பகீர்! விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு கொபசெ ஆகியிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி!!

March 11, 2026

என்னது? ஆனானப் பட்ட ‘கிழக்கு பதிப்பகம்’ புகழாளரும் அரசியல் பகுத்தாய்வாள விமர்சகருமான பத்ரிசேஷாத்ரி, தமிழகவெட்டிக்கழகத்தின் கொள்கைப் பரப்புரைச் செயலாளரா? ஐயோ!! தேர்தல் களம் றொம்பவே சூட் புட்ச்சிடிச்சே! 

கருத்துப் படம், நன்றி: சாட்டுஜிப்டார் :-(

பத்ரியார் எனக்கு முன்னறிமுகவானவர்தாம், சமன நிலையுள்ளவரும் படுபுத்திசாலியுமான இக்கிழக்கார், செயலூக்கமும் மிக்கவர்தாம். ஆகவே, இத்தனை நாள் அவர்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். இனி மேலதிகமாக அவரை மதிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. மேலும் அவருடைய நடு நிலைமைப் பிறழ்வுக்கு, தவெக எவ்வளவு பொட்டியில் கொடுத்தது எனத் தெரியவில்லை – ஆகவே பொறாமையாகவும் இருக்கிறது.

ஆக… பிகில் நடிகர் விஜய்க்கும் ஒரு B டீம் இருக்கிறது. பத்ரி டீம்! :-(

எது எப்படியோ… ஒரு மாதிரியாக, ஒரு படுகேவலமான எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியிடப்பட்ட அவருடைய வெட்கங்கெட்ட கேடுகெட்ட தவெக பரப்புரை – பார்த்துக் களிக்கவும், அல்லது முகம் சுளிக்கவும்; சுமார் 20​+ நிமிடங்களே ஓடும் இந்த ப்ளடி விடியோவைப் பார்த்தாவது தவெக-கார விசிலடிச்சான் குஞ்சாமணியாளர்களுக்கு உங்கள் அனாதரவை நல்கவும்.

…பொட்டி வாங்கிக்கொண்டீர்கள், சரி பத்ரியாரே! ஆனால், இப்படிப் படுகேவலமாகவா விஜய்க்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பது? அவருடைய விட்டேற்றி அறிவிலித்தன ஜிகினா வாக்குறுதிகளுக்கெல்லாம் குதர்க்கரீதியான வியாக்கியானம் அளிப்பது? இம்மாதிரி சப்பைக்கட்டுகளுக்காக விசிலாளர்கள் உங்களுக்குக் கொடுத்த விலை என்ன?

பைசா கொடுத்தால் எப்படியல்லாமோ கலர்கலராகக் கம்பி கட்டிவிடுவீர்களா?  

ஆனாலும் பத்ரீ! நீங்கள் விலை போவீர்கள் என என் கனவில் கூட நினைத்ததில்லை. :-(

எனக்கு வெறுத்துவிட்டது. ஆகவே, இந்தப் பதிவெழவையும் படித்துத் தொலைக்கும் சக ஏழரைகளான நீங்களும் பத்ரியை ஆழ்மனதிலிருந்து வெறுக்கவேண்டும் – ஆகவே இவ்விடியோவை முழுமையாகப் பார்த்து, அவரைக் கரித்துக் கொட்டவும்.

நன்றி. :-(

4 Responses to “பகீர்! விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு கொபசெ ஆகியிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி!!”

  1. தமிழன்'s avatar தமிழன் Says:

    அய்யோ ஐயா! என்ன இவர் சகட்டுமேனிக்கு இலவசமேனியா பட்டியலை நீட்டி முழக்கிக்கோண்டே போகிறார்?! ஏற்கனவே திராவிட கைங்கர்யத்தில் தமிழக நிதிநிலை தள்ளாடுவது போதாமல், தற்குறி தள்ளாபதியின் இலவச பட்டியல் அனைவருக்கும் திருவோட்டை பரிசளித்தே தீரும் போலிருக்கிறதே?! ஒளிமயமான எதிர்காலம்…🤡


    • “இலவசமேனியா” :-) நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு – இன்னும் என்னவெல்லாம் தரிசிக்க வாய்ப்பு கிடைக்குமோ, கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கிறது :-(

  2. Kannan's avatar Kannan Says:

    one-upmanship all the way.

    அவன் : நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு யானை கொடுப்போம்.

    இவன் : நாங்கள் அஞ்சு யானை கொடுப்போம்.

    அவன் : நாங்க ஒரு லேப்டாப் கொடுப்போம்.

    இவன் : நாங்க சூப்பர் கம்பியூட்டர் கொடுப்போம்.

    The list goes on.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *