இஸ்லாமிய மாப்பிள்ளைமார்களின் தொடர் ஜிஹாதிக் கொலைவெறி, பாபுஜி, மது கிஷ்வர் – சில குறிப்புகள்
August 12, 2021
முந்தைய பதிவொன்றின் (1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள் 05/08/2021) மீதான ‘டகால்டி’ பின்னோட்டத்துக்குக் கொஞ்சம் விலாவாரியான குறிப்புகள். (நேரடியான பதில்களல்ல – ஏனெனில், அவற்றுக்கு நிறைய தினம் எடுக்கும்) Read the rest of this entry »
பாபுஜி நம்மெல்லாரையும் போல விசித்திரமானவர். Flawed but fantabulous. Read the rest of this entry »
1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள்
August 5, 2021
பலப்பல ஆண்டுகளாக நிறைய யோசித்து, அதனாலும் பித்துப் பிடித்து இக்குறிப்புகளை எழுதுகிறேன். Read the rest of this entry »
எஸ்.ராமகிருஷ்ணன்: தமிழ் அலக்கியத்தின் தொடர் வெட்கக்கேடு
June 16, 2019
பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »
என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »
அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை
August 31, 2015
அரவிந்தன் கண்ணையன் அவர்கள் எழுதிய, முகாந்திரமேயில்லாத, அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காத ஆங்கில மேட்டிமைதொனி முன்முடிவுக் கட்டுரைக்கு பதிலாக – லாவணித் தமிழ்க் கட்டுரையொன்றை எழுதலாமா வேண்டாமா, எழுதினாலும் (எனக்கேகூட!) ஏதாவது உபயோகம் இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்தேயிருந்தாலும், குறிப்புகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
என் நண்பர் ஒருவரிடமும் இதன் அவசியமின்மை/அவசியம் பற்றி அறிவுரை கேட்டிருந்தேன். அவர் பதில் எப்போதும்போலவே சமனத்துடன் இருந்தது = ‘எழுதவேண்டுமென்றால் இப்படி எழுதலாம், ஆனால் அப்படி வேண்டாம்!’ அய்யா, நன்றி! :-) Read the rest of this entry »
எனது செல்ல தன்னார்வ பஜனை NGO நண்பர்களுக்கு…
April 30, 2015
எச்சரிக்கை: இப்பதிவில் – இணையத்திலிருந்து எடுத்த கேலிச்சித்திரங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பொறுமையாகப் படிக்கவும்/பார்க்கவும்.
… நமதிந்தியாவில் – இந்தத் தறிகெட்டலையும் தன்னார்வத் தொண்டு(!) நிறுவனங்களை நெறிப் படுத்தும் வகையில், கொஞ்சமேனும் செயல்பாடுகள் ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது. :-))) Read the rest of this entry »
சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (1/2)
February 23, 2015
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித் போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.
மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.
அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.
நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.
ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.
ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?கூட
குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)
-0-0-0-0-0-
சரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.
Read the rest of this entry »
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!)
January 14, 2014
இதாணு: எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?
லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!
… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ ‘எஸ்ராவோடெ ராவுகள்’ — ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள குருத்தங்கெட்ட தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.
… … … … பேடிக்கண்டா! … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?
… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!! aye aegree. zuizide is zimbly no zolution. uou onderztand?
…Besides, ezra is a thick armoured battletank, he can pound away merrily, while you lousy lusers keep complaining. Resistance is futile, yes. :-(
சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.
எச்சரிக்கை: இது ஒரு ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(
காந்தி எனும் சக்கிலியர்
February 8, 2013
… அல்லது காந்தி எனும் செருப்புத் தைப்பவர்…
“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்டு, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் ஆறாம் அத்தியாயம்: காப்ளர் (cobbler).
-0-0-0-0-0-
காந்திக்கு அப்போது வயது 63. வல்லபாய் படேல் அவர்களுடன் யெரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வல்லபாய்க்கு புதிய செருப்புகள் தேவைப்பட்டன. ஆனால், சிறையில் அந்த வருடம், நல்ல செருப்புத் தைப்பவர்கள் இல்லை.