற்காக மரக் கன்று நடுவதும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் இதைக் கையாளுவதும் தவிர்க்கப்படும்.

http://www.twitlonger.com/show/n_1splelf

-0-0-0-0-0-
அண்ணன் அன்னக்கண்ணன் அவர்கள் சொல்கிறார்:
…பொறுப்புகளைக் கை கழுவுவது, இன்னொருவரைக் கை காட்டுவது, பல மட்டங்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வே.

யோவ், நீர் மட்டும் – மற்றவர்கள் இதனைச் செய்யவேண்டும் அதனைச் செய்யவேண்டும் என அமர்க்களமாகப் பிறத்தியார் பக்கம் கைகாட்டலாமா?

நீர் எத்தனை முறை  ஜிபிஎஸ் கருவியை இடுப்பில் கட்டிக்கொண்டு, இரவிலும் ஓளிரும் இந்தியக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுக்கொண்டு, கட்டுமரத்தில் பாக் ஜலசந்திக்குச் சென்றிருக்கிறீர்?

எவ்வளவு ஆயிரக் கணக்கான மரங்களை நட்டு அவை நன்முறையில் வளர்வதை உறுதி செய்திருக்கிறீர்?

நல்ல அறிவுரைகள், நல்ல அறிவிலிகள்!

இப்டியே அறிவொர கொட்த்துக்கினே இர்ங்கோ! சரியா?

#நம்ப தமிழகம் நல்லா வெளங்கிரும்டா!

குறிப்பு: படுமோசமான கடுப்பில் இருக்கிறேன். என்னால் திராவிடக் கூவான்களைக் கூடத் தாங்கிக்கொள்ளமுடியும் போல; ஆனால்… … … சீமைக் கருவேலப் போராளி முட்டாக்கூவான்களுக்கு எதிராக, தரவுகளுடனான ஒரு பதிவு வந்துகொண்டிருக்கிறது, பராக் பராக்! :-(

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *