சர்வர் சுந்தரம் (1986)
September 24, 2023
இதுவரை இப்படியொரு அழகான உபயோகம் ததும்பும் வடிவமைப்பை இப்புவியதனில் யாங்கணுமே கண்டதில்லை.
மற்றபடி சர்வர் சுந்தரம்(1964) திரைப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை; அதன் ஒன்றிரண்டு பாட்டுகளை அக்கால தூர்தர்ஷனின் ‘ஓளியும் ஒலியும்’ வழி ஒளிந்து கொண்டே பார்த்ததாக நினைவு.
அடுத்த நான்கைந்து வருடங்களுக்குள் என் அம்மாவுடன் உட்கார்ந்துகொண்டு அந்த நாகேஷ் படத்தைப் பார்த்துவிடலாம் எனவொரு திட்டம். யமதேவன் அதற்குள் அருள்பாலிக்காமல் இருக்க வேண்டும்,
அதேபோல (நண்பர்களால் பல காலகட்டங்களில் பரிந்துரை செய்யப்பட்ட) – மேட்ரிக்ஸ், உலகம்சுற்றும்வாலிபன், மஹாநதி, வியட்நாம்வீடு, எதிர்நீச்சல், அவதார், பராசக்தி போன்றவற்றையும். அதாவது – அடுத்த ஒருசில வருடங்களில் முக்கிமுனகிப் பார்க்கலாம் எனவும்.
அண்மையில் திருவிளையாடல் (1965) திரைப்படத்தை முதன்முறையாக – ஒருவழியாகப் பார்த்தது ஒருமாதிரித் திருப்தி. முக்கியமாக, ஒரு சாதனை.
பாட்டும் நானே பாடமும் நானே – பாடலைக் கேட்டிருக்கிறேனே ஒழிய, அதன் படத்துணுக்கைப் பார்த்ததில்லை. சிவாஜிகணேசனின் ஓவர்நடிப்புக்குப் பயப்படுபவன் என்றாலும் (ஏனெனில் தங்கப்பதக்கம், கௌரவம் படங்களை நங்கநல்லூர் ரங்கா தியேட்டரில் பார்க்க என் பெரியம்மாள் மகன் கூட்டிக்கொண்டு சென்றபோது, பயபீதியின் நடுவில், அவனுக்குக் கடுக்காய் கொடுத்து, உயிருக்காகப் பயந்தோடித் தப்பித்திருக்கிறேன்!) இதில் மிக நன்றாக ஒன்றி நடித்திருக்கிறார்; நம் நாடகத்தன்மை மட்டுமே மிக்க திரைப்படத் தமிழப் பண்பாடு என்பது sound அல்ல, வெறும் loudness மட்டுமே என்பது வேறு விஷயம்.
பாட்டுக்கள், ‘தருமி’யாக நாகேஷின் காமிகல் நடிப்பு எல்லாம் சுவைதான்.
… ஏபி நாகராஜன் அவர்கள் தமிழகமளாவிய பக்திப் புத்துயிர்ப்புக்கு, பெரும்பங்கினை இதுவழியாக ஆற்றியிருந்தாலும் – சாவித்திரி அவர்களின் XXXXL அளவு, சஹித்துக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, என்ன செய்ய… ஹைமவதிதான் அவள் என்றாலும் அதே ஸைஸிலா இருக்கவேண்டும், சொல்லுங்கள?
குணசித்திரம் என்பது குண்டுசித்திரமாக விரிவது விசனம் தருவது.
பார்க்கலாம்.



September 24, 2023 at 19:52
All other movies are somewhat good. (Matrix is exceptional).
But, “உலகம்சுற்றும்வாலிபன்”!!!. Are you sure??
Hope you have double life insurance.
September 25, 2023 at 17:50
Noted & understood; looong ago, a diehard fan of MGR recommended it to me, surprisingly for a sampling of how garish fillums could be; remember that he reco’d ‘Naalai Namathey’ too – do not remember the reason – maybe for songs.
So not all fillum recos are for ‘good quality.’ Mahanadhi was reco’d for melodrama par excellence etc.
October 3, 2023 at 12:31
மகாநதியை (பாகப்பிரிவினை, பாசமலர் மாதிரி) மெலோடிராமால்லாம் எதிர்பார்த்தா பிடிக்காது. அது ஒரு மாதிரி சிலபல discomfiting கேள்விகள் எழுப்பும் படம்.
https://x.com/dagalti/status/1632934031590572035?s=20
/ஓவர்நடிப்புக்குப்/
I used to have such an attitude to his acting when I was in was in my – to use a Jeyamohan expression- முதிரா இள மன phase.
I gradually came to like his expressive acting that now it redeems even many bad movies for me.
‘படிக்காத பண்ணையார்’, ‘சத்தியம்’ பத்தி’லாம் 20 மார்க் கேள்விக்கு என்னால பதில் எழுத முடியும்.
/பாட்டும் நானே/
சூட்டோட சூடா please watch the song தாயைப் பணிவேன் song performed by PU Chinnappa.
It shows a degree of command on the film medium that we had and then lost in the drama of the MGR-Sivaji era.
More here
http://dagalti.blogspot.com/2014/08/the-wonder-that-was.html
October 3, 2023 at 14:40
(நக்கல்களும், அறிவுரைமுதல்வாதமும் ஃபில்டர் செய்யப்பட்டன)
நீங்கள் சொல்லும் பிலிம்களை எல்லாம் பார்க்கமுடியுமா எனச் சந்தேகம்தான். (குருதிப்புனலைச் சுமார் அரைமணி நேரம் பார்த்திருக்கிறேன், நன்றி! pretentiousness in komalacosine gave rise to tensionitude in me, wot?)
க்றிஸ்டொஃபர் நோலன் படத்தைப் பரிந்துரைக்கிறீர் – உங்கள் பிற படப் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளலாமா அல்லது வோண்டாமா எனப் பார்க்கிறேன்.
(…மீள்வருகைக்கு நன்றி – ஆனால், நீவிர் ட்விட்டரைவிட்டு நீங்கிவிடப் போவதாகத்தானே ஒரு சுயவிளக்கம் வந்தது? எது எப்படியோ போன மச்சி திர்ம்பி வந்திச்சி!)
October 3, 2023 at 14:44
//watch the song தாயைப் பணிவேன் song performed by PU Chinnappa.
I did. Excellent reco; thanks! Will do multi, let me see if it sticks.
October 3, 2023 at 18:51
ஏழைரையோர் ஏந்தலே, அப்படங்களை நுங்களுக்கு பரிந்துரை செய்யவில்லை ஐயா. மகாநதியை tear jerker என்கிற ரீதியில் குறுக்குநர்களை வெறுப்பவன் யான் என்பதால், எதிர்பார்ப்புகளை சீர்செய்ய முனைந்தேன்.
மற்றபடி நோலர் படங்களை essentialize செய்து, அன்னாரது concernsஉடன் ஒத்துணர்ந்து ரசிப்பவன் நான். அதற்கு ஒரு சிலர் சொக்காயைப் பிடிப்பார்கள் என்பதால் தான் முந்தைய ட்வீட்டில் தார்காவ்ஸ்கி ரசிகமஹாஜங்களை ‘அப்பாலே போக’ விண்ணப்பித்தேன்
https://x.com/dagalti/status/1632933484762386432?s=20
/திர்ம்பி வந்திச்சி!/
வரவில்லை.
Blogக்கு போஸ்டர் ஒட்டும் இடமாக எக்ஸை பாவிக்கிறேன். அம்புடுதேன்.
October 7, 2023 at 08:10
Hmm. Do you really think that there is some tamil-fillum-aesthetics that is not understandable via ‘western’ fillum ones? (I would add tarkovskys and akiras in that)
Do you think, I lack relevant cultural sensitivity or ideas of cultural relativism or somethings/heuristics like them?
Or your 1/n criticisms of me – in terms of not being in the large-hearted mode of – being accepting of our loudness, lewdness, garishness, pretentiousness & rampant plagiarism that I see as major attribs of tamil fillums for long, save a few possible/passable exceptions? (music and scores – I see them as somewhat separate strands, admirable in yester-years kinda)