நன்றி! நன்றி!! நன்றி!!!

October 3, 2023

எங்களோடு இணைந்து உங்களுடைய பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ‘ஒத்திசைவு’ தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக்க நன்றி. ஒத்திசைவுக்கு நீங்க உதவி செய்யணும்னு நெனெச்சீங்கன்னா, என் சேன்னலுக்கு ஸப்ஸ்க்ரைப் செய்யலாம்; அன்பளிப்பா, உங்களுக்கு விருப்பமான தொகைய ரேஸர்பே லிங்க் மூலம் எனக்கு அனுப்பலாம்; நன்றி! வணக்கம்!!

😳

(…ற்றொம்பவே ஓவராக தமில் ய்ட்யூப் சேன்னள்கலைப் பார்க்கிறேன் என நினைக்கிறேன், மன்னிக்கவும்!)

ஸீரியஸ்ஸாக.

பொறுமையுடன் அந்த (=ஒரு கோரிக்கை – (7-10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள நேரிடும் – வெறும் கூக்ள்-ஃபார்ம் நிரப்புதல் மட்டுமே!) September 19, 2023) பதிவைப் படித்து உங்கள் கடமையை ஆற்றியிருக்கிறீர்கள்; எனக்கே நம்ப முடியவில்லை. அமாவாசைக்கு அமாவாசை ஏதோ ரெண்டுபேர் தப்பித்தவறித் தடுக்கிவிழுந்து வருகை தரும் தளத்தின் வழியாக 100+ முறை ஸர்வே கேள்வித்தாள் நிரப்பப் பட்டிருக்கிறது.

மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. எஸ்ராமகிருஷ்ணனின் தண்டக்கருமாந்திரக் கதை ஒன்றைப் புரட்டிப் பார்த்த திருப்திபோல என வைத்துக் கொள்ளுங்கள்…

இளம் ஷிவானி ஏஞ்சலினாவின் நன்றி நவிலல் கீழே:

அவளுக்குக் குறைந்த பட்சம் 109 விடைத்தொகுப்புகள் (N=109) தேவையாக இருந்திருக்கின்றன; நேற்று வரை 108 சேர்ந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

ஏதோ உங்கள் தயவில், இந்தக் கடமை நிறைவேறியிருக்கிறது.

மீண்டும் நன்றி!

🙏🏾

2 Responses to “நன்றி! நன்றி!! நன்றி!!!”

  1. Muthukumar's avatar Muthukumar Says:

    (…ற்றொம்பவே ஓவராக தமில் ய்ட்யூப் சேன்னள்கலைப் பார்க்கிறேன் என நினைக்கிறேன், மன்னிக்கவும்!) I think you have seen “Jeyamohan.in” more


    • …erm, actually no. Been ages since I visited it; as I said, it is all because of blokes like bseshadri, tamillabs2.0 & jeyshankar types – that I had to understand what the Assaan said. Etc.

      Meantime, am yet to receive your contribution to my channel. Bleddy.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *