தி முக இசுடாலிர் அதிரடி! அண்ணாமலை அதிர்ச்சி!!
February 28, 2024
முன்னதாக:
உலகத்தின் மிகச் சிறந்த திராவிடமாடல் மூளைத்திறன்படி, அதிதிறமை வாய்ந்த அமோக முதலையமைச்சர் தி முக இசுடாலிர் வழிகாட்டலில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்திய ராக்கெட் மீது சைனாக்கார இசுடிக்கர் ஒட்டியது…
…பரபரப்பாகி அண்ணாமலை முதல் நரேந்திரமோதி வரை அதனைப் போற்றிப் புகழ்ந்ததை நாமெல்லாம் அறிவோம்!
அதைத் தொடர்ந்து, படுபீதியளிக்கும் கவிதைகள் பலவற்றை எழுதி சாதனை படைத்துள்ள மணல்வாரியம்மன், துறைமுகம்கொண்டோள் முக கனிமொழி எம்பி, எம்பி எம்ப்பி அனிதாவாருக்கு வக்காலத்து வாங்கி, சீனக்கொடி இசுடிக்கர் ஒட்டப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்ததையும் அறிவோம்! ~~”சீனா ஒன்றும் எதிரி நாடல்ல, இசுடிக்கர் ஒட்டப்பட்டது பெரிய தவறேயல்ல. அதுதான் திராவிடமாடல்!!”
சர்ச்சை சச்சரவாக மாறிய நிலையில், பாஜக-வை திமுகவுடன் இணைக்க இசுகெட்ச் போட்ட இசுடாலிர் மாச்டர் ச்ட்ரோக்!
“…இசுடாலிர் விடுவிடுவென்று அண்ணா அறிவாலயம் சென்று, அதன் முன்னே இருந்த திமுக கொடியைக் கீழே இறக்கி அதற்குப் பதிலாக பாஜக கொடியை ஏற்றினார்!”
…என துரைமுருகன் அறிவித்தார். அது மட்டுமல்ல, அறிவாலய வளாகம் முழுவதையும் பாஜக கொடிகளால் அலங்கரிக்கவும் செய்தார் இசுடாலிர்!
இதைத் தொடர்ந்து கனிமொழி,
“பாஜக எங்களுக்கு எதிர்க் கட்சிதான், எதிரிக் கட்சியல்ல; என் அண்ணன் செய்த காரியம் சரியே! பாஜக கொடி ஏற்றப்படுவதில் என்ன தவறு? திராவிடச் சேறு இல்லையென்றால் செந்தாமரை எப்படி முளைக்கும்?
சங்கிகள் நன்றாக சோகப்படட்டும், இதைத் தொடர்ந்து தொண்டர்களே இல்லாத பாஜக கட்சியிலிருந்து பேராழி இசுனாமி அலை போல தொண்டர்கள் சாரிசாரியாக திமுகவில் இணைவர்”
…என வாழ்த்தி விளக்கம் தெரிவித்தார்!
அண்ணாமலை, பாவம், கவலையில் இருக்கிறாராம். பாஜக தலைமை அவரிடத்தில் கடுங்கோபத்தில் இருக்கிறதாம்.
பல்லடம் பொதுக்கூட்டம் பிசுபிசுத்துப் போய் நாற்காலிகள் எல்லாம் காலியாக இருந்ததைப் பார்த்து மோடி கோபப்பட்டு அண்ணாமலை முதுகில், ஓங்கி ஓங்கிப் பலமுறை அடித்த போதே தெரிந்துவிட்டது…
…அவருக்குக் கல்தா கொடுக்கப் படப் போகிறதென்று…
அனேகமாக, செந்தில் பாலாஜி பாஜகவில் இணைந்து அதன் மாநிலத் தலைவராக வாய்ப்பு இருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
(அரசியல் நோக்கர்களும் மூச்சா பத்திரிகையாளர்களுமான பிரகாஷ் எம் சுவாமி, சவுக்கு சங்கர், மணி, சுமந்தராமன் போன்றவர்களிடம் பெற்று தொகுக்கப் பட்ட செய்திகள் தாம் மேற்கண்டவை)
—








March 1, 2024 at 12:27