நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’  ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’  ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »

என்ன செய்வது. உங்கள் கர்மா. Read the rest of this entry »

ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-( Read the rest of this entry »

um… I meant ‘boot out’ :-(

Read the rest of this entry »

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான – சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ஜேஜே: சில குறிப்புகள் எனும் புதினத்திலிருந்து:
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)

எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம்,  குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை  சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.

Read the rest of this entry »

(அல்லது) நம் ஆராய்ச்சிச் சிகாமணிகளின் அதிஅற்புத அநுபூதி நிலை ஆயோதிஆய்வுகள்!

அம்மணிகளே, அம்மணர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. இதை இருமுறை அடிக்கோடிட்டுக்கொள்ளவும். எனக்கு அது பிடிக்கவேறு வேண்டுமா என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். உங்கள் விதண்டாவாதம் சரிதான். மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதுதான்!

ஆனாலும் இப்பதிவு கருங்குருவி+வெண்டைக்காய்+தர்ப்பை பற்றித்தான். பயப்படாதீர்கள்.

Read the rest of this entry »

… ஆகவே மொழி பெயர்ப்புகள் சரியாகவே இருந்தனவோ? அந்தக் காலத்தில் காப்பி இல்லை என்றாலுமே கூட…

ஸி எஸ் ‘அம்பை’ லக்ஷ்மி அவர்களைத் தொகுப்பாசிரியராக(வும்) கொண்டு வெளிவந்த  –  ‘சாவகாச நகரம்: சென்னையின் மீதான எழுத்துகள்’ (The Unhurried City: Writings on Chennai – edited by C. S. Lakshmi) புத்தகத்தில் சில தமாஷ் விஷயங்கள் இருக்கின்றன. யார் சொன்னது நான் மிகவும் மதிக்கும் அம்பை ஒரு மிகஸீரியஸ் எழுத்தாளர், அவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியியேல்லை என்று!

அவற்றில் ஒன்று –  எழுத்தாளர், வரலாற்றாசிரியர், இலக்கியவரலாற்றாளர், மேலதிகமாக ‘போட்டுக் கொடுங்கபா, பக்கத்து கடேல இன்னும் அறிஞத்தனங்கள் சல்லீசாக கெடக்குது, அழுகின பழத்த போடாத‘  இன்னும் பலவாகவும் – மொழிபெயர்ப்பாளராகவும், அறிஞராகவும், அரசியல், ‘பாரத ரத்னா’ விருது விமர்சகராகவும் செயல்படுவதாக அநியாயத்துக்கு அபாண்டமாக வதந்தி பரப்பப்படும் — பரிதாபத்துக்குரிய திரு ‘சலபதி’ அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. Street Smart in Chennai: The City in Popular Imagination. Read the rest of this entry »

…. ‘தாங்கவே முடியவில்லை,’ தொடர்கிறது!

சலபதிஅவர்களுடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சியையும் வரலாற்றாசிரியத்தனத்தையும் அன்னாருடைய ஆய்வுப் புத்தகங்களோடு, கட்டுரைக் கதையடித்தல்களோடு நிறுத்திக் கொண்டிருந்தால், அவருக்கு ஒரு கால்கோள் விழாவினையே நடத்தியிருப்பேன்! ஆனால், அவர்… :-(

-0-0-0-0-0-0-0-0-0-0-

பொதுவாக தம்மை இப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார் இவர்:  “A.R. Venkatachalapathy is a historian and Tamil writer. chalapathy(at)mids(dot)ac(dot)in”; மேலதிகமாக, சில சமயங்களில் இவர்  “social historian” எனவும் “literary historian” எனவும் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.

இதில் என்னுடைய சிறு பிரச்சினை என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை ‘சலபதி’ ஒரு வரலாற்றாளரோ வேறு ஏதாவது ஆய்வாளரோ அல்லர். ஆனால், அவர் தன்னை அப்படி அழைத்துக்கொள்ள சர்வநிச்சயமாக அவருக்கு உரிமை இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன்.

அதாவது  நான் அடுத்தவருடம் இரு நொபெல் பரிசுகளையும் (இயற்பியல்+இலக்கியம் மற்றவைகளைப் போனால் போகிறது என்று விட்டுவிடுகிறேன்!) ஒரு மேன் புக்கர் பரிசையும் ஒரு நொக்கர் விருதையும் ஒரு பீல்ட்ஸ் விருதையும்  ஒரேசமயத்தில் வாங்கப் போகும் அளவுக்கு ஆழமும் வீச்சும் வல்லமையும் பராக்கிரமும் மிக்கவன் என்ற என்னுடைய சொந்த, வீங்கிய கருத்தை, பரிதாபத்துக்குரிய   நீங்களும் ஒப்புக் கொள்ளமுடியுமென்றால்

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY??இதற்கு ஒரு 'த ஹிந்து' தினசரியின் பெத்த செய்தி வேறு!

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY?? இதற்கு ஒரு ‘த ஹிந்து’ தினசரியின் பெத்த செய்தி வேறு! http://www.thehindu.com/2005/12/23/stories/2005122302411300.htm

Read the rest of this entry »

புத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1

… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர்  என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர்  தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.

… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷரகுக்ஷிதான். :-(

இத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது;  இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம்  – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா? வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா??) Read the rest of this entry »

நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய  வார்த்தைகளில்:

ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே…  நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…

-0-0-0-0-0-0-0-0-0-

அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்: Read the rest of this entry »

எச்சரிக்கை: இந்தப் பதிவில் 1) ஏன் தொலைக் காட்சி என்பது வெறுக்கப் படவேண்டியதொன்று 2) அதனால் ஒரு சில நன்மைகள் தப்பித் தவறி இருந்தாலும் – உண்மையில் அது எவ்வளவு தீமை செய்கிறது 3) தொலைக்காட்சி முதல்வாத அடிப்படைவாதிகளுக்கு (Television Fundamentalists!), சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு எதிராக  என்றெல்லாம்…

… பிரகடனங்கள் இல்லை. மன்னிக்கவும்.

calvinhobbes-tv

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் பின்னொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன். 8-)

மாறாக – என் பார்வையில் – குழந்தைகளுடனான ஒரு குடும்பச் சூழலில்,  சராசரித் தர (அறிவு, பொருளாதாரம், பார்வை, அனுபவங்கள் இன்னபிற) பெற்றோர்களால் – தங்கள் வீட்டில், தொலைக்காட்சியில்லாமல் என்னதான் செய்யக் கூடும் என்பதை மட்டுமேதான் இப்பதிவில் விவரிக்கப் போகிறேன்; இங்கு ஒரு முக்கியமான விஷயம்: எனக்குத் தெரியும் – நானும் ஒரு சராசரித்தனமான ஆள்தான் – அகஸ்மாத்தாக ஒரு கணவன், தந்தை போன்ற பல பாத்திரங்களில், குணசித்திர வேடங்களில் நடிப்பவன்தான். இன்னும் முக்கியமாக, நான் ஒரு அறிவுஜீவி கிறிவுஜீவியென்றெல்லாம் இல்லை.

ஆகவே, கடந்த சுமார் 30 வருடங்களாகத் தொலைக்காட்சியின் கிட்டவே போகாமல் காலம் தள்ளியிருக்கும் ஒரு சாதாரணன்  என்கிற முறையில் மட்டுமே இந்தக் கேள்வி-பதில் நடைப் பதிவு நீளும்.  யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகளை எல்லாம், என்னிடம் பலபேர் பல சமயங்களில் கேட்டிருக்கிறார்கள்; விதம் விதமான பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் மகனை, மேதகு சோட்டாபீம் அவர்களிடமிருந்து மீட்க வேண்டுமாம்.  ஆக, இந்தப் பதிவு; வழக்கம்போல, யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம் !
Read the rest of this entry »

(அல்லது) டீடலஸ், இகரஸ் –  நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)

இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))

<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>

சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே  நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-(  ம்ம்ம் B-)!

ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…

என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான  தீர்வு இருந்தது.

கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.

எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது.   இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.

இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம்  என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

Am at the terrace of my home – trying to view the stars, but the resident haze does not permit much – only a weeping moon is visible, nestled in Capricornus… Could not identify a single planet,  including the one  that I am living on and off.

Or, it merely so happened that at this time, I could not see any planet – may be local conditions are responsible, dunno. I Squint, try hard to view at least a few comforting  constellations or at least, some telltale  signs of them, but nothing is visible – but for an Ameriki satellite on a NearEarthOrbit, streaking north -> southwards.

… Have been thinking about what kind of planet are we going to leave behind for our next generation, if we don’t all prematurely go up in a mushroom cloud, that is. Read the rest of this entry »

(அல்லது) கூடவே, என்னுடைய வெறுப்பாளர்களின் எண்ணிக்கையை, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, முனைந்து முழுமூச்சுடன் வளர்த்தெடுப்பது எப்படி?

எச்சரிக்கை: இந்தப் பதிவு ‘முஸ்லீம்களுக்கு எப்படி மேலதிகமாக வேலை வாய்ப்பு அளிப்பது’ இன்னபிற என, பின் வரப்போகும் பதிவுகளுக்கு ஒரு முஸ்தீபும் கூட.

-0-0-0-0-0-

1996 – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு மென்பொருள் வஸ்து (ஸாஃப்ட்வேர் ப்ரோடக்ட்) தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை. தொழில்நுட்பம் + வர்த்தகரீதியானச் செயல்பாடுகள்.

எனக்கு ஸஸ்பென் டர் போட்டுக் கொள்வது பிடித்ததேயில்லை. ஆனால் பெரும்பாலும் மார்பு வரை புரண்டு கிச்சுக் கிச்சு மூட்டும் தாடி வைத்திருந்திருக்கிறேன்...

எனக்கு ஸஸ்பென்டர் போட்டுக் கொள்வது பிடித்ததேயில்லை. ஆனால் பெரும்பாலும் மார்பு வரை புரண்டு கிச்சுக் கிச்சு மூட்டும் தாடி வைத்திருந்திருக்கிறேன்…

இந்த நிறுவனம், கண்டமேனிக்கும் வர்த்தகம் என்று வருவதையெல்லாம் அரக்கப் பரக்க எடுத்துக் கொண்டு – சகட்டுமேனிக்கு Y2K, மென்பொருள் சேவை (ஸாஃப்ட்வேர் ஸர்வீஸஸ்) – அதாவது: ஆரக்ள், ஜாவா, விஷுவல் C++, எஸ்ஏபி  (மன்னிக்கவும். குமுதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இது SAPதான் – இதனை ஸாப் என்று சொன்னால் அடிக்க வந்து விடுவார்கள் எஸ்ஏபிமுதல்வாதிகள்  வேறு) ஃப்ரன்டென்ட், பேக்கென்ட் மிட்டில்என்ட், மிட்டில்வேர், அன்டர்வேர் என்று மானாவாரிச் சாகுபடியாக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நிறுவனமல்ல.

… கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் – அந்தக் காலத்தில் C# போன்ற இழவுகள் இல்லை, லூனக்ஸ் (Loonux) கூடப் பெரிய அளவில் இல்லை. ஆனால்  மகத்தான யூனிக்ஸ் (UNIX!) இருந்தது, அதிலும் பர்க்லி மென்பொருள் பகிர்தல் (BSD 4.4) இருந்தது! ஜொலித்துக் கொண்டிருந்தது!! 

… ஸிலிகன் ஸெல்களினுள் உறைந்திருக்கும் பைனரி த்வைதக் கடவுளுக்கு நன்றி, மறுபடியும், மறுபடியும்

பௌல்-ஹென்னிங் கம்ப் அவர்களால் உருவாக்கப்பட்ட பிம்பம். ஃப்ரீபிஎஸ்டி-யால் ஓட்டப்படும் கணினி யந்திரங்களில் /usr/share/examples/BSD_daemon/ இருக்கும்.

பௌல்-ஹென்னிங் கம்ப் அவர்களால் உருவாக்கப்பட்ட பிம்பம். ஃப்ரீபிஎஸ்டி-யால் ஓட்டப்படும் கணினி யந்திரங்களில் /usr/share/examples/BSD_daemon/ விரிவில் இருக்கும்.

-0-0-0-0-0-

மொத்தம் சுமார் 50 பணியாளர்கள்தான் இருந்தனர் அப்போது அந்த நிறுவனத்தில்.

என் குழுவில் சுமார் 30 பேர். அதில் 6 பேர் போல நிஜமாகவே மென்பொருள் எஞ்சினீயர்களாக ஆகக்கூடிய சாத்தியக் கூறுகள். மற்றவர்கள், சாவி கொடுத்தால் மட்டுமே நடமாடும், சொன்னதை மட்டும் முக்கிமுக்கித் திக்கித்திணறி அரைகுறை கந்தரகோளமாக வேலை செய்பவர்கள், குறைகுடங்கள் – கற்றுக் கொள்வதில், உழைப்பதில் முனைப்பே இல்லை, மோசமான திறமையின்மை. டன்னிங்-க்ரூகர் விளைவின் மோசமான பிரதிநிதிகள். இவர்களுக்கெல்லாம் எப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள் என எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

அவர்களுக்கு மூன்று மாதம் (வேறு எந்த வேலையும் கொடுக்காமல்) ஒரு அடிப்படை பயிற்சி கொடுத்து – அதன் பின் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லையானால் வெளியில் அனுப்பிவிடுவேன் என்று சொன்னேன். என்னை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். மூன்று மாத முடிவில் ஒரே ஒரு பையன் தான் தேறினான்.

-0-0-0-0-0-

நான் அந்தக் கம்பெனியின் உரிமையாளரிடம் போய்  (இவர் ஒரு மாண்டயம் அய்யங்கார், படிப்பும் பண்பும் மிக்கவர், என்னைப் போலல்லாமல்   தர்மமயக்கங்களால் சதா அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்) – எனக்கு இந்தப் பையன்கள் வேண்டாம், இவர்கள் இல்லாமலேயே நம்  மென்பொருள் வஸ்துவை நம்மால் தரமாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் உருவாக்க முடியும் என்றேன்.

அவர் தடுமாறினார். இவ்வளவு பேரையா என்றார். ஒரே சமயத்திலேயா என்றார். இந்த எண்ணிக்கை நம் நிறுவனத்தில் பாதி! நாம் எப்படி இவர்களை வேறு வேலைகளுக்கு உபயோகிக்க முடியும்?

அப்படியென்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

ஒரே சமயத்தில் இப்படிச் செய்தால் நம் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடுமே என்றார். உனக்கு முன்னால் இருந்த மேனேஜர் இவ்வளவு பேர் இருந்தால்தான் வேலை செய்ய முடியும் என்றாரே என இழுத்தார்.

நான் சொன்னேன் இந்த நான்கு கீழ்கண்ட விஷயங்களை:

  1.  ஃப்ரெடெரிக் ப்ரூக்ஸின் Mythical Man Month படியுங்கள். எண்ணிக்கைகளால் மட்டுமே எதனையும் சாதிக்க முடியாது. தரம் தான் முக்கியம். என்னுடைய குழுவில், திறமைதான் பிரதானம்.
  2. எனக்கு என் திறமை மேல் நம்பிக்கை அதிகம். எனக்கு என் குழு விஷயங்களில் முழு சுதந்திரம் வேண்டும். என் முன் அனுபவங்களை நன்றாக விசாரித்துத்தானே என்னை  நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்த்திக் கொண்டீர்கள். எதற்கு?
  3. நான் உத்தரவாதம் – இந்த மென்பொருளை தரமாக, துரிதமாக நம்மால் ஏற்றுமதி செய்யப் படுவதற்கு.
  4. இந்த அரைகுறைகளை வெளியே அனுப்பினால், சோம்பேறித்தனத்துக்குச் சம்பளம் கொடுப்பது குறையும், இவர்கள் செய்து கிழிக்கும் வேலைகளால் மேலதிக வேலைகள் ஏற்படுவதும் குறையும்.

இருந்தாலும் அவர் இழுத்தார். ஆனா நீ தமிழன் – இந்தப் பையன்கள்ள நிறையபேர் கன்னடர்கள். ஏதாவது பிரச்சினை வருமோ?

அய்யா, இந்தக் கும்பலில் தமிழர்களும் எட்டு பேர் இருக்கிறார்கள். முஸ்லீம் க்றிஸ்தவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமில்லையா? பிரச்சினை ஏதாவது வந்தால் என்னை வேலையை விட்டு துரத்திவிடுங்கள், பரவாயில்லை.

சரிதான் ஆனால் இந்தப் பையன்களை நான்கு மாதம் முன்னர் தாம் நம் நிறுவனத்தில் சேர்த்தோம் இல்லையா? ஏன் சேர்த்தோம்? எப்படி ஒரே சமயத்தில் இவர்களை வெளியே தள்ளுவது? எனக்கு இது அறமாகத் தெரியவில்லை.

அய்யா, யோசியுங்கள். எனக்கு முன்னே இங்கு வேலை செய்தவர் இவர்களைச் சேர்த்திருக்கிறார். அது நிச்சயம் ஒரு அறிவில்லாத மடச் செயல் தான். ஆனால் அதற்காக உடனே இந்தப் பசங்களை நான் வெளியே அனுப்பிவிடவில்லை. அவர்களுக்கு, என் வேலையைத் தவிர, உயிரைக் கொடுத்து மூன்று மாதங்கள் பயிற்சி – ப்ரொக்ராமிங் வேலை, எடுத்துக் கொண்ட வேலையைத் தூய்மையாக, அழகாகச் செய்வது எப்படி, என்றேல்லாம் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் அவர்களிடம் அதிகம் கேட்கவில்லை – 8 மணி நேரச் சராசரித்தனமான உழைப்புதானே கேட்கிறேன்? அதி அற்புதச் சாகசச் செயல்களைச் செய்யும் ஸாமுராய்களாகவா மாறச் சொன்னேன்?

ஆனால், ஹ்ம்ம். பாவம், அவர்கள் சரியான கல்லூரிகளில் படிக்கவில்லை. அவர்களும் என்னதான் செய்வார்கள்?

அய்யா, உங்களுக்கு மென்பொருள் வர்த்தகம் வேண்டுமா, அல்லது அரைவேக்காடுகளைக் கொஞ்சிக் கொண்டு நல்லிணக்கம் என, வேலையக் கத்துக்குங்கடா, வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யுங்கடா தயவுசெய்து, ப்ளீஸ், ப்ளீஸ் எனப் பேசிக் கொண்டே யிருக்க வேண்டுமா?

நீ  உன்  கல்லூரியை, உன் படிப்பை வைத்துக் கொண்டு, மேட்டிமைத்தனத்துடன் இப்படிப் பேசுகிறாயோ? எல்லோரும் ஒரேமாதிரி தரத்துடன் இருக்கமாட்டார்கள் அல்லவா – அவர்கள் கல்லூரிகளில் ஆசிரியர்கள் சரியில்லையோ என்னவோ?

இல்லை. என்னிடம் இப்போது இருப்பது ஓரளவு தரமான 7 பேர்கள் – இவர்களும் ஸுப்பர் தரமென்றில்லை. ஆனால், இவர்களுக்குக் கற்றுக் கொள்ளும் முனைப்பு இருக்கிறது. இது போதும் எனக்கு, அவர்களைத் தரமானவர்களாக மாற்றுவதற்கு. ஆனால் மற்ற 24 பேர்களுக்கு அப்படியில்லை மேலும் இந்த 7 பேரில் ஒருவர் கூட என் கல்லூரியில் படிக்கவில்லை.

இருந்தாலும், என்னவோ இது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.

அய்யா, இந்தப் பையன்களை இப்படி விரட்டினால் தான், அவர்கள் அடுத்த வேலைக்காவது கொஞ்சம் கற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த விரட்டல், நம்முடைய எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, அவர்களுடைய  எதிர்காலத்துக்கும் மிகவும் முக்கியம். நாம் இதனைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு நாம் உதவவில்லை, துரோகம்தான்  செய்கிறோம். வேலை அறம், தர்மம் (Work Ethic) எனறால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இது அவர்களுக்கே நல்லதில்லையா?

என்னவோ எனக்கு இது சரியாகப் படவில்லை. அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. நீ என் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பாய்?

நான் சொன்னேன் – இது ஒரு தியரட்டிகல் கேள்வி, நம் புல்லரிப்புச் சினிமாவுக்கானது – ஆனால், யோசித்துப் பாருங்கள் – பன்றிக் குட்டிகள் அழகாக, பாவமாகத்தான் இருக்கின்றன. அந்த ரோஜாக்கலர் குட்டிகள் தங்கள் தாயிடம் முட்டி முட்டிப் பால் குடிப்பது அழகான, மெலிதான பரிதாபம் படர்ந்த மென்மையான விஷயம்தான். ஆனால், இந்தப் பையன்கள் பன்றிக்குட்டிகளுமல்ல (இந்த ஒப்புமைக்கு அந்தப் பன்றிக்குட்டிகள் கோபப் படும் என்றாலும்), உங்கள் நிறுவனம் ஒரு தாய்ப் பன்றியும் அல்ல. இல்லையா?

சரி,  நாளை இதைப் பற்றிப் பேசலாம் என்றார்.

சரியென்றேன். (வெண்ணெய் அய்யங்காரே, எப்படி அய்யா உங்களுடன் நான் பணிபுரிவது என்று,  தலையில் அடித்துக் கொண்டே…)

-0-0-0-0-0-

நான் அடுத்த நாள் அலுவலகம் போகவில்லை. அப்போதெல்லாம் செல்ஃபோன் பெரிய புழக்கத்தில் இல்லை. என் வீட்டில் லேண்ட்லைனும் இல்லை. பெங்களூரின் டெய்ரி ஸர்க்கிள் பக்கத்து லக்கஸந்த்ராவில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தேன். ஜாலியாக ’ஜேஜே சில குறிப்புகள்’ படித்துக் கொண்டிருந்தேன்.

மாலை அவரே வீட்டிற்கு வந்தார். அழுதுவிடுவார் போல இருந்தார். சரி என்றார். நீயும் நிறுவனத்தில் பங்குதாரராக ஆகிராயா என்று கேட்டார், நான், அது முடியாது என்றேன். முதலீடெல்லாம் வேண்டாம், நீயும் ஒரு இயக்குனராகிவிடு என்றார். நன்றி, ஆனால் மன்னிக்கவும் என்றேன். ஆனால் அடுத்த நாள் முதல்  நிச்சயம் வேலையைத் தொடர்வதாகச் சொன்னேன்.

-0-0-0-0-0-

அப்போது ஹாட்மெய்ல் பிரபலமாக இருந்தது அதில் மின்னஞ்சல் முகவரிகள் பலவிதமாகத் தயாரித்து – என்னை, என் மூதாதையர்களைத் திட்டிக் கண்டமேனிக்கும் மின்னஞ்சல்கள், அதிலாவது சரியாக நாலு வரி கோர்வையாக ஆங்கிலத்தில் எழுத முடிந்ததா இந்த ITயடிச்சான் குஞ்சுகளுக்கு? இந்தக் குப்பை மின்னஞ்சல் உழைப்பைக் கூட அவர்கள் தங்கள் வேலையில் காட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகம். (24 வெளியேற்றல்கள்; 100க்கும் மேலான வெறுப்பு மின்னஞ்சல்கள்)

-0-0-0-0-0-

கையால் ஒரு வரி கணினிக் கட்டளைக்கட்டுகளைக் (ப்ரொக்ராம்) கூட எழுதமாட்டேன் என்கிற மேலாண்மைத் தலைவர்கள் (Leaders & Managers) இல்லை. மேலோட்டமான கட்டமைப்பு (ஆர்க்கிடெக்சர்) மட்டும் தான் செய்வோம் என்பவர்கள் இல்லை. ஒப்புக் கொள்ளும் பரிசோதனைகளை நாங்கள்  (Acceptance Test) செய்யமாட்டோம் என்றில்லை. தரநிர்ணயக் குழு (Quality Assurance) என்றெல்லாம் தனியாக வினோத ஜந்துக்கள் தேவைப்படவில்லை. (ப்ரொக்ராம்களை) எழுதுகிறவன் தான், தரத்திற்கு உத்தரவாதம். எல்லோரும் எல்லாமும் செய்ய வேண்டும்.  ஒரு நாளைக்கு இரண்டு – ஐந்து நிமிடக் குழுக் கூட்டங்கள் / உரையாடல்கள் மட்டுமே. காலம் தவறாமை மஹாமஹோ முக்கியம். சிறிய தரம் வாய்ந்த, ஒருவரோடொருவர் ஒத்துழைத்துப் பணி செய்யும், நேர்மையா, மேற்குவியும் (overlapping) குழுக்கள். காலை சரியாக 7 மணிக்கு வரச் சொல்வேன். மாலை 4 மணிக்கு வீட்டிற்குக் கண்டிப்பாகப் போய்விட வேண்டும்.  நான் மட்டும் மேலதிகமாக ஆறுமணி நேரம் வேலை. ஞாயிறு மட்டும் விடுமுறை. வெட்டிப் பேச்சு, வேலை என்கிற பெயரில் பஜனை என்றில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் மட்டுமே மும்முரம். ஒரு மாதம் இப்படி வேலை செய்தபின் இந்தக் குழுவில் அனைவருக்கும் 25% சம்பள உயர்வு.

இந்த வேலைக்காக எனக்கு கொடுக்கப் பட்டிருந்த நாட்கள் 90. ஆனால், அடுத்த 78 நாட்களில் அந்த எழுவர் + நான், அசுரத்தனமாக வேலை செய்து அந்த மென்பொருள் வஸ்துவை வெளிக் கொணர்ந்தோம். வேலை செய்து முடிப்பதற்கான உத்தேசச் செலவுப் பணத்தில் (எஞ்சினீயரிங் பட்ஜெட்) 40% தான் செலவழித்தோம்.  (ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா! நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது!)

-0-0-0-0-0-

அச்சமயம் இந்த வஸ்து, ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் ஒரு மென்பொருள் வஸ்துவுடன் நேர் மோதலில் இருந்தது, ஆனால் எங்களுடையது அதைவிட விலை மலிவாகவும், தரம் வாய்ந்ததாகவும் உரிம ஷரத்துகள் (license terms) சுளுவாகவும் இருந்தது; இருப்பினும், வருந்தத்தக்க விதத்தில், அய்யங்கார் அவர்களின் வர்த்தகப்பிரிவைச் சார்ந்த RNI (Resident non-Indian) நண்பர்கள் விற்பனையில் சொதப்பி விட்டனர், சோம்பேறி முட்டாள்கள்.

