ஏழரைகள் ஆறரையானார்கள்!

June 19, 2019

இந்தச் சோகமான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இறும்பூதடைபவனே நான்தான்!

சாதனைகள் பல புரிந்திருக்கும் ஜெயமோகன் எஸ்ரா சாரு நிவேதிதாவை விட்டுவிட்டு விண்ணேகி வாமணிகண்டன் யுவகிருஷ்ணா ஸமோஸா பக்கம் போகவேண்டுமாமே! இவர்கள்தான் அடுத்த ஜெனரேஷன் மும்மூர்த்திகளாமே! அப்படியா என்ன?  எனக்கு என்ன வேறுவேலையே இல்லை என்றா நினைத்தீர்கள்? (சரி, இவர்கள் எழுதிய சுவையான சுட்டிகளைக் கொடுக்கவும்)

ஸீரியஸ்ஸாக… ஆனாலும் இவ்ளோ கோவம் வேண்டாங்க! ஏன் இப்டீ சாபம் குடுக்றீங்க?? நீங்க இனிமேக்காட்டீ வொத்திசைவ பட்க்கவேபோற்தில்லண்றதே, என்க்கு பாணா தண்டெனெ யாய்டிச்சே!

பிரச்சினை என்னவென்றால் – இந்த இரண்டாம் மும்மூர்த்திகளின் கீர்த்தி பற்றியும் வேண்டுமளவுக்கு டமாரம் அடித்தாகி விட்டது. ஒத்திசைவு பதிவெழவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பொன்னான காலகட்டத்தில் – இதே தளத்தில் இந்த காமாசோமா எதிர்கால இமுக்களைத் தேடினால் குவியும் அவை!

நான் பலமுறை சொல்லிவந்துள்ளபடி:

0. பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு அடுத்தவன் வூட்டுக் கண்ணாடி ஜன்னல்மீது கமுக்கமாகக் கல்லெறிவது லேசு. நான் ஜெயமோகன் குறித்து எழுதும் விஷயங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவர்மீது எனக்குப் பல எதிர்மறைக் கருத்துகள் இருந்தாலும் (இப்போது நீங்கள் கேட்கும் ‘அடீங் வ்வோத்தா, நீ என்ன பெரீய்ய மசுறா?‘ என்ற நியாயமான கேள்வியை கண்டுகொள்ளாமல்) பல விதங்களில் அவரை மதிக்கிறேன். வாழ்க்கையே, உலகே சாம்பல் நிற கெரகமடா!

1. தகுதியும் திறமையும் நேர்மையும் மிக்க சான்றோர்கள் தமிழுலகில் சர்வநிச்சயமாக இருக்கிறார்கள். எனக்கே அவர்களில் சிலரை நேரடியாகத் தெரியும். ஆனால், ஏதோ காரணங்களினால், அவர்கள் தொடர்ந்தோ நிறைய்ய்ய்ய்ய்யவோ (ம்ம்ம்… அதாவது ஜெயமோகன் அளவு) எழுதக் கூடுவதில்லை. நம் கெட்டூழ். வேறென்ன சொல்ல. மதிக்கத்தக்க, காத்திரமான ஆசாமிகள் பலர் எழுதுவதேயில்லை. அப்படித் தப்பித் தவறி எழுதினாலும் அந்த எழவெடுத்த ஆங்கிலத்தில் எழுதிவிடுகிறார்கள்! சோகம்.

2. ஆக – தொடர்ந்து எழுதுபவர்களில் ஒரளவு ஸஹிக்கபிளாக எழுதுபவர் ஜெயமோகன் மட்டுமே. மிச்சமிருக்கும் இருவர், அதிகபட்சம், டம்மிகேஸ்கள். அவ்ளோதான். மற்றபடி, தகுதிவாய்ந்த படிப்பறிவுள்ள இளைஞர்கள், எனக்கு மேலான அறிமுகம் கிடைக்க பாக்கியமில்லாதவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் என் சின்னஞ்சிறு சிற்றறிவுக்கு எட்டிய அளவு இவ்ளோதான்.

…அட்ச்சிவுடாதவரை – ஜெயமோகன் எழுதியுள்ள சில கட்டுரைகள், சில வெண்முரசு போன்ற தொடர்திகில்கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை; அவருடைய நகைச்சுவை/பகடி அபாரம்; ஸனாதன தர்மம் குறித்த அவரது சில கட்டுரைகள் மிகவும் காத்திரமானவை – ஆனால், அதற்காக, இந்த வெக்கைக்காலத்தில் என் உள்ளக்கிடக்கைக்கு வடிகாலாக அவரை என் வழுக்கை மண்டையில் தூக்கிவைத்துக்கொண்டு கூத்தாடிக் கொண்டாடினால் அவர் பாவம் கீழே வழுக்கை விழுந்து மேலதிகமாகக் குழம்பி, ‘திமுக போன்ற அறச்சார்புள்ள, தர்ம விழுமியங்களைக் கொண்டாடும் மறக் கட்சி இந்த அவனியில் உண்டா?’ என்றெல்லாம் கனகம்பீரத்துடன் கேட்கவேண்டிவரும், தேவையா?

3. ஜெயமோகனிடம் எனக்குப் பொறாமையில்லை. இப்படியெல்லாமா புரளியைக் கிளப்புவீர்கள்? என் தளம் முற்றிலும் வேறு. முதல் மாடியில் வசிப்பவன் நான்.

அவருடைய தளம் அறிவார்ந்த, மிகமிகப் பண்பட்ட ரீதி திமுக தளம். அடிப்பதோ வெண்முரசு மத்தளம். என்னுடையது என் சொந்தக் கொட்டை கொத்தளம். டிங்டாங் அதகளம். அவ்ளோதான்.

4. மேலும், முக்கியமாக – ஜெயமோகன் (அடியேனுக்குத் தெரிந்தவகையில்) கவிதை எழுதுவதில்லை என்ற ஒரு ஸிங்கிள் ஸிங்கக் காரணத்துக்காகவே அவரை நான் மிகமிக மிகமிக மிகமிக மிகமிக மிகமிக மிகமிக மிகமிக மிகமிகமதிக்கிறேன். போதுமா?

5. நான், இவ்ளோ தன்னிலை விலக்கம் கொடுத்திருப்பதால், பெரிய மனதுடன் சுத்த சமரச சன்மார்க்க ஆன்மீக அஹிம்ஸாவழியில் நீங்கள் திரும்பிவந்து எங்கள் ஜோதியில் கலக்க முயற்சி செய்யவேண்டாம்.

ஆளை விட்டாற்போதும். நன்றி.

பின்குறிப்பு: இந்த ஆறரையை மறுபடியும் ஏழரையாக்க, நானே என் பதிவுகளை இன்னொருமுறை படித்துத் தொலைத்துக்கொள்கிறேன், சகசனியன்களே.

நன்றி!

6 Responses to “ஏழரைகள் ஆறரையானார்கள்!”

  1. Kannan's avatar Kannan Says:

    total -= 0.5

    :(

    otoh, Aasan thinks v.murasu is seriously a serious epic, now he hates the haters more than the drunk and dmk.

    mm… I think his delusions are complete.


  2. No siree – he has merely become an able SF writer(also) like Isaac Asimov:

    “ஆனால் தீ எடையற்றது. இங்கே கண்முன் நிகழ்கையிலும் தீ இங்கே உள்ளது அல்ல என்று தோன்றியது. தீயின் எடையின்மை என்பது ஒரு திகைக்கவைக்கும் கவித்துவம். ” https://www.jeyamohan.in/122922

    Goosebumps!

  3. Kannan's avatar Kannan Says:

    All his works doesn’t equal few pages of The Foundation, IMHO.


    • அவர் கடைக்கால் இரும்பொறையல்லர், உண்மை.

      ஆனால், அவருடைய தளமே வேறு என்பதைத் தாங்கள் அருள்கூர்ந்து புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை.

  4. A.Seshagiri's avatar A.Seshagiri Says:

    அந்த ஒன்னு யாரென்று என் மண்டை குடையறதே !


    • ஸாவுங்க!

      இர்ப்பின் அவஸ்தேய பிர்ஞ்சிக்கினு தனித்துவமா ரொஸீங்க! அப்பால பாக்கலாம், வர்ட்டா நைனா?


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *