ஈவெரா ‘பெரியார்’ அருளிச் செய்த தீபாவளி வாழ்த்து!

October 21, 2025

ஆச்சரியமாக இருக்கிறதா? நானும் இது குறித்து நேற்றிரவு கேள்விப்பட்டபோது, திடுக்கிட்டேவிட்டேன்!

அதில் இன்னமும் சில ஆச்சரியங்கள் – ‘பெரியார்’ எனப் பிறரால் படுமோசமான முகஸ்துதியின் காரணம் அழைக்கப்பட்டால்கூட படுபீதியளிக்கும் புளகாங்கிதம் அடைந்த ஒருவர், தன் அந்திம காலத்தில் தன்னை ஸ்வாமி பெரியாரானந்தா என அழைத்துக்கொண்டார் என்பது மட்டுமல்லாமல், முன்னர் படிப்பறிவு எனப் பெரிதாக ஒரு சுக்குமில்லாமல் இருந்தாலும், ஆரியர்பூரியர் திராவிடர்கீவிடர் எனச் சகட்டுமேனிக்கு உளறிக் கொட்டிக் கொண்டிருந்தவராக இருந்திருந்தாலும்,
தேவை மெனக்கெட்டு ஹிந்தியையும் ஸம்ஸ்க்ருத்த்தையும் படித்தார், ஸனாதனதர்மத்தைப் போற்றினார் என்றால் அதை நம்புவீர்களா? மேலதிகமாகக் காவியுடையும் அணிந்தார் என்பது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா?

பின்னர் தமிழ் காட்டுமிராண்டி பாஷையல்ல, மாறாக மிஸ்டர்மிராண்டாலெஃப்ட்லவராண்டா எனப் புகழ்பெற்ற மொழி என்றும் ஏகமனதாக ஒப்புக்கொண்டார் என்பதும் அவருடைய கெரில்லாத் தாக்குதல்தானே! பகுத்தறிவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை என்றும் அவர் ஆணித்தரமாகச் சுத்திவளைக்காமல் சொன்னது, ஒரு வெடிகுண்டன்றோ??

இவையனைத்துக்கும் அப்பாற்பட்டு… அவர் பரப்ப முயற்சி செய்த கீழ்கண்ட பிரகடனங்கள், திமுக திராவிடர்களால் மறைக்கப்பட்டு அமுக்கப்பட்டதை நாம் அறிவோமா?

திராவிடம் இல்லை, திராவிடம் இல்லை, திராவிடம் இல்லவேயில்லை!

திராவிடத்தைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புபவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன்!!

நான் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை; மேற்கண்ட ‘தீபாவளி வாழ்த்து’ விஷயத்துக்கு நேரடி ஆவணச் சான்றுகள் இருக்கின்றன: பார்க்க

எது எப்படியோ – ‘பெரியார்’ யுனெஸ்கொ விருது வாங்கினார், முகஸ்டாலின் மிஸா சட்டத்தால்தான் சென்னை மத்தியச்சிறையில் கம்பிஎண்ணினார், முகஸ்டாலின் தலைமுடி செம்முடி, உதய்ணா பெரிய்ய நடிகர், திடீரெக்ஸ் தொழிலதிபர் மாப்ளே சபரீசன் சொத்தெல்லாம் உழைத்துச் சம்பாரித்த துட்டால்தான் வந்தது, #திராவிடமாடலால் தான் தமிழகம் தலைசிறந்து விளங்கி ஜாதிவெறி அகற்றப்பட்டேயாயிற்று, கனிமொழி ஒரு கவிஞர், அண்ணா ஒரு பேரறிஞர், கருணாநிதி ஒரு கலைஞர்… போன்ற அண்ட ஆகாசப் புளுகு எழவுகளையே நீங்கள் நம்பினால், இந்தச் சிறு விஷயத்தை நம்பவே வேண்டும், அல்லவா?

ஸ்ரீஸ்ரீ பெரியாராநந்த மஹராஜ் கீ…

…ஜெய்!

2 Responses to “ஈவெரா ‘பெரியார்’ அருளிச் செய்த தீபாவளி வாழ்த்து!”

  1. KMR.Krishnan KMR.Krishnan's avatar KMR.Krishnan KMR.Krishnan Says:

    ஈவெரா சுக்குக் காவி மாட்டிவிட்டது யார் கைவண்ணம்?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *