ஆஹா!  நான் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவன். எனக்குத் தொடர்ந்து கிடைக்கும் அற்புதச் சந்தர்ப்பங்களும், கதவு திறப்புகளும் – என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக  ‘ நல்லூழ்’ என்றெல்லாம் பேசவைத்து, ‘கர்மா’ கோட்பாடுகள் கிட்டே அழைத்துக் கொண்டு போய், பின்னர் என்னை ஒரு ஆத்திகனாகவே ஆக்கி விடுமோ என்று நினைத்தால்… அய்யய்யோ. :-(

ஆனால், பாதகமில்லை. :-)

ஓவ்வொரு இரண்டொரு ஆண்டு இடைவெளிகளிலும், என்னுடைய பொதுவான தாமச  குணத்தையும் மீறி, சில மிக அழகான புத்தகங்கள் கண்ணில் பட்டுவிடுகின்றன. அவற்றின் வடிவமைப்பிலும், செய்நேர்த்தியிலும் (அவற்றின் உள்ளடக்கத்தையே விடுங்கள்) அவை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகின்றன. Read the rest of this entry »