என்னதூ?? லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பாலஸ்தீனமா? ஐயோ!!

February 27, 2025

1

சென்றவாரம் பள்ளிக்கு திக்திக் விஜயம் செய்த போது, தெரியவந்த விஷயம்.

ஏதோ யோசனை செய்துகொண்டு ரோட்டோரக் கடையில் சாய் குடித்துக் கொண்டிருந்தபோது – அவர் வந்தார். நமஸ்காரம் என்றார்… ரெண்டுமூன்று ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தேன் இந்த 65+ வயதிருக்கும் அம்மணியாரை. இவருடைய  மகள்வழிப் பேரன் என்னுடைய பழைய மாணவன். இவன், 12ஆவதுக்குப் பின்னர், ஏதோ ஃப்ரெஞ்ச் படித்துவிட்டு, விட்டாற்போதும் என, நம்முடைய பாழாப்போகிற தமிழகத்தை விட்டோடி ஃப்ரான்ஸ் போய் ‘ஸெட்டில்’ ஆகிவிட்டான்.

குடும்பம் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. அம்மணியார் ஓரளவுக்கு விஷய ஞானமுள்ளவர். வெறும் டீவி ஸீரியல்களை மட்டும் பார்க்காமல், ரிபப்ளிக் டீவி செய்திகளையும் கேட்கும்/பார்க்கும் திறனுள்ளவர். “அந்தக் கால பியூஸி சார்!” (இதற்கு அவருடைய தகப்பனார் ராணுவத்தில் சிப்பாயாக இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்?)

…நல்ல மனதுடைய மூதாட்டி. இருந்தாலும், விசித்திரமாக, துட்டு வாங்கிக்கொண்டு திருட்டு திராவிடியா திமுக கும்பலுக்கு ஓட்டுப் போட்டவர்.

பிரதியுபகாரமாக திராவிடப் பொறுக்கிகள் அவருக்குச் செய்த விஷயங்கள் மூன்று – எல்லாம் 2022க்குப் பிறகு நடந்தவைதாம். அனைத்தும், அதுவும் மூன்றே வருடங்களில்!

  1. கணவன் – டாஸ்மாக் சாராயம் குடித்தே செத்தான்.
  2. மூத்தமகனும் அப்படியே.
  3. மாப்பிள்ளையும் அதேஅதே! (இவன் கள்ளச்சாராயமும் குடிக்கும் வழக்கம் கொண்டிருந்தவன் போல)

…விழுப்புரம் பகுதியில் நான்கு நாட்கள் முன்வரை தாராளமாகக் கள்ளச்சாராயம் கிடைத்தபடிதான் இருந்தது, இருக்கிறது. என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! மாதாந்திர வசூல்/ஹஃப்தா/மாமூல் வாங்கிக்கொள்ளும் தமிழக காஏவல்துறைக்கும், பொறுக்கி திமுகவினருக்கும் என்னைவிடவும் பெருமகிழ்ச்சியாகத்தான் இருக்கும்!

சரி. இப்போது, அம்மணியாரின் மகள் வீட்டோடு இருக்கிறார். மருமகளும் அப்படியே. வீட்டில் சதா சண்டை சச்சரவு.

குடித்தே செத்த மூத்தமகனுக்கு இரண்டு பிள்ளைகள்; அதில் ஆண் பையன், உருப்படியாக ஒன்றும் செய்ய வக்கில்லாததால் – அந்தத் தெருப்பொறுக்கி விஜய் நடிகனின் குஞ்சாமணியைச் சப்பிக்கொண்டு அலையும் ஜாதி.

பெண்ணுக்கு 17 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. இப்போது இரண்டு குழந்தைகள். கணவன் பெங்களூரில் ‘கொல்த்துக்கார’ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் – இந்தப் பையர் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடையவராகத்தான் இருக்கிறார் எனப் பட்டது; இருந்தாலும் தமிழகத்திலோ பாண்டிச்சேரியிலோ ஏன் வேலை கிடைக்கவில்லை? பிச்சைக்காரக் கபோதித் #திராவிடமாடலின் வீரியமே அலாதிதான்!

இந்த மூன்றாம் தலைமுறைப் பெண்ணும் பாட்டி வீட்டில் தான் அடைக்கலம். பாவம் அந்த மூதாட்டி. இருந்தாலும் அவருக்கு ஒரு நுட்பமான நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது, அதுதான் அவரைக் கடைத்தேற்ற வேண்டும், பாவம்.

‘புளிய மரத்தின் கதை’ போல இப்படியே புளியங்காட்டுக் கதைகள் என வெண்முரசுவெண்முரசு எனக் கதைகதையாக எழுதிக் கொண்டிருக்கலாம், ஆனால்.

2

குடும்பச் சச்சரவுகளால் ‘ஆன்மிகம்’ பக்கம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அம்மணிக்கு. பாவம். மனநிம்மதிக்காக  “வாராவாரம் மேல்மருவத்தூர் செல்கிறேன்! லலிதா ஸஹஸ்ரநாமம் படிக்கிறேன்.”

அவர் வீட்டை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம்… அரைமணி நேரத்துக்கு மேலாக, அவர் தம் சோகக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த முறையாவது திராவிடப் பொறுக்கிகளுக்கு ஓட்டுப் போடாதீர்கள் எனவொரு கோரிக்கையையும் வைத்தேன்.

…கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் மரியாதையுடன் கிளம்புகிற போக்கில் இருந்த என்மேல் திடும்மென்று போட்டாரே ஒரு வெடிகுண்டு!

“லலிதாஸஹஸ்ரநாமத்தில் எப்டீ சார் பாலஸ்தீனம் பத்தியெல்லாம் வருது? எனக்கு இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!!”

விக்கித்துப் போனேன்.

அப்படியா! கொஞ்சம் ஒங்க  ஸ்லோகபுஸ்தகத்தக் கொண்டாங்க…”

அது:

“அம்மா, அது Bhalasthendra ன்ற மாரி வரும்மா, உச்சரிப்பு சுத்தமா bhAlasthendraன்னு சொல்லலாம் – பாலஸ்தீனம் அப்டில்லாம் இல்ல…”

“ஐயோ அப்ப அந்த பாஸ்டர், லலிதாஸஹஸ்ர நாமத்துல பாலஸ்தீந்த்ர – அப்டின்னாக்க பாலஸ்தீனத்தின் இந்திரன், அதன் அரசன் ஏசு கிறிஸ்துண்ற மீனிங்னு சொன்னது பொய்யா?”

“ஐயய்யோ, மேல்மருவத்தூரோட எப்டீம்மா இந்த பாஸ்டர் பாஸ்டர்ட் கூடல்லாம் போறீங்க? அந்த ஆள் உளறிருக்கான் இல்லன்னா திரிச்சிருக்கான்… இந்த அரெகொறெ பாவாடைங்களல்லாம் ஏம்மா நம்புறீங்க?”

“எனக்கு எங்கங்க ஸம்ஸ்க்ருதம் படிக்கத் தெரியும் – ஏதோ அவங்க பட்ச்சவங்க, நல்ல கலரா இருக்கார், உண்மைய சொல்வாருன்னு நெனச்சிட்டேன், மன்னிச்சிடுங்க… இப்டியா ஏமாத்துவானுங்க!” – சிரித்தார்.

“அம்மா, தேவநாகரி – அதுதான் ஸ்ம்ஸ்க்ருதத்த எழுத நாம்ப உபயோகிக்கிற வரிவடிவம்… அதை ரொம்ம சுலபமா கத்துக்கலாம்…”

“நமக்கெங்க சார், அதுக்கெல்லாம் நேரம், சொல்லுங்க…”

எனக்குப் புரிந்தது – ஆனால் இந்த வயதில் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்ளும் முனைப்பு ஒருவருக்கு இருப்பது, போற்றத்தக்க விஷயம்தானே. அதனால் ஆங்கிலத்தில் தமிழை எழுதும் முறை ஒன்றை அவருக்குச் சுருக்கமாகக் கற்றுக் கொடுத்து (மொபைல் ஃபோனுக்கும் அம்பானிக்கும் ஜே!) – ஒரு மாதிரி சுத்தமாக உச்சரிக்கும் படிக்கு இருக்கும் ஆங்கில வடிவ லலிதா ஸஹஸ்ரநாமம் சுட்டியைக் காண்பித்துக் கொடுத்தேன்.

அதே சமயம் அவர் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்… ” நம்ப தமிழ்ல ஏன் உச்சரிப்புக்கேத்தமாரி எழுத்து இல்லாம இருக்கு… தமிழ் எவ்ளொ பழைய மொழி, உலகத்துலயே அதுதான் பழையமொழிண்றாங்க, அதுல ஏன் இது இல்ல…” டட்டடா, டட்டடா

எனக்கு நேரமாகிக் கொண்டிருந்ததால், “தமிழ் அவ்ளோ பழைய மொழில்லாம் இல்லைம்மா, அதுல ஏகப்பட்ட பிரச்சினைங்களும் இருக்கு… ஆனால்  அரசியல்காரனுங்க அப்டி எத்தையாவது ஓளறிக்கொட்டுவானுங்க… கண்டுக்காம வுட்றுங்க…

… நீங்கள் மனதாற மனமுருக நம்பும் அந்த அம்பிகை, உங்களுக்கு மன நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும். அடுத்த தடவை வரும்போது பார்க்கலாம்மா, சரியா? நன்றி.”

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *