எஸ். ராமகிருஷ்ண தாசன்: நெடுங்கொடுமை

January 16, 2014

நானும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கலாம் என இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். ஆனால்,  இளம் எழுத்தாளர்கள் இங்கே, ஊக்கு எங்கே என்கிற கேள்வி என்னைத் துன்புறுத்துகிறது. என்ன செய்வது, சொல்லுங்கள்.

ஆனால், இப்போதெல்லாம் இந்த ஊக்கு சனியன்களையெல்லாம் சீனாக்காரன்கள் மட்டுமே செய்வதால்,  அதனை விற்பதை மட்டும் செய்யலாம் என்பதென் எண்ணம்.

மேலும், எல்லா ளம்மிழ் ழுத்தாளர்களும் சென்னை புத்தகச் சந்தை (2014) சென்று தம் கந்தறகோள புத்தகங்களை விற்பதிலும், எஸ்ரா, சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் கையெழுத்திட்ட புத்தகங்களை வாங்க நீளவரிசைகளில் பின்புறவாயுக்களை வெளியிட்டுக்கொண்டு (=அடுத்தடுத்து புத்தகங்கள் வரவேண்டுமல்லவா?)  நின்று கொண்டிருப்பதிலும் படுபிஸியாக இருப்பதால் — நானே ஒரு இதஎவாக உருமாற்றம் கொண்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவை நல்கவும். இதனை ஒரு பிடிஃப் கோப்பாக மாற்றி உங்கள் தளங்களில் தரவேற்றிக் கொள்ளலாம். பாதகமில்லை.

பின் அடித்து, துண்டுப் பிரசூரமாக வெளியிடவும் ப்ரோக்ரியேட்டிவ் மன்மதன்ஸ் (இது க்ரியேட்டிவ் காமன்ஸ் ஷரத்துகள் போன்றதேதான்) படி காப்புரிமை பிரச்சினைகளே கிடையாது. கவலை வேண்டேல்…

நெடுங்கொடுமை

(எஸ். ராமகிருஷ்ணதாசன்)

“புத்தனுக்கு போதி மரத்தடியில் பேதி வந்தது என்பார்கள். இந்த இரண்டு கற்களின் புகைப்படங்களும் எனக்கு உலகின் தொன்மையை, தனிமையை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

இரண்டும் சாதாரணமான கற்கள். தன்னளவில் மிகத் தனிமையான கற்கள். இதைப்போல இன்னொரு கல் உலகில் இல்லை என்பதே இதன் சிறப்பு. அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்.

ஒன்று கேப்டன் பிரபாகரன் எனப்படும் உலகிலே மிக வயதான கல். இதன் வயது 22000000 வருசங்களுக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இலங்கையில் வடமராட்சி மாவட்டத்திலுள்ள புலிகள் சரணாலயத்தில் உள்ள சீமார் தமிழ்த்தேசியப் பூங்காவில் உள்ளது. 2100000 டன் எடையும் 2750000 அடி உயரமும் கொண்ட இந்த கல்லே இன்று வரை உலகில் உள்ள கற்களில் மிகவும் வயதானது. இந்த கல் இருபத்திரண்டாயிரமாயிரம் வருசத்தின் மனித வாழ்வைக் கண்டிருக்கிறது.

எத்தனை புயல்மழைகள், எத்தனை கோடைகள் கண்டிருக்கும். எவ்வளவு மனிதர்கள் இதைக்கடந்து போயிப்பார்கள். மனிதவாழ்வோடு ஒப்பிடும் போது இந்த கல் மகத்தானது. இரண்டாயிரம் வருசத்தின் முந்தைய மனித வாழ்க்கைக்கு எலும்புத்துண்டுகளைத் தவிர வேறு சாட்சிகள் இல்லை. ஆனால் இந்த கல் இன்றும் உயிர்ப்போடு நின்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொருமுறை இதைக் காணும் போது அடையும் வியப்பு சொற்களில் அடங்காதது. இலங்கை என்ற நிலப்பரப்பில் நடைபெற்ற அத்தனை மாற்றங்களுக்கும் உள்ள தொன்மையான சாட்சி இந்த கல் தானில்லையா?

காலத்தின் எல்லாச் சீற்றங்களையும் கடந்து இக் கல் தனித்து நின்று கொண்டிருக்கிறது என்றால் ஏதோவொரு கருணை இந்த கல்லின் மீது கவிந்திருக்கிறது என்று தானே அர்த்தம். நூற்றாண்டிற்குள் மனித வாழ்க்கை கொள்ளும் நினைவுகளும் கொந்தளிப்புகளும் சொல்லி முடியாமல் இருக்கின்றன. என்றால் இருபத்திரண்டாயிரமாயிரம் வருடத்தின் நினைவுகளை இந்த கல் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். சரித்திரம் கல்லில் எழுதப்பட்டது மட்டுமல்ல. உயிரோடு கண் முன்னே காட்சியளிக்ககூடியது என்பதற்கு இது சாட்சியாக இருக்கிறது.

இந்த கல்லைக் காணும்போது யாரோ ஒரு அவதூதனைக் காண்பது போலவே இருக்கிறது. வார்த்தைகளால் எதையும் கற்றுக் கொடுக்காத போதும் கல் தன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது என்பதை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது .

இருபத்திரண்டாயிரமாயிரம் வருசம் என்பதை எண்ணிக்கையாகத் தவிர வேறு எப்படி கற்பனை செய்வது? எத்தனை பகலிரவுகள் கடந்து போயிருக்கின்றன. எத்தனை மனித கண்கள் இக்கல்லை தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து கல் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே நின்று கொண்டிருக்கிறது.”

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஆதாரம்: எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின்:  நெடுந்தனிமை –  இது தழுவப்பட்டு, மரம் எங்கெல்லாம் இருந்ததோ அதெல்லாம் கல்லாக மாற்றப் பட்டு, சில அற்ப மாற்றங்கள் மட்டுமே செய்யப் பட்டாலும், அதே பிரமிப்பையும் புளகாங்கிதத்தையும் தருவதுதான் இந்த ஒத்திசைந்த கட்டுரை என்பதைத் தெரிவிக்க மட்டுமே, இந்த வேலையற்ற வேலை.

இதுதாண்டா எஸ்ரா அவர்களின் மேஜிக்! :-(

வாசகர்களுக்கு சில பரிந்துரைகள்: எஸ்ராவல் நடையில் எழுதப் பட்ட பின்னூட்டங்கள் மட்டுமே இங்கு பிரசூரிக்கப்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்வதை, அந்த இரு கற்கள் தன்னளவில் பார்த்துக் கொண்டிருப்பதை நான் நினைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்வதை செய்யவேண்டாம் ஏனெனில் வாழ்வு மகத்தானது என்று தன்னளவில் உங்களை சாட்சியாக விட்டுவிடுகிறேன்.

பெரியவர்களிடம் மரியாதையுடன் இருக்கவும்.

தினமும், உப்புமா பாண்டவத்திலிருந்து ஐந்து பக்கங்கள் பாராயணம் செய்தால், உங்கள் வாழ்க்கை உள்ளபடியே தன்னளவில் எவ்வளவோ நன்றாகத் தானே இருக்கிறது, ஏன் இந்த இலக்கியகோரங்கள் பின்னால் அலைய வேண்டும் என்று தெரிய வரும்.

மிகவும் வலிக்கிறது.

மன்னிக்கவும்.

இரவு பல் விளக்கவும்.

மணாளனே மங்கையின் பாக்கியம்.

உங்கள் பாக்கியம் என் சித்தம்.

என் சித்தம் உங்கள் பித்தம்.

அடிக்கடி ஒத்திசைவு படிக்க வரவேண்டாம்.

உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

4 Responses to “எஸ். ராமகிருஷ்ண தாசன்: நெடுங்கொடுமை”

  1. A.seshagiri's avatar A.seshagiri Says:

    கல்லும் கசிந்து உருகும்படி ஒரு கட்டுரை!

    « … அழ வைத்துவிடுகிறார்கள், பாவிகள்…!


  2. நீங்கள் குறிப்பிடுவது போல் வடமராட்சி ஒரு மாவட்டம் அல்ல யாழ்மாவட்டத்தின் ஒரு பகுதி.

    இப்படிக்கு
    விமலாதித்த மாமல்ல தாஸன்


    • அய்யா விமாதா!

      அப்போ மிச்ச எல்லா வெவரமும் சரீங்றிங்க்ளா? சீமார் பேர்ல ஒரு பூங்காவே தெர்ந்துட்டாங்களா?

      ஸீரியஸாக – பிழையைத் திருத்தியதற்கு நன்றி, சாய்பிரசாத்.

  3. Vinothkumar Parthasarathy's avatar Vinothkumar Parthasarathy Says:

    நீங்க என்னதான் சொன்னாலும் இந்த S ராமகிருஷ்ணன் மாறவே போறதில்லைனு நினைக்கிறேன். லேட்டஸ்ட் atrocity ‘தோக்கியோ’ http://www.sramakrishnan.com/?p=3701


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *