ஜாதிகள், ஒடுக்கப்படுதல், இஸ்ரோ, ஊடகப் பேடிகள், தெருப்பொறுக்கித் திராவிடம் – குறிப்புகள்

August 29, 2023

முந்தைய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:

‘தமிழன்’ அவர்களின் சுவையான பின்னூட்டத்தையும் படிக்கவும்.

-0-0-0-0-0-

…ஆனால் சொன்னபடி என்னால் அதனை முழுவதுமாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில் மீதமிருக்கும் உரையாடல் எனக்கு நரையாடல் தருவதால் – அதில் ஒரு சுவையான பகுதியை மட்டும் கொடுக்கிறேன்:

திராவிட(/தமிழ்தேசிய?)த் தம்பி: …அப்ப நீங்க ப்ராமின்ஸால ஒடுக்கப் படலண்ரீங்களா?

இஸ்ரோ நண்பர்: இல்ல. இஸ்ரோ ஒரு பாரதவிலாஸ்னு சொன்னேனே!

பொதுவா நான்-ப்ராமின்ஸை  சூத்திரன்னிட்டு அவங்க நீச்சமா மதிப்பாங்க இல்லியா?

தம்பி, நான்-ப்ராமின்ஸ் அப்டீன்னா என்ன? என் ஜாதி ஆறுநாட்டு வேளாளர், கரிகாலி நாடு. உங்களுது?

ஆர்க்காட்டு முதலியார்.

அது மேல்ஜாதியா கீழ்ஜாதியா?

ஐயய்யோ! அது மேல்ஜாதீங்க, என் முன்னோரெல்லாம் மைசூர் சமஸ்தானத்துல மேலதிகாரிங்களா இருந்தவங்க…

ஜாதில நம்பிக்கையே இல்லைன்னீங்க, சமூக நீதின்னீங்க – ஆனா இப்படி கேட்டவுடனே டபக்குனு சொல்றீங்க?

இல்லீங்க, எனக்கு நம்பிக்கையில்ல ஆனா ஜாதின்னு இருக்கு இல்ல…

சரி, அப்ப – நான் ஒரு நான்-ஆர்க்காட்முதலியார், நீங்க ஒரு நான்-ஆறுநாட்டு வேளாளர்னு  ஒரு பேச்சுக்கு வெச்சிக்கலாம், சரியா?

என்னங்க ஜோக் சொல்றீங்க….

நீங்க நான்-ப்ராமின்ஸ்னு பிராமின் இல்லாதவங்கள சொல்றீங்க – நான் அதேமாரி அந்தந்த ஜாதிக்கு பிற ஜாதிங்களச் சொல்றேன், சரிதானே…

ஹ்ம்ம்… சரீங்க.

அப்ப ஆர்க்காட்டு முதலியாருங்க நான்-ஆர்க்காட்டுமுதலியார்களை ஒடுக்கியிருப்பாங்க இல்லியா?

ஒரு சிலர் அப்படி இருந்துர்க்கலாம் ஆனால் ஒட்டுமொத்த ஜாதியயும் அப்படிச் சொல்லமுடியாதே! ஜாதிப் படி நிலைன்னு ஒண்ணு இருக்கே – அதனால ஆர்க்காட் முதலியாருங்க ஐயருங்கள ஒடுக்கியே இருக்கமுடியாதே…

என்ன தம்பீ, மேல கீழன்னு கொழப்பறீங்க…

ப்ராமின்ஸ் எல்லாருக்கும் மேல, அதனால அவங்க எல்லாரையும் ஒடுக்கறாங்கன்னுதான் சொல்லவர்ரேன். அவங்களால தான் மிச்ச ஜாதீங்களும் தங்களால முடிஞ்ச அளவு ஒடுக்கறாங்கன்னு…

தமிழ் நாட்ல நெறய்ய கிராமங்கள்ல ப்ராமின்ஸே கிடையாது, ஆனா அங்கே ஜாதிப் படி நிலை இருக்கே… ஒரு விதிவிலக்குகூட இல்லையே!

உண்மைதாங்க – ஆனா ப்ராமின்ஸ் ஊட்டின வெஷம்தானங்க அது….

ஓ! அப்ப நூறு வருஷமா சமூகநீதி பேசிட்டு ஒரு தம்பிடிக்கும் உபயோகமில்லைண்ரீங்க இல்லியா?

அடுத்த கேள்விக்குப் போகலாமா சார்? உங்க கிட்ட கேக்கறத்துக்கு என் கிட்ட நெறய்ய கேள்விகள் இருக்கு…

சரி. ஆனா, ஒடுக்குபவர்கள்னு  ஜாதிப்பிரச்சினைன்னு பொதுவா பேசினா அது எங்க ஆறுநாட்டு வேளாளருக்கும் உங்க ஆர்க்காட்டு முதலியார்களுக்கும் அது பொருந்துமில்லியா… நீங்க இனிமேலேர்ந்து நான்-ப்ராமின்ஸ்னிட்டு அவ்ங்க ஒடுக்கப்பட்றாங்கன்னிட்டு பொத்தாம்பொதுவா சொல்றத தவிர்க்கணும், சரியா?

சரீங்க, அடுத்த கேள்விக்குப் போவலாமா?

தம்பி, உங்களுக்குப் பல விஷயங்கள் பிடிபடல… தொழில் நுட்ப ரீதியா பேசலாம்னு ஆவலோட இருந்தேன், நீங்கதான் சமூகப் பின்புலம் ஸைன்ஸ்-டெக்னாலஜி-ஸொஸைய்டின்னு பேச ஆரம்பிச்சு சமூகநீதி பத்தி மட்டுமே பேசறீங்க…. எனக்கு ஆச்சரியமாவும் அவலமாவும் இருக்கு இந்த நெலம…

ஏங்க, இந்தியாவில ஜாதிப் பிரச்சினையே இல்லைன்றீங்களா?

தம்பி நான் அப்படிச் சொன்னேனா? என் கருத்து என்னன்னா சின்னச்சின்ன ஜாதிப் பிரச்சினையை ஊதிஊதிப் பெருசாக்கற வித்தை நமக்கு நிறைய இருக்குண்றதுதான்.

சரீங்க, என்னோட முன்னாடி கேள்விக்கு வர்ரேன்; சின்னசின்ன ஜாதிப் பிரச்சினை இருக்குண்றீங்க – இருந்தாலும் அப்ப நீங்க ப்ராமின்ஸால  இஸ்ரோல ஒடுக்கப் படலண்றீங்களா?

இல்லைங்க; இஸ்ரோல பல மனிதர்கள் பலப்பல பிரதேசங்களிலிருந்து வந்திருக்காங்க – அங்கு ஜாதி ஒரு பிரச்சினையே இல்லை. என்னை யாரும் ஒடுக்கல – நானும் யாரையும் ஒடுக்கலன்னு நெனக்கிறேன்.

சரீங்க – ஆனாக்க நேரடியா இல்லாட்டாலும் ஏதாவது மறைமுகமா இருந்திருக்குமே!

இல்ல.

அப்ப உங்கள இல்லாட்டாலும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர மேலவர விடாம நசுக்கியிருப்பாங்களே!

தம்பி, இல்லவேயில்ல. எனக்கு 30 சொச்ச வருட அனுபவத்துல அப்படி ஒண்ணுமே இல்லையே! நானும் எப்போதும் ஒடுக்கப்படவேயில்லை. யோசிச்சா என் தாத்தாதான் என்னைப் படிபடின்னு ரொம்ப ஒடுக்கியிருக்கார் – ஆனா அவரும் ஆறுநாட்டு வெள்ளாளர்தான்…

சரீங்க, அப்ப இஸ்ரோ ஒரு சமதர்மப் பூங்காண்றீங்கதானே?

அழுத்தம் திருத்தமா சொல்றேன், ஆமாம்… அதேபோல இந்தியாவோட பெரிய பிரச்சினை உங்களை மாறி இருக்கறவங்க – வாய்கூசாம பொய் சொல்லி போலிப் பிரச்சாரம் செய்யறவங்கதான், ஜாதி இல்லவேஇல்ல…

பெரிய குற்றச்சாட்டு வெக்கறீங்க சார், இது அவதூறு…

என்ன தம்பீ – ஜோக்கடிக்கிறீங்களா? இல்ல – நான்-ஆர்க்காட்முதலியார்கள் மேல பழி போடறீங்களா?

….

(இதற்குப் பிறகு…  அதுவரை பொறுமை காத்து கிண்டல் மட்டுமே செய்துகொண்டிருந்த என் பொறியியலாள நண்பர் கொஞ்சம் கோபமாகப் பேசியிருக்கிறார்:

– பின்னர் சுபம்)

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *