தமிழனின் தொன்மைக்கும், சங்ககாலத்துக்கும், காட்டுப் பேரீச்சம்பழத்துக்கும் உள்ள காத்திரமான நேரடித் தொடர்பு என்ன?

July 2, 2022

…சுருக்கமாக, ஒரிரு வார்த்தைகளில் விளக்கவும்.

-0-0-0-0-

கவனிக்கவும்: இது, ஒரு படு ஸீரியஸ்ஸான கேள்வி. நகைச்சுவையைத் தவிர்க்கவும்.

இந்தப் புதிரையவிழ்க – #கீழடியிலும் கொற்கையிலும் அழகன்குளத்திலும், ஏன் அரேபியாவிலும் கூட இதற்கான சான்றுகள் சர்வ நிச்சயமாகக் கிடைக்கும் என திராவிடத்-தமிழ்தேசிய அதிநிபுணர்கள் (மன்னர்மன்னன் பாரிசாலன் சீமான் விடுதலைவீரமணி சுப.வீரபாண்டியன் உதயச்சந்திரன்ஐஏஎஸ் இசுடாலிர் போன்றவர்கள்) கருதுகிறார்கள் எனும் மகத்தான நிதர்சன உண்மையைக் கவனத்தில் கொள்ளவும்.

நன்றி.

8 Responses to “தமிழனின் தொன்மைக்கும், சங்ககாலத்துக்கும், காட்டுப் பேரீச்சம்பழத்துக்கும் உள்ள காத்திரமான நேரடித் தொடர்பு என்ன?”


  1. Bleddy, nobody seems to be interested in responding; high time I closed this comment section or what?

    • Sridhar's avatar Sridhar Says:

      அப்போதே பழைய இரும்பு சாமான்கள் இருந்து அவற்றிற்கு பேரிச்சம்பழம் கொடுத்திருப்பார்களோ? எனவே, காட்டுப் பேரிச்சம்பழம் தொல் தமிழகத்தின் இரும்பு காலத்தை சுட்டுகிறதோ?

    • கொமாரு's avatar கொமாரு Says:

      இன்னா வாத்யாரே சௌக்யமா? நம்ம பவரு இன்னானு இப்பயாவ்து பிர்ஞ்சிதா? ஒர்ரே வர்ஸத்ல அல்லா பயலையும் ஓரமா ஒக்கார வச்சமா இல்லியா? அத்தான் நம்ம த்ராவ்டியா மாடல், ஸொல்றப்பயே சொம்மா அள்ளு உட்தா இல்லியா?

      ஒரு வர்ஸம் மின்னாடி வர்லும் ஒர்ரு மேட்டரும் சிக்லனாலும் பொழ்து கெள்ம்பறதுகுள்ள போராட்டம் பன்ன கெள்ம்பிர்வானுவோ நம்ம கூலிபான் புள்ளிங்கோ. சாய்ந்ரமா பேட்டா வாங்னுமா இல்லியா? இதுக்குன்னே டிசைன் டிசைனா ஏகப்பட்ட கோஸ்டி ரெடி பன்னி உட்ருக்கோம். ஒத்த ஆள்ள ஆரம்ச்சி உப்மா கச்சி வரிக்கும் எவ்ளோபேர உள்ளாற உட்ருக்கோம்னு கண்க்கே கட்யாது.

      த்ராவ்ட கலகம், அத்த காப்பி பேஸ்ட் பன்னி கெள்ப்பிவுட்ட ஒரு லோடு உப்மா கச்சிங்கோ, கம்னீஸ்டுவோ, களப்போராளிங்கோ, கலை ஒலக போராளிங்கோ, சூழல் போராளி, கொட்டடிக்ற போராளி, போர்டு புடிக்ற போராளின்டு இதுக்கு என்டே இல்ல. அல்லா பயலுக்கும் ஒர்ரே அசைன்மென்ட் தான். டெய்லி எத்தையாவ்து கெள்ப்பி உட்டுனே இர்க்கனும், அத்த அப்டியே வள்ச்சி வள்ச்சி படம் புட்ச்சி டெவலப் பன்ற வேல ஆர்எஸ்பி மீடியா மாமா பாய்ஸோடது. அவ்னுங்கள்த உடாம புட்ச்சிகினு கர்த்து ஸொல்றதுக்கு யூட்யூப், ட்விட்டர்,ஃபேஸ்புக், வாட்ஸாப்னு அல்லா எட்த்துலயும் நம்மோ புள்ளிங்கோ புல்டைம் எங்கேஜ்டு.

      எங்கூட்டு டாபருக்கு காலைல கக்கா வர்லேனாகூட அத்த இன்டர்நேஷனல் இஸ்யூ ஆக்குனோம். நாடே நாசமா போய்னிர்க்குனு நான்ஸ்டாப் கூவியே அல்லாரையும் மெர்சலாக்குனோம். இப்போ டெய்லி நம்ம புள்ளிங்கோ பட்டபகல்ல நடுரோட்ல அசால்டா கொத்துகறி போட்னு போய்னே இர்க்கானுவோ, ஒர்த்தனும் வாய தொறக்கறதில்ல, ஏன்னாக்கா போராளி கூத்தாடி கூலிபான்ஸ் அல்லாருமே இப்போ வாய்ல வாயப்பயத்த வச்சிர்க்கானுவோ, இன்னும் நாலு வர்ஷத்துக்கு இத்தான்.

      தப்பித்தவறி எவ்னாத்து வாயத் தொறந்தா புட்ச்சி குண்டாஸ்ல உள்ள போட்ருவோம், இத்தான் த்ராவ்டியா மாடல் கர்த்து சொதந்ரம், பிர்ஞ்சிதா? அத்தொட்டுதான் நம்கெதுக்கு வம்புனு ஒர்த்தரும் பேஸ்றதில்ல, ஆல்ரெடி பட்டும் உண்மயத்தான் சொல்வேன்னு அடம்புடிக்றியே வாத்யாரே? இப்பலாம் ஏரியா பிர்ச்சி வசூல் பன்னவே டைம் பத்தல, அத்தான் இங்க வர்ரதில்ல, ஆனாக்க இனி அப்பப்பொ அல்லக்கைங்கல அனுப்பி வப்பேன், ஓவரா பேஸ்னா உள்ள போட்ருவோம், வர்ட்டா?

  2. Swami's avatar Swami Says:

    இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஏழரைகள் கடும் ஆராய்ச்சியில் இருக்கிறோம்
    ஓரிரு மாதம் அவகாசம் வேண்டும் தல!

  3. Raj Chandra's avatar Raj Chandra Says:

    தொன்மையான (அதாங்க, பழைய) சாமான்களுக்கு நான் பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.  தமிழன் தொன்மையைக் கொடுத்தும் வாங்கலாம் என்று குறியீடாக சொல்கிறீர்களா?
    (தங்கள் வேண்டுகோளுக்கு இணங்க சிரிப்பான் போடாமல்  சீரியஸாக சொல்லியிருக்கிறேன்)

  4. Swami's avatar Swami Says:

    கீழ அடி அடி என்று அடித்தாலும் கீழடி ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்த முதல் அயிட்டம்

    இரும்பு சத்து அதிகம் உள்ள பேரிச்சம்பழம் புழிந்து அதிலிருந்து இரும்பெடுத்து பாத்திரம் தயாரித்து அரபு மற்றும் பாரசீக நாடுகளுக்கு அனுப்பிய தடயம் மறைக்க மறுக்க முடியாத உண்மை என நிரூபித்துள்ளேன்

    இப்படி வாரம் ஒரு அயிட்டம் கண்டுபிடித்து வெளிச்சம் காட்டப்படும் என்றும் உறுதி கூறுகிறேன்


  5. கரிபேரீச்சைக்கும் (Carbon Date)க்கும் தமிழ்க்கும் ஏகபோகத் தொடர்புண்டு

    காட்டுப்பேரீச்சை….தேவரீரே போதித்தருளவேண்டுமாய் ப்ரார்த்திகிறேம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *