நன்றி! நன்றி!! நன்றி!!!
October 3, 2023
எங்களோடு இணைந்து உங்களுடைய பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ‘ஒத்திசைவு’ தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக்க நன்றி. ஒத்திசைவுக்கு நீங்க உதவி செய்யணும்னு நெனெச்சீங்கன்னா, என் சேன்னலுக்கு ஸப்ஸ்க்ரைப் செய்யலாம்; அன்பளிப்பா, உங்களுக்கு விருப்பமான தொகைய ரேஸர்பே லிங்க் மூலம் எனக்கு அனுப்பலாம்; நன்றி! வணக்கம்!!
😳
(…ற்றொம்பவே ஓவராக தமில் ய்ட்யூப் சேன்னள்கலைப் பார்க்கிறேன் என நினைக்கிறேன், மன்னிக்கவும்!)
ஸீரியஸ்ஸாக.
பொறுமையுடன் அந்த (=ஒரு கோரிக்கை – (7-10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள நேரிடும் – வெறும் கூக்ள்-ஃபார்ம் நிரப்புதல் மட்டுமே!) September 19, 2023) பதிவைப் படித்து உங்கள் கடமையை ஆற்றியிருக்கிறீர்கள்; எனக்கே நம்ப முடியவில்லை. அமாவாசைக்கு அமாவாசை ஏதோ ரெண்டுபேர் தப்பித்தவறித் தடுக்கிவிழுந்து வருகை தரும் தளத்தின் வழியாக 100+ முறை ஸர்வே கேள்வித்தாள் நிரப்பப் பட்டிருக்கிறது.
மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. எஸ்ராமகிருஷ்ணனின் தண்டக்கருமாந்திரக் கதை ஒன்றைப் புரட்டிப் பார்த்த திருப்திபோல என வைத்துக் கொள்ளுங்கள்…
இளம் ஷிவானி ஏஞ்சலினாவின் நன்றி நவிலல் கீழே:
I just want to pop in and thank you for responding to Ram sir’s request so promptly 🥹
The support and feedback has been tremendous and much appreciated — hope you all have a wonderful day in a peaceful (and hopefully healthily conflicted 😹) workplace.
THANK YOU AGAIN FOR CONTRIBUTING TO THIS RESEARCH ✨
அவளுக்குக் குறைந்த பட்சம் 109 விடைத்தொகுப்புகள் (N=109) தேவையாக இருந்திருக்கின்றன; நேற்று வரை 108 சேர்ந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.
ஏதோ உங்கள் தயவில், இந்தக் கடமை நிறைவேறியிருக்கிறது.
மீண்டும் நன்றி!
🙏🏾


October 6, 2023 at 22:00
(…ற்றொம்பவே ஓவராக தமில் ய்ட்யூப் சேன்னள்கலைப் பார்க்கிறேன் என நினைக்கிறேன், மன்னிக்கவும்!) I think you have seen “Jeyamohan.in” more
October 7, 2023 at 08:02
…erm, actually no. Been ages since I visited it; as I said, it is all because of blokes like bseshadri, tamillabs2.0 & jeyshankar types – that I had to understand what the Assaan said. Etc.
Meantime, am yet to receive your contribution to my channel. Bleddy.