எப்படி, மிகதைரியமாகப் பொய்சொல்கிறார்கள், இந்த மகாமகோ ‘வரலாற்று ஆய்வாளர்’ எஸ். ராமகிருஷ்ணனும் ‘பொறியாளர்’ ஸ்ரீலஸ்ரீ சுந்தர்ராஜனும்…

March 22, 2014

பயப்படாதீர்கள்! நான் ஒன்றும் இந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தைப் படிக்க உங்களை ஏவப் போவதில்லை.

ஆனால்…  

ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து பற்றிய வடிகட்டிய பொய்கள் அரைகுறைப் புரிதல்களைக் கேட்டு, பயபீதி அடைய:

எஸ். ராமகிருஷ்ண ஏச்சு: https://www.youtube.com/watch?v=q8MUgjF3YIc

சுந்தர்ராஜ காச்சுமூச்சு: https://www.youtube.com/watch?v=-2gtDqFDHQE

… சிரித்துச் சிரித்து வெறுத்து வெறுத்து… நம்பவே முடியவில்லை –  இவர்களையும் இவர்களுடைய படுபீதியளிக்கும் ஜப்பானிய  சுற்றுலா அறிக்கையையும்! இதனைப் பற்றி, இன்னொரு நாள் அவசியம் எழுதுகிறேன்.  சத்தியமாக இன்றுவரை, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களினுள் மறைந்திருக்கும் நகைச்சுவைப் பேச்சாளரை நான் அறிந்திராதது எவ்வளவு சோகம் தரும் விஷயம்… :-(

— ஹ்ம்ம்ம், வேறென்ன சொல்ல?  ‘காமாலைக் கண்ணர்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ அல்லது ‘கண்ணில்லாத கபோதி கடல்பட்டாங்கு?’

இந்தக் கந்தறகோள வெட்டிஅரட்டையை, வதந்தி பரப்புதலைக் கேட்க அதிகபட்சம் முப்பது பேர் மட்டுமே வந்திருக்கின்றனர் என்பது ஒரு ஆசுவாசமளிக்கும் விஷயம்தான்…

7 Responses to “எப்படி, மிகதைரியமாகப் பொய்சொல்கிறார்கள், இந்த மகாமகோ ‘வரலாற்று ஆய்வாளர்’ எஸ். ராமகிருஷ்ணனும் ‘பொறியாளர்’ ஸ்ரீலஸ்ரீ சுந்தர்ராஜனும்…”

  1. Unknown's avatar tamil Says:

    பார்ப்பன வெறியின் உச்சம்! உன்க்குதான் எல்லாம் தெரியும், மிச்சவன் மடயன். எச்ரா போல எழுதமுடியுமா உனக்கு?
    நீ புகுசிமா போனியா? அவங்க போயிருக்காங்க. எல்லாம் சப்பான் போகமுடியாத பொறாமை. ஒன்னை அணுவுலைக்குள்ள தள்ளணும். இன்னிக்கு இல்லேன்னா நாளக்கு, கூடன்குளம் எதிர்ப்பு வெற்றிபெரும்.

    ——>>>>> அய்யா ‘டமில்’ – டமால் டுமால் என்று எழுதுவதைத் தவிர்க்கவும். நீங்கள் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொள்கிறேன் – ஒரு விஷயத்தைத் தவிர.

    அதாவது – என்னால் உங்கள் அபிமான எஸ்ரா போல வெகு சுளுவாகவே எழுதமுடியும். ஒரு எடுத்துக்காட்டாக – தயவுசெய்து படிக்கவும் — எஸ். ராமகிருஷ்ண தாசன்: நெடுங்கொடுமை (https://othisaivu.wordpress.com/2014/01/16/post-318/) – மேலதிகமாகப் படிக்க இன்னும் கிண்டிய கிண்டல்கள் – https://othisaivu.wordpress.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87/

    ஹ்ம்ம் – நீங்கள் கூட எஸ்ரா அவர்கள் போல வெகு சுளுவாக எழுதமுடியும். முயற்சி எஸ்ராவினை நோபகலாக்கும்.

    ஆனால் — தயவுசெய்து என்னை அணுவுலைக்குள் தள்ளவேண்டாமென உங்கள் பாதாரவிந்தங்களில் தெண்டனிட்டு விஞ்ஞாபனம் செய்கிறேன்! என்னை விட்டுவிடவும்.

    படுபயங்கர பீதியுடன்:

    __ரா.
    நீங்கள் அதே டமில் ஆசாமியா அல்லது இன்னொருவரா?

    • க்ருஷ்ணகுமார்'s avatar க்ருஷ்ணகுமார் Says:

      இந்த உரலைப் வாசித்து யான் பெற்ற பயனைப் பெறுக இவ்வையகம்.

      http://siliconshelf.wordpress.com/2011/11/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

      இதில் உள்ள விவாதாஸ்பதமான அன்பர் பிற்காலங்களில் Tamil அல்லது டமில் என்ற பெயரில் செண்டமில் சேவை செய்யப்புகுந்தவர். ஆனால் அந்த டமிலும் இந்த டமிலும் ஒன்றா என்பது பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவுக்கே வெளிச்சம்.ஜோவென டமிலில் பொழிந்து தள்ளி ஒரேடியாக வசவுகளைப் பொழிந்தால் அது சரியான டமில். ஆமென்.

    • பொன்.முத்துக்குமார்'s avatar பொன்.முத்துக்குமார் Says:

      tamil,

      தமிழ் மொழி மீது எதற்காக உங்களுக்கு ஒரு பெரும் கொலைவெறி ? நல்லதொரு மொழியின் பெயரை சூட்டிக்கொண்டு ஏன் இப்படி ?

      கட்டுரை எழுதுபவரும் விஷயமறிந்தவர்தான் என்று எதிராளி மேல் நம்பிக்கை வையுங்கள்; கட்டுரையின் பேசுபொருளை பற்றி – இணையத்தில் மட்டுமாவது – படியுங்கள் ; திரட்டின தகவல்களோடு வந்து நீங்கள் மடையனல்ல என்று நிரூபியுங்கள், பார்ப்பன வெறியை தோலுரித்து தொங்கவிடுங்கள்.

      எளிதான காரியம்தானே இது ?

      அல்லாமல், ஒரு கட்டுரையை சரியான நோக்கில் எதிர்கொண்டு அதை சரியாக விமர்சிக்கும் – நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ கூட – அளவுக்கு உங்களுக்கு சரக்கு பற்றாது எனில் வாயை (கையை) மூடிக்கொண்டு இருக்கலாமே ? இப்படியெல்லாம் காமம் கொண்ட கழுதை மாதிரி தெருமுனைக்கத்தல் போட்டு ஆபாசப்படுத்தவேண்டாமே ?

  2. tyagarajan's avatar tyagarajan Says:

    எப்படி பொறுமையா கேட்டீங்க? என்னால முடியல


    • எனக்கும் முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் நான் அவருடைய நகைச்சுவைகளை ரசிப்பவனாதலால் உயிருடன் இருக்கிறேன்.

      இன்னொரு விஷயம்: இன்னொரு முறையும் அந்த இரண்டு பேச்சுகளையும் கேட்டுவிட்டுத்தான் மிதிப்புரை எழுதப் போகிறேன். ;-)

      • Deeban's avatar Deeban Says:

        Science just died ..Its disheartening to see positive comments for this video on YouTube .If this a platform for science I can only imagine the scientific education of TN.More disheartening is with every opportunity they gather supporters here for the movement in koodankulam

        Or is it that I missed the point.?! 7 years of me learning electrical engineering in India and Germany has never taught me this way of viewing a science.I should tell my professor about this and educate him about this , :P

  3. kakkoo's avatar kakkoo Says:

    சொல்ல வந்த விஷயத்தை விட்டு விட்டு வெறும் ஜப்பான் புராணம். நிறைய இடங்களில் வெறும் வார்த்தைகளை போட்டு பேச்சை நிரப்பிக்கொள்கிறார் அன்றி தலைப்புக்கும் பேச்சுக்கும் தொடர்பே இல்லை. பாதிக்குமேல் என்னால் முடியவில்லை. எல்லாம் மேம்போக்காக இருக்கிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *