ஈவெரா ‘பெரியார்’ – ஒரு ஆந்திரத் தரவும் அதிரவைக்கும் பகீர் உண்மைகளும்….

July 15, 2022

ஈவெரா குறித்து வெகுகாலமாக எனக்கிருந்த அனுமானங்கள் சிலபலவற்றுக்கு இன்று காத்திரமாக விடை/தரவு கிடைத்தது.

அவ்வனுமானங்களாவன:

  1. ஈவெரா கன்னடர் அல்லர், தெலுங்கர்.
  2. அவருக்குக் கொடுக்கப் பட்ட மரியாதைக்குரிய பட்டப்பெயர் ‘பெரியார்‘ என்பதல்ல – மாறாக, அது ‘பொரியார்.’

சரி.

கீழே, ஈவிஆர்/EVR அல்லது ஈவெரா ப்ரேண்ட் பொரிப் பொட்டல ருசிசு – ஆவணபூர்வமாகச் சமர்ப்பிக்கப் படுகிறது.

ஈ வெ ராமசாமி, ஆந்திரத்துக் கர்நூல் நகரில் பொரிகடலைக் கடை நடத்திப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்த தெலுங்கர்.

பின்னர் தமிழகத்துத் திராவிடர்களுக்குத் தலைமைப் பஞ்சம் ஏற்பட்டதால் – இறக்குமதி செய்யப்பட்டு, பொரி பொரித்துத் தமிழகத்தின் பொன்னேடுகளில் பொரிக்கப்பட்டவர். ஆனால் அவர் குடும்பத்தினர், இன்றுவரை பொரியாரின் திராவிடப் பொரித் தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஆகவே:

அவர், நியாயமாக ஈவெரா பொரியார் எனத்தான் அழைக்கப் படவேண்டும்.

ஆனால்.

தமிழர்கள், அண்ணாதுரை தலைமையில் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டு அவருடைய ஒருகாலை உடைத்துவிட்ட காரணத்தால், இப்படி ஈவெரா பெரியார் ஆகிவிட்டார், பாவம்.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *