என்னது? தமிழர்கள்தாம்  இரும்புக் காலத்தை ஆரம்பித்து வைத்தார்களா?? (மீண்டும் பறவைக்கோன் முடிவிலாக்கறுப்பனார், திருட்டுப் பொறுக்கித் திராவிடத்தின் முடிவிலாப் புரட்டுகள்)

February 3, 2025

பீடிகை: முன்னமே சிலபல முறை பெரியவர்* அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் நக்கலாகவும் கிண்டலாகவும்தான். ஏனெனில் அவருடைய கண்மூடித்தனமான எதிர்ப்புகள் அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கவை – ஆனாலும்… அவர் அதிர்ந்து பேசாமல் திட்டாமல் ஒரு விஷயத்தைத் தரவுகள் சார்ந்து தொடர்ந்து பேசும்போது, அதனையும் ஒப்புக்கொண்டு போற்றத்தான் வேண்டும், அதற்குரிய மரியாதை கொடுக்கப்படத்தான் வேண்டும்.

கோனாரே! நீவிர் ஆரோக்கியத்தோடும் மனநிம்மதியோடும் சகல சௌபாக்கியங்களோடும் (வரைமுறையே இல்லாமல் ஹிந்துத்துவத்தை வெறுத்தாலும், ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக் சங்கக் குடும்பத்தைத் தொடர்ந்து கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தாலும்) நீடூழி வாழ்க, தொடர்ந்து பொலிக.

*பக்ஷிராஜன் அனந்த ‘பிஏ’ கிருஷ்ணன்

சிகரெட்கால்: ஒருசமயம் ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்’ என்கிற ரீதியில் சிலபல நண்பர்களுடன் அங்கலாய்த்துக் கொண்டிருந்தபோது (இது பெட்டைப் புலம்பல் எனவும் அறியப்படும்), அவர்களில் ஒருவர் சொன்னதன் சாராம்சம் “நம் குடும்பங்களில் வயதான பெரியப்பா மாமா எனவொருவர் இருப்பார், சதா எத்தையாவது கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார், தேவையற்ற அறிவுரைகளை வாரிவழங்கிய வண்ணம் இருப்பார் – பொறுக்கவே முடியாத அளவுக்கு ஆகாத்தியம் செய்வார் – ஆனால் அவரை நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் (ஆனால் நரைமுடியைப் பிய்த்துக்கொண்டு + பல்லை நறநறத்துக் கொண்டு) லூஸ்லவுடுவதில்லையா? என்ன இருந்தாலும் அவர் நம் பெரிப்பா இல்லையா?”

சரிதான்! போதாக்குறைக்கு என்னுடைய மேலதிகப் பிரச்சினை என்னவென்றால் எனக்கு பெரியம்மாக்களும் இருக்கிறார்கள். அண்மையில் இந்த குடும்பகத்தில் இணைந்திருப்பவர், என் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் மாளா அன்புக்கும் உரிய அம்மணி மது பூர்ணிமா கிஷ்வர் அவர்கள். :-(

(சிடுக்கல்: இவர் சாதாரண பெரியப்பாத்துவா வகை அல்லர், வெறும் கெவுர்னமெண்ட் பெஞ்ச்தேய்த்த குமாஸ்தா (ரிட்டையர்ட்) அல்லர், சொகுசு வேலையில் இருந்து சுகமான சுமைகளைச் சுமந்தவரல்லர் – மாறாக, களத்தில் இறங்கிப் பலகாலமாக பல விஷயங்களுக்காகத் தொடர்ந்து ஓயாமல் போராடிக் கொண்டிருக்கும் அம்மணி, இவற்றுக்காக இவரால் கொடுக்கப் பட்ட விலை மிகவும் அதிகம். + நேர்மைப் பிழம்பு + எல்லோராலும் அநியாயத்துக்கு வசைபாடப் பட்டுக்கொண்டிருந்த நரேந்த்ரமோதியை ஆதரித்துத் தரவுகள் ரீதியாக வக்காலத்து வாங்கியவர், போராடியவர்… …)

இருந்தாலும்… :-(

சுருட்டுக்குஞ்சாமணி: இது ஒரு சாதாரண, சராசரி திராவிட உடன்பிறப்பின் குறியீடு.

