இவங்கதாண்டா என்னோட புள்ளைங்க!

March 26, 2016

என் குழந்தைகள் தொடர்பான இரண்டு சிறுவீடியோக்களைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். Yes. Unlike what I and others of my ilk think, there are major reasons for hope, and boundless optimism, YES!

-0-0-0-0-0-0-0-

இவர்கள் மேகங்களற்ற வானில் ஆகாச கங்கையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு, வளமான எதிர்காலத்தை நோக்கிக் குவியத்துடன் ஓடும்போது, நடைமுறைக் கற்களால் தடுக்கப்பட்டு வீழ்த்தப்படலாம். சிலபல பின்னடைவுகள் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் மீண்டெழுந்து உற்சாகத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வார்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை!

திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைச் சாக்கடையிலிருந்து (= குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும்) திமிறியெழுந்து ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் பல முன்னெடுப்பகளில் முனைந்து – நம் தமிழகத்தை, அயோக்கியத் திராவிடர்களிடமிருந்து காப்பாற்றும் என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை.

-0-0-0-0-0-0-0-0-

இடையன்சாவடி, எங்கள் பள்ளி (நானல்ல!) மகத்தான பணியாற்றிவரும் பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஒன்று. இப்பகுதிகளில் பொதுவாகவே, திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைகள் அமோகமாக வேரூன்றியிருப்பவை.

ஆகவே, இப்பகுதிகளில் எழும்பியிருக்கும் இந்த  ‘நம்மால் முடியும்‘ முன்னெடுப்பு முக்கியம் பெறுகிறது.

இக்குறும்படம் இது ஒரு வெறும் வெட்டி ‘ப்ரொமோ’ விளம்பரம் அல்ல; பலப்பல ஆண்டுகளாக, பலத்த உடல்/மனரீதியான வன்முறைகளை சாத்வீகமாகத் தொடர்ந்து எதிர்கொண்டு, சிறுதுளிகளாகச் சேகரம் செய்து குவியப்படுத்தப்பட்ட களப்பணிகளின் சில வெளிப்பாடுகளில் ஒன்று, உத்வேகம் தரக்கூடியதொன்று – அவ்வளவுதான்.

https://www.youtube.com/watch?v=WYbYfL-az88

தாமரை அமைப்பு – இது அறிதலுக்காகப் பலவகைகளில் அமைதியாகப் படாடோபமில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு தன்னார்வக் கோளாறு நிறுவனம். (இது ஒரு பிச்சைக்கார என்ஜிஓ அல்ல, மன்னிக்கவும்!)

http://www.youtube.com/watch?v=mPU8D5oT_lg

எதிர்காலம் நம்மை விடுதலை செய்யும். ஆமென்.

-0-0-0-0-0-0-0-0-

… An outer activity as well as an inner change is needed and it must be at once a spiritual, cultural, educational, social and economical action …
— Sri Aurobindo
குறிப்பு: இந்த குறும்படங்களில் உள்ள பல இளைஞர்கள்/குழந்தைகள் என்  மாணவமாணவிமணிகள். ஆனால், இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதில், இந்த முன்னெடுப்புகளின் இக்காலச் செயல்பாடுகளில், எனக்கு ஒரு நேரடிப்பங்குமில்லை. இவற்றை ஒரு தன்னார்வத் தற்பெருமைக் கோளாறு சார்ந்த நெகிழ்ச்சியினால் பகிர்ந்திருக்கிறேன்.

நன்றி.

One Response to “இவங்கதாண்டா என்னோட புள்ளைங்க!”

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    தாமரை அமைப்பிற்கு வாழ்த்துக்கள். ஆரோவில் பற்றி ஒரு எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தேன் இதுவரை. வீடியோ சிந்திக்க வைத்துள்ளது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *