தொழில்முறை தமிழ் யூட்யூபர் கழுதைகளின் அலுப்புதரும் அலப்பறைகள்
July 18, 2025
அவ்வப்போது இந்த வகையறா தொகையறாக்களின் ஏதாவது ‘காணொளி’ கனைப்பொலி எனச் சிலவற்றைப் பார்ப்பதுண்டு. காலம் பொன்னானது என்பதை நிபந்தனையற்று நம்பும் எனக்கு, என்னுடைய இந்த எப்போதாவது ‘பொழுதுபோக்கு’மேகூடப் படுகேவலமானதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; என்னை மன்னித்து லூஸ்லவுடுங்கள். (நல்லவேளை, இந்த தண்டக்கருமாந்திரங்களைப் பார்க்க முனையும்போது முதல் ரெண்டு நிமிடங்களில் போர்க்காலரீதியில் பின்வாங்குவதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன்)
(நான் பார்க்கும்வரை/பார்த்தவரை – ஒருசில விதிவிலக்குகள் இருக்கின்றனர் – (என் செல்ல) அண்ணாமலை, தமிழருவி மணியன், பத்ரிசேஷாத்ரி, பிரபாகரன்++ என்பவர்கள்போல – இவர்கள் தொழில்முறை வளவளாக்கார யூட்யூபர்களாக இல்லாமல் இருப்பது ஆசுவாசம் தருவது. அவர்கள் பெரும் ஆவேசமில்லாமல் கருத்துகளை முன்வைப்பது கொஞ்சம் நிம்மதியையும் தருவது… மேலதிகமாக இன்னமும் சிலர் இப்படி இருக்கலாம்)
மற்றபடி, இந்த ‘நெறி’யாளக் கூப்பாட்டுக் கூவான்கள்:
“இப்ப தமிளக அரசியல் களம் சூடுபுட்ச்சிடிச்சி… நீங்க என்ன நெனக்கிறீங்க…?”
ப்ளடி போக்கத்த பேஸ்கெட்ஸ்.
(அவ்ளோதான் இந்தப் பதிவு)