இது திராவிடர்கழக நிரந்தர-யஜமான் வீரமணியைக் குறிப்பிடுவதாகவும் இருக்கலாம்; எனெனில் இந்தப் பதிவின் பாடுபொருள், இம்மாதிரி ஆனந்த அறிவிலித் தற்குறிகளான கழகக் குஞ்சாமணிகளின் புளகாங்கிதம் குறித்துத்தானே?

மேலும் ஸ்டாலின் (ஒரிஜினல் போலி), அதாவது ஜார்ஜியா தேசத்தைச் சார்ந்த ஜோஸஃப் விஸ்ஸாரியனொவிச் அயோக்கியன் – அவனுடைய புளகாங்கிதப்  ‘பட்டப் பெயர்’ என்பது ஏறத்தாழ ‘இரும்பு மனிதன்’ அல்லது ‘எஃகு மனிதன்’ எனவாக விரிவது. ஸ்டாலின். அந்த ஒரிஜினல் அயோக்கியனின் புளகாங்கித விசிலடிச்சான் குஞ்சாக இருந்த மு கருணாநிதி, அந்தப் பெயரை எடுத்து தன் மகனுக்கு வைத்தார்.

இப்போது… இந்த போலிப்போலி ஸ்டாலின், அதாவது தமிழகத்தின் தற்போதைய முதலையமைச்சர் – தமிழகம் இரும்புக்காலம் தொன்மை அது இது டர்புர்ரென்று அட்ச்சிவுடுவதற்கும் ஒரு வரலாற்றுக் காராமணி இருப்பது தெரிகிறதா?

அவ்ளொதான்.

-0-0-0-0-0-

தமிழகத் திராவிடர்கள்தாம் இரும்புக்காலத்தின் பேராசான்கள் எனவொரு பெரும் புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் – தமிழகத்தின் அரசே இப்படி ஒரு அரைகுறைத்தனத்தைப் பறைசாற்றுவது படுகேவலமானதொன்று.

இதனைக் குறித்து அனைத்து ரக தற்குறிகளும் பித்தம்போக்கு-சீமான்போக்கு எனவும் படு தெகிரியத்துடன் அட்ச்சிவுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆக.

வேறு வழியேயில்லாமல் தமிழக அரசின் பித்தலாட்ட அறிக்கைப்  புத்தகத்தைப் (Antiquity of iron : recent radiometric dates from Tamil Nadu) படித்துக் கொண்டிருக்கிறேன், என் அழுகைக்கும் சிரிப்புக்கும் அங்கலாய்ப்புக்கும் அளவே இல்லை… தமிழகத்திலும் தமிழிலும் எவ்வளவோ போற்றத்தக்க, வெகுவாகப் பெருமைப் படத்தக்க விஷயங்கள் என பலப்பல இருக்கின்றன, அவற்றைப் போஷகம் செய்ய முனைப்பில்லை… ஆனால்…

…நிலைமை இப்படி மகிழ்ச்சிகரமாக இருக்கும்போது, ஏன் புளுகுபுளுகாகக் புளுகி கலர்கலராகப் பேத்தி, நம்மை மேலும் சிறுமைப் படுத்திக் கொள்ளவேண்டும்? ஒரு அடிப்படையும் தெரியாமல் உளறிக் கொட்ட வேண்டும், சொல்லுங்கள்?

அதேசமயம், கறாரான தரவுகளுடனும் அவற்றின் மீதான தர்க்கபூர்வமான வியாக்கியானங்களுடன் நாம் விஷயங்களை நிறுவினால் – அவற்றுக்கெதிராக எவன் தான் (அடியேன் உட்பட) பேச முடியும் சொல்லுங்கள்? பிரச்சினை என்னவென்றால் – நம் அடிப்படைகளே ததிங்கிணத்தோம்! 

நம் தமிழர்களின் ஆபாசமான அல்லாடல் ஆயாசமாக இருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் – நான் அடிப்படையில் மெட்டலர்ஜி (உலோகங்களை அவற்றின் கனிமங்களிடமிருந்து பிரித்தெடுத்தல், வார்த்தல், கலவைகளை உருவாக்குதல், பொருட்களைச் செய்தல்+++) விஷயங்களுக்காகப் பயிற்சி கொடுக்கப்பட்ட ஆசாமி. படிப்பை முடித்தவுடன் சிலகாலம் – இரும்பு-எஃகு உருவாக்கும் ஒரு பெரும் தொழிற்சாலையில் கனிமங்களை உருக்கி வார்ப்பிரும்பைக் கொட்டியிருக்கிறேன்; பின்னர் பரிசோதனை முயற்சியாக (மஹாமஹோ ஸ்ரீ தரம்பால் அவர்களின் ஏகலவ்ய சிஷ்யனாக) சுமார் 2000 வருடங்களுக்கு முன் பிரபலமாக வழக்கிலிருந்த பாரதமளாவிய எஃகு (ஹிந்துவன், வூட்ஸ்/டமாஸ்கஸ் ஸ்டீல் என்றெல்லாம் அறியப் பட்டது இது) தயாரிப்பு முறையை அடியொற்றி எஃகினைத் தயாரிக்க முயன்றவன் – ஓரளவு வெற்றிகரமாக அதனைச் செய்தவன்கூட (1987-89ல் நடந்த விஷயமிது)… இன்றுவரை அப்படியும் இப்படியும் தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபட்டிருப்பவன் – வெறும் வெட்டி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஏஐ எம்எல் யூட்யூபன் பதிவன் அழுத்தாளன் இன்னபிற ரொபாடிக்ஸ் ட்ரோன் டர்புர் காரனல்லன் நான்.

ஆகவே நம் தமிழர்களின் வெட்டித் தனமான திண்ணைப் பேச்சு எனக்குப் படுவேதனையைக் கொடுக்கிறது. மஹா ரோதனை.

ஆகவே – என்னால் முடிந்த அளவு தரவுகளையும் உண்மைகளையும் திரட்டி இந்தத் திராவிட அலங்கோலத்தைப் பற்றியும் பொய்பொய்யாக நாம் தற்பெருமை பேசுவதைக் குறித்தும் ஆவணபூர்வமாக எழுத ஆரம்பித்திருக்கிறேன், ஏனெனில், இந்த திராவிட மாய்மாலத்தை காத்திரமாக எதிர்கொள்ள வேண்டியது முக்கியம்.

…பார்க்கலாம் – கிடைக்கும் நேரமெல்லாம் இதை எழுதிப் பிழைகளை அகற்றி, சமனத்துடன்… பொறுமையுடன்…  எப்போது முடியும் எனத் தெரியவில்லை (= என் சக 71/2 வாலறிவர்கள், இதனை ஹனுமார் வால் என்றறிவார்கள் என அனுமானிக்கிறேன்)

-0-0-0-0-0-

பெரியவர் பிஏ கிருஷ்ணன் அவர்கள் (இவருடைய அறிவியல், தொழில் நுட்பப் பின்புலம் பயிற்சி யாவை என நான் அறியேன்) கீழடியில் ஆரம்பித்து தற்போதைய சிவகளைப் பகுதி அகழ்வாராய்ச்சி ‘இரும்புக்கால டகீல்’ வரை நுட்பமாகவும் சமனத்துடனும் அதிர்ந்துபேசாமலும் – திராவிடமாடல் அகழ்வாராய்ச்சி குறித்து, மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் காத்திரமான கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

அவர் தமிழக அரசின் தகிடுதத்தங்கள் (என் வார்த்தை, அவர் அப்படி தடால்புடால் என்று பேசுபவரல்லர் என நினைக்கிறேன்) குறித்து, சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார், கருத்துகளையும் முன் வைக்கிறார். அவசியம் படிக்கவும்/பார்க்கவும்; இரண்டாவது சுட்டியில், சுமார் 1 மணி நேரம் ஓடும் விடியோ தமிழ்-உரையாடல் இருக்கிறது.

இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம் – Posted on January 24, 2025 by P A Krishnan (குறிப்பு: இது அவசரமாக எழுதப்பட்டது. இதை விரிவாக்கி எழுதுவேன். நிச்சயம் ஒரு வரி கூட விடாமல் படியுங்கள்)

தமிழகத்தின் இரும்புக் காலம் – அறிவியலா அரசியலா – Posted on January 28, 2025 by P A Krishnan

+ தீவிரமாக அசைபோடவும்.

அவருக்கு என் நன்றியும் வாழ்த்தும்.

தொடர்ந்து பொலிக, வாழ்க என வாழ்த்துகிறேன். வணங்கியும் மகிழ்கிறேன். தன் கருத்துகளை விரிவாக்கியும் எழுதுவார் என நம்புகிறேன்.

-0-0-0-0-0-

பாரதமாதாவும் அவள் மகளான தமிழ்த்தாயும் ஒன்று சேர்ந்து – வெறியர்களையும் வெத்துவேட்டுகளையும் வேரறுப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *