மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-)

September 1, 2013

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மது கிஷ்வர் அவர்களைப் பற்றி – சில மாதங்கள் முன்பு   என் கருத்துக்களை எழுதியிருக்கிறேன்.

அவர், சென்ற பல மாதங்களாக ( நவம்பர் 2012-லிருந்து என நினைவு) பலமுறை குஜராத் சென்று – மக்களுடன் கலந்து பேசி, அங்கேயே தங்கி ஆராய்ந்து – குஜராத் பற்றி, மோதி ஆட்சி பற்றி, சிறுபான்மையினர் பற்றியெல்லாம் அவர் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார். (அதற்கு முன்னும் கூட பலமுறை சென்றிருக்கிறார்; மேலும், மிக முக்கியமாக — அவர் சிரமங்களுக்கும், செலவுகளுக்கும் வேறு எவரையும் நம்பிக் கொண்டிருக்கவில்லை; அதாவது மோதி அவர்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ – மது, ஒரு சுக்குப் பலனும் பெறவில்லை – இது பொதுவாக, நம் ‘துட்டு கொடுத்தால் தூக்கி எழுதும்’ அல்லது சிரத்தையேயில்லாமல் வெறும் அட்டைக்காப்பி அடித்து எழுதி மினுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும்!)

என்னுடைய குஜராத்தி நண்பர்கள் சொல்வதைப் பார்க்கும் போதும், என்னுடைய பலவருடங்கள் முந்தைய பயணக் குறிப்புகளைப் படிக்கும் போதும் – ஊடகங்கள் வாய் கூசாமல் திரும்பித் திரும்பிப் பொய்களையும் அண்டப் புளுகுகளையும் சொல்லியே (மேதகு கீபல்ஸ் அவர்கள், உயிருடன் இருந்தால் இந்த சாக்கடைப் பத்திரிக்கையாளர்களிடமும், தொலைக்காட்சிச் சேனல்களிடமும் பிச்சை வாங்கிக் கொண்டிருப்பார்) – மோதி அவர்கள் பற்றிய ஒரு எதிர்மறைக் காட்சியை நம் அறிவுகெட்ட அறிவுஜீவிகளிடையே, கீபோர்ட் வீரர்களிடையே உருவாக்கி வைத்துள்ளது புரிகிறது.  இவர்கள் மூலம் வெள்ளந்திப் பொதுமக்களுக்கு இந்த அற்பத்தனம் பரவ வாய்ப்பிருப்பதும் புரிகிறது.

இம்மாதிரியான அறிவுஜீவிகளின், போராளிகளின் (lumpen intellectuals and keyboard guerrillas – the latter should  be more appropriately called gorillas, but then…) மனத்திலுள்ள வன்மத்தையும் விஷத்தையும் முறிக்க – இவர்களின் மேல்மாடியில் கொஞ்சமாவது  மூளையை நிரப்ப – மற்றவர்களெல்லாம்  அவசியம் படிக்கவேண்டியவை – மது கிஷ்வர் அவர்களின் மோதிநாமா தொடர்கட்டுரைகள்.

இந்தப் பெயரைப் பார்த்தவுடன் இது மோதி புகழ் பாடும் நாமாவளி என்றோ பாபர்நாமா, அக்பர்நாமா போன்ற நகைக்கத்தக்க ‘சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!!’ போன்ற  ‘தூக்கு’ அல்லது சொம்பு சமாச்சாரம் என நினைத்துவிட வேண்டாம். எனக்கு, மது அவர்களின் நேர்மையில், தேசபக்தியில் (தேசவெறியல்ல), மனத்திடத்தில், ஒரிஜினல்  பகுத்தறிவில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

இவர் இதுவரை எழுதிய கட்டுரைகள் தொகுக்கப் பட்டு கீழ்கண்ட சுட்டியில், ஒரு பிடிஃப் கோப்பாக, தரவிறக்கம் செய்து படிக்கத் தோதாக இருக்கின்றன.

http://www.manushi.in/docs/Modinama-ebook.pdf

அவசியம் படிக்கவும்.

-0-0-0-0-0-0-

நரேந்த்ர மோதி!

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *