இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

Read the rest of this entry »

ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள்,  ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.

இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!

சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர்  அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.  ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »

நாம்தமிழரும் என் ஒர்ரே அபிமானத் தலைவருமான சீமான் அவர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் பயபீதி அளிக்கும் பிரகடனம்:
எனக்கு மூலம், பௌத்திரம், தறுதலைப்புலியாதரவு போன்ற தீராவியாதிகளுடன், அண்மையில் ஜிஹாத் வியாதியும் பிடித்திருக்கிறது!

ஆதாரம்:

Read the rest of this entry »

2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி! நினைவிருக்கிறதா?

… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம்! இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது!

இது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்!!

தமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்!!!

பேருந்துகளின் மீது கல்விட்டெறிந்து, கோஷ்டம் பல போட்டுக்கொண்டு, டீவிகேமராக்களுக்கு முன் ஆர்பாட்டம் செய்து தளுக்காக மினுக்கிக்கொண்டு,  ‘தமிழ்’ஈழத்தை வடதுருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் தேடிக்கொண்டு, வெறி தலைக்கேற குத்தாட்டம் ஆடி, புட்டத்தைச் சொறிந்துகொண்டு பவனிவந்த காலங்கள்…

Read the rest of this entry »

இன்று ஸெப்டெம்பர் 21.  மகத்தான  ராஜனி திராணகம அவர்களின் 25வது நினைவுநாள்.
ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

பிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான்! நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு,  இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின் மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.

இவர்களால், இந்தத் தறுதலைப்புலிகளால், காடுகளில் மனிதர்களுக்குப் பயந்துகொண்டுவாழும் பாவப்பட்ட சாதா புலிகளுக்கே மாளாத அநியாயக் கெட்ட பெயர்… :-(

சரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் –  யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)

அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)

இவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013   ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி  படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது.  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.

Read the rest of this entry »

… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி  இருக்கிறோம்? (21/n)

முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)

பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)

நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.

ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.

அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென  ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)

ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான்  தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே  இல்லை என்றுதான் தோன்றுகிறது.) Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)

சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…

‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.

நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி,  நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும்  குறிப்பிடத்தக்க அளவில் தரம்  வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.

albert-einstein-good-quotes-sayings-indifference-people

எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட  இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.

இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:

‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’ Read the rest of this entry »

நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும்  எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.

தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.

ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பலற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »

தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:

… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »

பல மாதங்களுக்கு முன், இந்த மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட விசித்திர ஜந்துக்களைப் பற்றி, என் நேரடி அனுபவங்களை முன்வைத்து, கொஞ்சம் காட்டமான கட்டுரைகள் சில எழுதியிருந்தேன்.

… உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம் – அக்காலகட்டத்தில் – இந்த மாணவமணிகள், ஃப்லெக்ஸ்தட்டி குஞ்சாலார்டுகள் போன்றோர், தமிழ் நாட்டையே சிலகாலம் போல ஸ்தம்பிக்க வைத்தது போலச் சித்திரத்தை விரித்து, போரோட்டமோதி போராட்டம் செய்து, பேருந்துகள் மேல் கல்விட்டெறிந்து —  ‘தமிழ்’ ஈழத்தை, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும், ராஜபக்ஷவைத் தூக்கில் போட்டதும், அமெரிக்காவை விட்டு ராஜபக்ஷவை ஒரு இனஒழிப்பாளியாக அறிவித்ததும்!

அய்யய்யோ! இப்படியெல்லாம் நடந்ததை மறந்து விட்டீர்களா என்ன?? பின்னதெல்லாம் நடக்கவேயில்லை என்று நீங்கள் சொல்லுவீர்களானால், உங்கள் தமிழினத் துரோக முகம் வெளிப்பட்டு விடும், ‘பூனைக்குட்டி’ வெளியே வந்துவிடும்… ஜாக்கிரதை!

 கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

கருத்துப் படம்: தன்னிகரிலாத் தமிழனின் நகைச்சுவையுணர்ச்சி

Read the rest of this entry »

நேற்றைய முன்தினம் காலை உள்ளூர் மளிகைக் கடை ஒன்றுக்கு இரண்டு கோழிமுட்டைகள் வாங்கப் போயிருந்தேன். என் பிள்ளைகளுக்கு மதிப்பெண் போடுவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ அல்ல – சில பரிசோதனைகளைச் செய்து காட்டுவதற்காக. முட்டைகளை உபயோகப் படுத்தி பல கணித, இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான விஷயங்களைத் தொட முடியும். இதைத் தவிர முட்டை ஏன் உருண்டையாக இல்லை என்பதிலிருந்து பல பொதுப்புத்தி சார்ந்த அற்புதமான வடிவாக்கப் புரிதல்கள் பற்றியும் பேச முடியும். ஏன், கணினியியல் அடிப்படைகள் பற்றிக் கூடப் பேச முடியும்.  கடந்த இரண்டு வாரங்களாக, என் குழந்தைகளை இந்தப் பரிசோதனைகளுக்குத் தயார்ப் படுத்தியிருக்கிறேன்.

ஆனால், இந்தப் பதிவு இந்த முட்டைகளைப் பற்றி மட்டும் அல்ல. Read the rest of this entry »

பத்மனாப ஐயர், சசீவன் கணேசநாதன், கோபினாத்  தில்லைநாதன், சேரன் சிவானந்தமூர்த்தி ஆகியோரால் தொடங்கப் பெற்று, அவர்களை அறங்காவலர்களாகக் கொண்டு, ஒரு சுயஅர்ப்பணிப்பு மிகுந்த குழுவினருடன், கடந்த எட்டு ஆண்டுகளாக, இலங்கையின் கொழும்புவிலிருந்து, பல தளங்களில், பல தடைகளையும் இன்னல்களையும் மீறி, மகத்தான பணியாற்றி வருகிறது நூலகம் அறக்கட்டளை (நூலகம் ஃபௌன்டேஷன்).

நம்மைப் போன்ற தமிழகம்சார்  நபும்சகத் தமிழர்கள், நம் தமிழக அரசு நிறுவனங்கள், தமிழர்(!) இயக்கங்கள்(!!), இலங்கைத் தமிழரைப் பற்றிக் கவலைப் படுவதாகக் காட்டிக் கொண்டு பசப்பும் நம் அரசியல்/பண்பாட்டு/திராவிட அயோக்கியர்கள் – இவர்கள் எல்லாம் செய்யாததை, செய்யக் கூட நினையாததை, நூலகம் தொடர்ந்து செய்வது – நமக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருசேர அளிக்கும் விஷயம்.
Read the rest of this entry »