BREAKING! அடுத்த மணிரத்னம் பிலிம்படம்…
December 4, 2024
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ப்ளடி மகத்தான வெற்றிக்குப் பிறகு…
‘சுட்ட படம் வேண்டுமா அல்லது சுடாத படம் வேண்டுமா’ என்கிற கேள்விக்கே இடமில்லாமல்… ஸீக்வெல் II வந்தே…
தகத்தகாய அடுத்தபடத்தின் அறிவிப்பு / சுவரொட்டுவாரொட்டி வந்தேவிட்டது!
ஞமலி உட்பட ஆனானப்பட்ட அனைத்து குணசித்திர வேடங்களிலும் கமலகாசன் ஜொலிக்கிறார் எனச் சொல்லவும் வேண்டுமோ!
ஏன், திரைப்படத்தின் மேற்கண்ட அட்வான்ஸ் சுவரொட்டியாகக் கூட அவர்தான், அவரேதான்… தமிழக தண்டக் கருமாந்திர அண்டசராசரத்தின் போஸ்டர்சைல்ட் நாயகனல்லவா அவர்?
வழக்கம்போலவே இதுவும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல் ஒன்றின் மறுதிரைவடிவமே!
(இதற்குப் பிறகாவது கமலகாசனுக்கு ஏதாவது ராஜ்யசபாபிச்சை, மடிப்பிச்சை திராவிடமாடலால் தரப்பட்டு நமக்கு விடிவுகாலம் வந்தால் சரி; இல்லாவிட்டால், தமிழகத்தைப் பீடித்துள்ள கமலகாசநோய், டமிளக வெட்டிக் கலகம் இன்னபிற ஆபாசப் பொறுக்கி வியாதிகளும் விஷக்கிருமிகளும் அகலவே மாட்டா என்பது…)
எல்லாம் சரி. படத்தின் பெயர் என்னவாக இருக்கக்கூடும்? 🤔




December 4, 2024 at 15:18
எந்த ப்ளடி பதிலுக்கான புதிர்(!) அது?
கன்னியின் கள்வன்.
(மன்னிக்கவும், இதனால் விளைந்த பயபீதிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்)
December 4, 2024 at 22:18
ஐயா, அந்த பாவப்பட்ட கன்னியைக் காமாலகாசனார் கவர்ந்தபின் அரங்கேறப்போகும் காட்சிகளை நினைத்தாலே…