வர்த்தகத் திட்டத்தை (பிஸினெஸ் ப்லான்) அவர் என்னிடம் காட்டியிருக்கலாம் – ஆனால்,  நான் முன்னர் கேட்டபோது, நீ எஞ்சினீயரிங் மட்டும் பார்த்துக் கொள் என்று சொல்லியிருந்தார் அவர். (இப்போது தோன்றுகிறது – ஷிவ் நாடார் அல்லது ப்ரேம்ஜி அல்லது நாராயணமூர்த்தி நிறுவனங்களில் சேர்ந்திருக்க வேண்டுமோ?)

பின்னர், ஐந்து மாதங்களில் இந்த வஸ்து, லாஸ் எஞ்சலிஸ் அருகில் இருந்த ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டது ( நான் இரண்டு மூன்று முறை இந்த டீல் விஷயமாகப் பேச்சுவார்த்தை, சரிபார்த்தல்களுக்காகப் (due diligence) போய்வந்தேன் – இந்த விற்பனையில் எங்கள் நிறுவனத்துக்குச்  சுமார் 117 லட்சம்  நிகர லாபம், ஆனால் எங்களுடைய வர்த்தகத்திட்டம் சரியாக இருந்திருந்தால் சுளுவாகப் பல கோடிகளை அள்ளியிருக்கலாம்).

பின் எங்களிடம் வாங்கிய ஒரே மென்பொருளை வைத்திருந்த அந்த எல்ஏ நிறுவனம், ஐபிஎம் நிறுவனத்தாலேயே – இரண்டு மில்லியன் டாலர்கள் – ரொக்கத்துக்கு ஆட்கொள்ளப் பட்டது. அவர்கள் அந்த மென்பொருளை மேற்கொண்டு விற்காமல், சரியாகப் பராமரிக்காமல் – வாங்கிய ஆறே மாதங்களில் –  இழுத்து மூடப் போகிறோம் (EoL – End of Life) என அறிவித்தனர்! (மென்பொருள், கணினி தொடர்பான வர்த்தகங்களில் இது சகஜம் தான்?

சுபம்.

-0-0-0-0-0-0-

ஒரு பொஷ்குக் குழந்தை சிரிப்பதைப் போலச் சந்தோஷமாக இருந்த அய்யங்கார், உனக்கு லாபத்தில் 25 சதம் பங்கு கொடுக்கிறேன் என்றார். நான் வேண்டாம் என்றேன். வர்த்தக அபிவிருத்திக்கு அதனை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். (அப்போது எனக்கு குழந்தைகள் இல்லை, இப்போது அப்படிச் செய்வேனா என்பது தெரியாது)

ஆனால் O’Reilly பதிப்பித்த அனைத்துப் புத்தகங்களும் LISP பற்றிய அனைத்துப் புத்தகங்களும் வாங்கி நம் தொழில் நுட்ப நூலகத்தில் வைக்கலாம் என்றேன். இரண்டு வாரங்களில் 8 பெரிய்ய்ய அட்டைப் பெட்டிகளில் பொக்கிஷங்கள் வந்தன.

lisp_cycles1

பின்குறிப்பு: Work Ethic எனும் பதத்திற்கு சுருக்கமாக 2-3 வார்த்தைகளுள்ள தமிழ்ப் பதம் இருக்கிறதா? எனக்கு முழ நீளப் பதவுரை தான் எழுத வருகிறது. வேலை அறம், தர்மம் என்பவை தான் கிட்ட வருகின்றன எனத் தோன்றுகிறது.  உதவ முடியுமா?

இவற்றையும் படிக்கலாம்: