“தத்தம் இளமைகளில் பாட்டன் முதலமைச்சன் ஒரு தொழில்முறை ஸ்த்ரீலோலன், மக்கா முதலமைச்சன் ஒரு கடைந்தெடுத்த பொம்பளைப் பொறுக்கி, பேராண்டி துணைமுதலமைச்சனும் காமாந்தகக் கொடூரன்… கொள்ளுப்பேரன் கதை தெரியவில்லை… நம் படுகேவல வாழ்க்கை இப்படியிருக்கையிலே…”
July 9, 2025
1
இதை, ஒருமாதிரி உணர்ச்சியேயில்லாமல், ரெண்டுமூன்று வாரங்கள் முன் சொன்னது, இன்றுவரை திமுக அனுதாபியாக இருக்கும்… (இவர், கடந்த சுமார் 30 வருடங்களாக திமுக உறுப்பினரல்லர்; வை கோபால்சாமி டமால்டுமீலென்று தமிழீழ உதார்விட்டு, பின்னர் திமுகவிலிருந்து எட்டி உதைத்துத் துரத்தி அடிக்கப்பட்ட காலத்தில் சிலகாலம் மதிமுக அரைகுறைகளுடன் ஊடாடி, பின்னர் அக்கும்பலிடமிருந்தும் விலகினேன் எனச் சொல்லியிருக்கிறார்) – சுமார் 20+ வருடமாக அறிமுகமாயிருக்கும் அடையார்(சென்னை) பகுதி அன்பர், அதாவது சக-கிழபோல்ட். 70+ வயது?
இவருடைய தகப்பனார் ‘அறிஞர்’ அண்ணாதுரை காலத்திலிருந்து திமுக கும்பலில் உடல்பொருள்ஆவி பூர்வமாக ஐக்கியமாகி இருந்தவர், திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர் எனச் சொல்லியிருக்கிறார் என நினைவு; இவரும் – கருணாநிதி தனக்கேயுரித்தான கயமைக் குள்ள நரித்தனத்துடன் நெடுஞ்செழியனை ஓரங்கட்டியபின் (1969?) – வெறுத்துப் போய் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ‘பதவி’யிலிருந்தும் விலகியவர்.
2
சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் இவரைப் பார்த்து-அளவளாவும் வாய்ப்பு, அண்மையில் அகஸ்மாத்தாகக் கிட்டியது. அடையார் அம்பிகா அப்பளம் ஸிக்னலில் நாங்கள் இருவரும் தட்டுத் தடுமாறிக் கடக்கமுயன்றபோது முட்டிக்கொண்டோம்.
ஐயா போய்ச்சேர்ந்துவிட்டார் என நினைத்துவிட்டிருந்தேன். ஆச்சரியகரமாக அவரும் என்னைப் பற்றி அதே ப்ளடி அபிப்ராயத்தை வைத்துக் கொண்டிருந்தது… ஒருமாதிரி ஷாக்! எது எப்படியோ – பரஸ்பரம் ஒருவரையொருவர் கிள்ளிப் பார்த்துக்கொண்டு, உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டோம். (அவர் ஒருகாலத்தில் கிள்ளிவளவன் என்கிற புனைபெயரில் கவிதை எல்லாம் எழுதியிருக்கிறார் எனத் தெரியும்வேறு!)




(சரி. ஒருவழியாக அவர் வீட்டுக்குச் சென்று குசலம் விசாரித்துவிட்டு… …அண்மைய கால வழக்கம்போல (இது நடக்கப்போகிறது என்றாலே எனக்குக் குலை நடுக்கம் ஆரம்பித்துவிடும்; நிறைய கஷ்டப் பட்டிருக்கிறேன்), போர்க்கால ரீதியில் அவரும் தன் பேரனின் பயொடேட்டா/ரெஸ்யூமே ஒன்றை என் கையில் கொடுத்து “இவனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்க முடியுமா” என்று கேட்டார் – ஏதோ ஒரு தண்டக்கருமாந்திர நாலுவருட உதவாக்கரை கம்ப்யூட்டர் பொட்டிதட்டல் படித்த பின் ஒருவருடத்துக்கு ஒரு வேலையும் செய்யாமல் வளையவந்து வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் 7 பக்க தஸ்புஸ் ஆவணம், எப்படித்தான் கூசாமல் இவ்வளவு நீட்டி முழக்கி பொய்பொய்யாக எழுதுகிறார்களோ பெருவாரியான இக்கால இளைஞர்கள்! பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இது வெற்றுக்கு வீங்கிய தண்டக்கருமாந்திர பலூன் என்று – ஹ்ம்ம் இது பிரச்சினைதான்! எப்படியோ “இந்தக் காலங்களில் நானுண்டு என்வேலை(!)யுண்டு என்றிருக்கிறேனய்யா, உதவி என ஒன்றும் செய்ய முடியாமைக்குத் தயை செய்து என்னை மன்னியுங்கள்” எனச் சொன்னேன்; இருந்தாலும், என் கையறு நிலைமையை, இக்கட்டைப் புரிந்துகொள்ளாத அவர் விடாமல் (முயற்சியில் ப்ளடி ‘மனம் தளராத விக்கிரமன்’) பையனோட பேசிப்பாருங்களேன் என்றார்…
ஐயோ! இக்கொடுமையைக் கேட்பாரே இல்லையா…
பேசினேன். ப்ளடி பேரப் பையருக்கு, தான் என்ன எழுதியிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. “ஹிஹ்ஹீ! ஒரு மாசத்துக்கு முன்னால எளுதினேன் சார், மறந்து போய்டிச்சி!”
…
…
அடுத்த ஒரு வருடத்தில் என்ன செய்ய வேண்டும் என ஏதாவது ஐடியா இருக்கிறதா? “தளபதி விஜய்ய மொதலமைச்சராக ஆக்கணும்…”
வெளங்கிடுண்டே.
…நல்ல வேளை – என் அன்பர் என் கவலைக்கிடமான ‘சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்சிடுங்க’ நிலைமையைப் புரிந்துகொண்டார். ஏனெனில் – அவருடைய பேரன் போலல்லாமல், அவர் புத்திசாலி. ஆகவே, ஆரம்பித்த பத்தே நிமிடங்களில் எனக்கு விடுதலை பெற்றுத் தந்தார், அப்பெருந்தகை!
“டேய்! ஆயா கிட்ட சொல்லி சாருக்கு சில்லுனு மோர் கொண்டு வா…”
எனக்கு நெகிழ்ந்தே விட்டது; அவரை நன்றியுடன் பார்த்து… பின்னர் பிற பொது விஷயங்கள் பக்கம் சென்றோம்…)
3
பேச்சு, அண்மைய #திராவிடமாடல் பெருஞ்சாதனைகளுள் ஒன்றான, ‘கோட்டூர்புர திமுக ஞானசேகர குண்டன், இளம்பெண்களைத் தடுத்தாட்கொண்டு கற்பழித்த படலம்’ அதனுடன் தொடர்புள்ள மா சுப்ரமணியன் போன்ற சீனியர் குண்டராதிக்க சோழன்கள் பற்றியும் விரிந்தது.
அச்சமயம் அவர் சொன்ன (நானும் ஏகோபித்து ஆமோதித்த) விஷயம் தான், இந்தக் காட்டுரைப் பதிவின் தலைப்பு.
சாராம்சமாக: அவர் பார்வையென்னவென்றால் – இதெல்லாம் ரொட்டீனாக நடக்கும் விஷயம். திராவிடமாடலில் இதெல்லாம் சகஜமப்பா. இது ஒன்றை மட்டும் பெரிதுபடுத்தக் கூடாது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி, திமுகவில் தலைமை என்றுமே சரியில்லை, சரியாக என்றுமே இருந்ததில்லை – அது எப்போதுமே, அண்ணாதுரையிலிருந்து ஆரம்பித்துக் காமாந்தகர்களால் மட்டுமே நிரப்பப் பட்டு வந்திருக்கிறது…. பெருங்கொள்ளைகளும் அபகரிப்புகளும் கற்பழிப்புகளும் அடாவடிகளும், திமுக என்று/எக்காலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் அதிகமாகத்தான் ஆகும்… ஆனால் – திமுக எனும் திராவிடக் கட்சியின் சித்தாந்தங்கள், கோட்பாடுகள், குறிக்கோட்கள்… இவை அனைத்துக்கும் இன்றும் தேவைகள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது என்பது உண்மை. தமிழ்மொழியை வடமொழி ஆக்கிரமிக்கிறது, ஹிந்தி திணிக்கப்படுகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆகவே எனக்கு திமுக தலைவர்களைப் பிடிக்கிறதோ இல்லையோ, என் ஓட்டு உதயசூரியனுக்குத் தான்… டட்டடா டட்டடா…
ஹ்ம்ம்…
ஆனால் இந்த அன்பர் அடிப்படை நேர்மையுணர்ச்சி கொண்டவர் என்பதில் எனக்கு ஐயமில்லை; மேலும் அதிராவிட குணமாக, அவர் ஏகபத்தினிவிரதத்தை அனுஷ்டிப்பவரும்கூட. அவர் திமுக உறுப்பினர் அல்லர் என்பது இதற்கெல்லாம் முக்கியமான காரணம் என்பேன்.
அவருக்கு என் சாய்வுகள் பற்றி நன்றாகவே தெரியும். என்னிடம், அவர் முட்டுக்கொடுக்கும் விஷயங்கள் அனைத்துக்கும் காத்திரமான பதில்கள் இருக்கின்றன என அவருக்கும் தெரியும். ஒவ்வொரு தடவை இந்த உரையாடல்கள் ‘முற்றி’ ஒருமாதிரி சங்கடமாக ஆனாலும், அவர் சுதாரித்துக்கொண்டு விடுவார். “உங்களுக்கு உங்கள் பார்வை! எனக்கு என்னுடையது… எப்படியும் நான் மாறவே மாட்டேன்!”
“நீங்கள் சொல்பவை சரியாகவே இருந்தாலும், நான் சாகிற வரை உதயசூரியனுக்குத் தான் ஓட்டுப் போடுவேன். என் பேரன் அரிதாரம் பூசிய கோமாளிகள் பக்கம் போனாலும் நான் மாறவே மாட்டேன்!”
எது எப்படியோ! இன்றும் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இதற்குமேல் ஓரளவு பரஸ்பர புரிதலும் மரியாதையும் இருப்பது ஊக்கபோனஸ்.
விசித்திரம்தான்.
4
நில, வீடு ஆக்கிரமிப்பு வகையறா திராவிடத் தனங்கள், ஊழல்கள், இந்தமுறை திமுக ஆட்சியில் வழக்கத்தைவிட மிக அதிகமாக ஆகியிருக்கின்றன என்றார் என் அன்பர்.
அடுத்த நாள் நாங்கள் சேர்ந்து நடை பழகும்போது தெருத்தெருவாகச் சுற்றிக் காட்டினார் – அதாவது எந்த வீட்டை/மனையை எந்த திமுக காரன் ஆட்டையப் போட ‘ஸ்கெட்ச்’ போட்டுக் கொண்டிருக்கிறான், மலைப்பாம்பு போல சுற்றி வளைத்து நெரித்துக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம்… + தமிழகத்தின் உலகப்புகழ் பெற்ற காவல்துறையின், மன்னிக்கவும் – ஏவல்துறையின் ‘நமக்கெதுக்கு பெரிய இடத்து வம்பு’ வகை செயலூக்கப் பெருந்தன்மையையும் தயாளுகுணத்தையும் பற்றியும்தான்…
முடிந்தபோது அடுத்த பதிவில் அவற்றைப் பற்றிக் கோடிட்டுக் காட்டுகிறேன்.
அண்ணாவின் தம்பிகள் நமக்குத் தொடர்ந்து போட்டுக்கொண்டிருக்கும் தொடர் #திராவிடமாடல் நாமம் வாழ்க!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
(பார்க்கலாம்)


July 14, 2025 at 08:27
உங்களுக்குன்னு எப்டி சார் இந்தமாதிரி வந்து மாட்டுது?!
எங்களுக்கு ஒன்றும் புகார்கள் இல்லை. சுவாரசியமான காட்டுரை படித்த திருப்தி :)
October 4, 2025 at 20:24
[…] […]