நடுக்கம் தொடர்கிறதே! ஐயகோ!!
December 26, 2024
இந்த ‘சென்னைப் புத்தக மந்தை 2025’ எழவு ரிலீஸ்கள் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால்…
இன்னொரு பக்கம் இந்த ஒப்பாரி வள்ளல்கள்…
விக்கித்துப்போன இரங்கல், கண்ணீர் அஞ்சலி, ஐயோ மறைந்தாரே, ஆழ்ந்த அனுதாபங்கள் +++++++ வகைக் காட்டுரைகளானவை, தமிழ் அழுத்தாளர்களால் அழுதுகொண்டே எழுதப் படப் போகும் ஒப்பாரிச் சாத்தியக் கூறுகளை நினைத்தால்…
+ சந்தடி சாக்கில்:
“அவர் எனக்கு ஃபோன் போட்டு மணிக்கணக்காகப் பேசுவார்! இணைப்பைத் துண்டிக்க அவருக்கு மனமே வராது… அவருடைய தனிப்பட்ட முறை வருத்தங்களை என்னுடன் பகிராத நாளே இல்லை!”
“வாழ்நாள் சாதனையாளராகிய அன்னாருக்கு அடுத்தவருடம் விஷ்ணுவகம் விருது கொடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம்…ஆனால் கொடுக்கமுடியாமல் போனது எம் வாழ்நாள் வேதனைதான்!”
“அவர் இடத்தை இட்டு நிரப்பவே முடியாது, என அவரிடம் நேரடியாகச் சொன்னபோது – ‘நீ இருக்கிறாயே’ என உடனடியாகப் புன்முறுவலிட்டுக்கொண்டே அவர் சொன்னது, எனக்கு ஆச்சரியமாகவே இல்லை – உண்மையைத் தானே அவர் பேசியிருக்கிறார், சொல்லுங்கள்?”
“திரையுலக ஜாம்பவான் அவர்! என்னிடமிருந்து பலப்பல அறிவுரைகளைப் பெற்றிருக்கிறார்…”
இவர்களால் உந்தப் பட்டு சீமானும் “எனக்கு ஆசைஆசையாக உடும்புக்கறி – அவரே வேட்டையாடிச் சமைத்து அன்புடன் பரிமாறுவார்…” எனவும் சொல்லவேண்டி வரலாம்…
எது எப்படியோ… மானுடர்களை நிம்மதியாகச் சாகக்கூட விடமாட்டார்களே இந்த ப்ளடித் தமிழத் திராவிட அல்லக்கைகள்…
முகாந்திரம்:



December 26, 2024 at 14:55
காம்ரெட் பீமை கதாநாயகனாகக் கொண்ட கதையை எழுதியவரின் மரணத்திற்கு மோதி இரங்கல் தெரிவித்தால் பாவம் தமிழ் எழுத்தாளர்களை நொந்து கொள்வது ஏன்? புள்ளோடும் பொழுதொடும் தமிழ் எழுத்தாளர்களை சேர்த்து விட்டாகி விட்டது. சக சங்கிகள் மோதியைப் பழியலர் போலும்.
December 26, 2024 at 15:56
மரியாதை நிமித்தம், பிரதமர் மோதியின் ஸோஷியல்மீடியா குழு ஒரு இரங்கல் செய்தி (பொத்தாம் பொதுவாகவே இருந்தாலும்) வெளியிடுவது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே!
தற்போதைய தமிழக முதலையமைச்சர் இறந்தாலும், ஏன், அந்த ஊழல் துரைமுருகன் கனிமொழி போன்றவர்கள் இறந்தாலும் பாரதப் பிரதமர் சார்பாக ஒரு பொத்தாம்பொதுவாக இரங்கல் செய்தி வெளியிடப் படும்தானே? ஆகவே அந்தச் செய்தியை லூஸ்ல வுட்டேன், சரியா?
தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நான் ஒன்றுமே பேசாமல் இருந்தாலும், நீங்கள் என்னைக் குறை சொல்வது தகாது. (என் பாடுபடுத்தும் பொருள், அலக்கிய அழுதாளர்கள், சரியா?)