ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆகவே நானும்…

November 28, 2015

…இந்தியாவை விட்டு வெளியே போய்விடலாம் என்று நினைக்கிறேன். அந்த மும்முரத்தில் இருந்ததனால்தான் கடந்த பலவாரங்களாக ஒரு எழவு பதிவும் எழுதவேயில்லை! :-(

எப்படியாவது இந்த எழவெடுத்த, சகிப்புத் தன்மையேயற்ற இந்தியாவை விட்டுவிட்டு ஓடிப்போய் அமெரிக்காவே கோயிந்தா (அல்லது யேஸ்ஸூ அல்லது அல்லா; எனது சர்வமதச் சார்பின்மையைக் காட்டிக்கொண்டு கூத்தாடவேண்டுமல்லவா?) என நிபந்தனையற்றுச் சரணாகதி அடைந்துவிட்டுதான் அடுத்த வேலை. மன்னிக்கவும்.

… ஆனால், அதற்கு முன்னால் இரண்டு ஸீன்களில் ஒரே கந்தறகோளக் கதை!  நானே எழுதி நடித்து டைரடக்கரும் செய்த என் சொந்தக் கதை…  வெறுமனே நான் ஸீன் போடுவதாக மட்டும் நினைத்துக் கொண்டு விடாதீர்கள், சரியா?

இரண்டையுமே கொஞ்சம்போல திருவிளையாடல் தருமி சொல்வது/புலம்புவது மாதிரி படித்துக்கொள்ளவும்.

-0-0-0-0-0-0-0-0-

ஸீன்#1 டேக்#2

நான் தாண்டா கான், ஆமிர் கான்!

ஐயகோ! என் முட்டாள் தனத்தையும், உளறிக்கொட்டலையும் பொறுத்துக்கொள்ளவே மாட்டேனென்கிறார்களே, இந்த அற்ப இந்தியப் பதர்கள்! கரித்துக் கொட்டுகிறார்களே!

ஐந்து நிமிட பிராபல்யத்துக்காக, புகழுக்காக நான் சொல்வதையெல்லாம் படு ஸீரியஸாக எடுத்துக்கொண்டு என்னை வறுத்தெடுக்கிறார்களே! எனக்கு வெறுத்துவிட்டது. :-(

நான் நினைப்பதையெல்லாம் சொல்லமுடியாத அளவுக்கு மதச்சார்பின்மையுடன், அரசியல்சராசரித்தனத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தாலும் — என்னை ஏதாவது வீராவேசமாகச் சொல்ல வைத்து, ஏடாகூடமாக அதனை மாற்றி, திரியோதிரி என்று திரித்துத் திருத்தல்வாதம் செய்து என்னுடைய சொந்த முகத்தில் வெளிச்சம் பாய்ச்சி வெளிக்காட்டுவதையே தங்கள் வேலையாகக் கருதுகின்றார்களே!

நானுண்டு என்  வேலையுண்டு என என் சொந்தக் களப்பணிகளால், இந்திய மக்கள் உய் உய் என உய்விக்கவேண்டும் என்ற ஒரேயொரு உந்துதலை மட்டுமே காரணமாகக் கொண்டு பலவிதமான கோமாளி வேடங்களில் தொடர்ந்து நடித்துவந்தாலும், திடீரெக்ஸ் சமூக முன்னேற்றத்திற்கு என மீசையை மழித்துக்கொண்டு உழையோவுழை என உழைத்தாலும், என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்களே!

நடிப்பு என்கிற ஊரிலேயே நான் பிறக்காவிட்டாலும் – காமிரா முன்னால் நான் பேசுவதெல்லாம் என் நடிப்பு முயற்சிகளில் ஒன்றுதான் என்பதையும் உணரவே மாட்டேனென்கிறார்களே!

எண்ணற்ற அற்ப அரைகுறை படங்களை நான் தொடர்ந்து மானாவாரியாக எடுத்து, கொள்ளை லாபம் கண்டாலும் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது என்பது – பிகெ படத்தை எடுத்து, அதில் ஹிந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்ததுதான்.  சுமார் 300ச் சொச்சம் கோடி வருமானமும் அதன் மூலமாகப் பார்த்தேன், என்பது ஒரு சோகமாக சகிப்புத் தன்மையற்ற கதை! ஏனெனில் என்னுடைய கந்தறகோளத்திற்காக ஹிந்துக்கள் எவரும் மகாமகோ போராட்டம் செய்து, என் படத்தை எரித்து, என்னையும் எரித்து என்றெல்லாம் நடிக்கவேயில்லை. ஏனெனில் பொதுவாக சராசரி இந்தியர்களுக்கு நடிப்பென்பதே வராது –  நடிப்பென்றால் என்னவென்றும் தெரியாது.

என்ன சொல்லவருகிறேன் என்றால் — என்னைப் போன்ற அரைகுறைகளின் மீதான அவர்களுடைய சகிப்புத் தன்மை சிலபல வருடங்கள் முன், மிகவும் அதிகமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் இப்போதெல்லாம் திடீரென்று என்னைச் சரியாக நடிக்கவேண்டும் என்றெல்லாம் சகிப்புத் தன்மையில்லாமல் சொன்னால் – அவர்களுக்கு என்னுடைய நடிப்புத் திறமை பற்றி ஒரு மசுறும் தெரியாதென்றுதானே பொருள்?

 

நான் போடாத விதம்விதமான வேடமா?  அதற்கு இரு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கே கொடுக்கிறேன், சரியா?

1. மார்ச் 1, 2005 அன்று – வெளியிட்ட அறிக்கையில்   நரேந்திர மோதியைக் கண்டமேனிக்கும் கொலைகாரன் என்றெல்லாம் திட்டி, ஹிட்லருடன் தொடர்பு படுத்தியெல்லாம் ஆனந்தமாக வீராவேச, தர்மாவேச பிரகடனங்களை வெளியிட்டோம். இனப் படுகொலைகளுக்கு எதிரான எங்கள் அறச்சீற்றத்தை அப்படியொரு நடிகத் தனத்துடன் வெளியிட்டோம்!

இந்த அறிக்கையில் முதல் கையெழுத்தே அடியேனுடையதுதான், சரி பார்த்துக் கொள்ளுங்கள்! (=Text of citizens statement re the Indian Prime minister’s comments in the Rajya Sabha following refusal of US Visa to Narendra Modi)

2. ஆனால், ஜூன் 23, 2014 அன்று என்னுடைய நடிப்புகளிலேயே தலையாயதான ‘ஸத்யமேவ ஜயதே’ தொலைக்காட்சித் தொடரில் தொடர்பாக, அதன் டிஆர்பி எண்ணிக்கைகளை அதிகப்படுத்தும் அறம் செறிந்த கமுக்கமான எண்ணத்துடன் பிரதமர் நரேந்திர மோதியைப் பார்க்கச் சென்றேன். அப்போது அவரிடம் கைகுலுக்கி, அவரை மரியாதைக்குரியவர் என்றெல்லாம் பேசி அறிக்கையையும் ட்வீட்டுகளையும் மானாவாரியாக வெளியிட்டேன்…

வேண்டுமானால், ஒரு போலிச் சிரிப்புடன்  நான் மோதிக்கு கைகொடுப்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்… (= Aamir Khan meets Modi)

எனக்கு என் பைசா முக்கியண்டே!

 

ஆனால் – தயவுசெய்து ஏடாகூடமாக – தாவூத் இப்ரஹீமின் குண்டர் படைகளுக்கு, மதச் சார்பின்மையுடன், மற்றெந்த மும்பய் நடிகக் கோமாளியையும் போலவே, வருடாந்திரக் கப்பம் கட்டுவதைச் சுட்டிக் காட்டாதீர்கள்!  நான் தொடர்ந்து அறச்சீற்ற அரைவேக்காட்டுப் படங்களை எடுப்பது இந்தியாவிற்கு மகாமகோ அவசியம் என்பதை உணர்ந்துதான், நான் உயிருடன் இருந்தால்தான் படமெடுக்க முடியும் என்பதால் தான், என்னுடைய இந்த மகத்தான, மகாமகோ தைரியமான சமூக சேவையைச் செய்கிறேன். ஷைக் தாவூத் அவர்களும் எங்கள் பணத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது மும்பய் மாநகரில் வெடிகுண்டு வெடிக்கிறார். என்னுடைய திரைப்படக் காமெடிகளுக்கு அவருடைய நிஜமான ட்ரேஜடிகள் பர்த்தியாகி விடுகின்றன பாருங்கள்!

இன்னொன்று: நான் என் பலப்பல மேல்/கீழ் வருமானங்களுக்கெல்லாம் தர்மரீதியாக வருமானவரியை ஒரு பைசா பிசகாமல் கட்டுகிறேன் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். தேவையற்று என் இக்கால ஆடிட்டர்களின் முற்கால நண்பர்களுடன், அக்கால ஸீனியர்களுடன் பேசவேண்டாம்.  அவர்கள்,  நான் வருமானவரி ஏய்ப்பதாகச் சொன்னால் அதை நம்பவே வேண்டாம்!  ஏனெனில் – நான்தாண்டே நேர்மையின் சிகரம்! ஏனெனில் என் கொள்கையே ‘என் சொந்தச் சொத்யமேவ ஜயதே!’

கீழ்கண்டவையெல்லாம் என் எதிர்காலத் திட்டங்கள்….

அடுத்து இஸ்லாமிய நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து ஒரு முழ நீளப் படத்தை எடுத்து என்னுடைய ஹாஜ் பயணத்தின் போது ஸவுதி அரேபியாவில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.  தமிழகத்தில் உங்களுடைய கவிஞர் ராக்ஷஸபுத்திரி இதனை வெளியிடும் உரிமையை வாங்கிக் கொண்டிருக்கிறார்!

அதன் பின்னர் பௌத்தர்களைக் கிண்டல் செய்து, ஸ்ரீலங்காவில் படம் ஒன்றை வெளியிடப் போகிறேன்; பௌத்தரான அம்பேட்கரையும் அதில் வாருவாரு என்று வாரப் போகிறேன். ஜனதாவிமுக்தி பெராமுன ஆட்கள் அதனை அன்புடன் ஸ்ரீலங்காவில் வெளியிடப் போகிறார்கள்! தமிழ் நாட்டில் உங்களுடைய செல்லமான மருத்துவர் ராமதாசு அவர்கள்தாம் இதனை வெளியிடப் போகிறார்!

அதன்பின் யேஸ்ஸூவைப் பற்றிய கிண்டல் படம்… இதை போப் அவர்களே தன் திருக்கையால் வெளியிடவும் ஆவன செய்துகொண்டிருக்கிறேன்… … …

மேலதிகமாக – பயங்கர கிண்டலுடன் கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றையும், திருமணத்திற்கு அப்பாற்பட்ட அவருடைய ஸெக் ஸ் உறவுகள் பற்றியும், மாவோ தன் பல்லைத் தேய்க்காததைப் பற்றியும் அவருடைய வைப்பாட்டிகளுடன் அவருக்கான உறவைப் பற்றியும்  (எல்லாம் தொழில்முறை உறவுகள் தானே! வக்கிர வர்க்க உறவுகள்தாமே!!) ஒரு முழு நீள வர்க்கச்சுவை ஆவணக் கோமணப் படத்தை எடுப்பதாகவும் உத்தேசம்… இதனை தமிழ் நாட்டில் வெளியிட ஆவன செய்யப் போவது தமிழகத்தின் வினவு சொந்தங்கள்… அவர்கள்தாம் எங்கும் உரிமை எதற்கும் உரிமை என உரியடி உத்சவங்கள் பலவற்றை நடத்தி வெற்று கண்டவர்கள் ஆயிற்றே?

… ஹாஹ்ஹாஹ்ஹா!

அய்யோ பாவம்! என்னை நம்பி விட்டீர்களா? சும்மனாச்சிக்கும் சொன்னேன்… எனக்கு அவ்வளவு தைரியமெல்லாம் இல்லை. என் கொட்டைகளில் விந்து குறைவாக இருக்கிறது. என் முதுகெலும்பையும் பத்திரமாக ஸ்விஸ் வங்கியில் ஸேஃப் டெபாஸிட் லாக்கரில் வைத்து விட்டேன் வேறு… ஆகவே, எதையெல்லாம் பாதுகாப்பாகக் கிண்டல் செய்யமுடியுமோ, அதை மட்டுமேதான் செய்வேன்… மற்றபடி என் அனைத்து ஓட்டைகளையும் மூடிக்கொண்டு அவ்வப்போது அறச்சீற்ற மொய் வைப்பதற்காகக் குய்யோ முறையோவென்று கூச்சலிடுவேன். எனக்கு என் சகிப்புத்தன்மை முக்கியம்.

…. ஏனெனில்… நான் எப்போதுமே நடிகன் தாண்டா! ங்கொம்மாள

ஆம். இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது… வேறு வழியேயில்லை. அமெரிக்கா போய் ஸெட்டில் ஆகி விடவேண்டியதுதான்.

ஏனெனில், எனக்குச் செல்லமான இஸ்லாமிய நாடுகளின் சகிப்புத்தன்மை கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. அவற்றுக்குச் சென்றால், அந்த நாட்டுத் தலைவர்களை ஹிட்லருடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு அவர்கள் அப்பழுக்கற்றவர்கள். என்னால் கேலி செய்யப்படுமளவுக்கு  அவர்களுக்குத் தெகிர்யமில்லை.  மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

ஆமிர்கான் நிஜ வாழ்வில் நல்ல நடிகர்; ஆனால் அவருக்குத் திரைப்படங்களில் நடிக்க வராது. அவர் ரொம்பவும் சப்பை. ஹஹ்ஹ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (யுவகிருஷ்ணா ஆசிரியராக இருக்கும் ‘விடலை’ பத்திரிக்கைக்குப் பிரத்தியேகமாக அளித்த பேட்டியிலிருந்து)

-0-0-0-0-0-0-0-

ஸீன்#2 டேக்#2 – – இது தகவல்தொழில்நுட்ப(!)  தட்டச்சு குமாஸ்தா எடிஷன் ->> அடுத்த சகிப்புத் தன்மையற்ற பதிவு.

(இதில் – என்னுடைய புதிய மகாமகோ பேராசான் மேதகு ‘அமெரிக்க’ அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பற்றி சகிப்புத் தன்மையற்று எழுதப் போவதாகப் பரப்பப்படும் வதந்திதகளை நம்பாதீர்கள். அவை வதந்திகள் அல்ல!)

7 Responses to “ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆகவே நானும்…”

  1. Thangam.M's avatar Thangam.M Says:

    This is having fun with satire as others

  2. ravi's avatar ravi Says:

    என்ன நைனா !!! கடலூராண்ட ஒரே தண்ணியாமே !!!
    புது பேப்பர் சோக்கா கீது !!
    பழைய பேப்பரை நானும் எத்தினி தபா தான் படிக்கிறது ??


  3. பல பல முகங்களில் ஒளிந்துள்ள ஆர்எஸ்எஸ் முகமூடிகளில் ஒன்று.

  4. gopi's avatar gopi Says:

    https://www.youtube.com/watch?v=mn-WHyg-_3k i aint seen nobody condemning this cowards.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *