கடந்த சுமார் 32 வருடங்களாக தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும், மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் மனிதர்களின் ஒருவர் இந்த அம்மணி மது கிஷ்வர் அவர்கள். ஆழ்ந்த சிந்தனையும், விரிவான படிப்பறிவும், செயலூக்கமும், பாரதத்தைப் பற்றிய கரிசனமும் கொண்ட இவர் — அமைதியாக, அலட்டலில்லாமல் செயல் படுபவர், கொஞ்சமாகப்  பேசுபவர். தன்னுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பாபுஜியை ஊற்றுக் கண்ணாகக் கொண்டிருப்பவர் – ஆனால் அவரைப் பற்றிய சில கறாரான விமர்சனங்களும் வைத்திருப்பவர்.

ஒரு தனித்துவமான –  இந்தியச் சிந்தனை மரபுகளில், பண்பாட்டுப் பாரம்பரியங்களில் ஊறிய மனமும், உலகத் தத்துவங்களில் ஆழ்ந்த மூளையும் படைத்த இவர், எந்த விஷயத்தையும் ஐயந்திரிபற அறிந்து கொள்ளும் மனப்பான்மையுடையவர். இவரிடம் முட்டியடி எதிர்வினைகளே இல்லை.

மது பூர்ணிமா கிஷ்வர்

மது பூர்ணிமா கிஷ்வர்

அவர் வெளிப்படுத்தும் எண்ணங்கள் – அசை போடப்பட்டு, அனுபவத்தால் கட்டமைக்கப்பட்டு, ஆழ்ந்த அறிவால் புடம் போடப்பட்டவை – அவர் எதையும் எனக்குத் தெரிந்து சும்மனாச்சிக்குமோ அல்லது மேம்போக்காகவோ சொன்னதில்லை. Read the rest of this entry »

பாகம் ஒன்று: ‘இவன் நானில்லை’

இரண்டாம் ராமசாமி எழுதுகிறார்: ஜாதி என்பது என்ன, சமூகத் தட்டுவாரிக் கட்டமைப்பு என்பது எப்படிப்பட்ட ஒரு சமூகக்கருவி என்றெல்லாம் புரிந்து கொண்டுதான் பேசுகிறோமா? அதில் ஒரு விஷயம் கூட உதவிகரமாக இல்லையா? காலங்காலமாக மனிதக் கூட்டங்கள், தங்கள் ஒருங்கிணைப்புத் தேவைகளுக்காகவும், சுய சார்புக்காகவும், சுயங்களைப் பண்பாட்டுப் பின்னணிகளில் பொருத்தி முன்னெடுத்துச் செல்வதற்குமான கருவிகள் இல்லையா அவை? உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், முக்கியமாக, மானுடப் பரிணாமத்தில் தட்டுவாரிக் கட்டமைப்புக்கள் அளிக்கும் சமூகவியல் பங்களிப்புகள் எப்படியானவை?

ஜாதி அபிமானம் என்றால் என்ன? ஜாதி வெறி என்றால் என்ன? ‘ஜாதி ஒழிப்பு’ என்பது சாத்தியமா? மேலும் முக்கியமாக, அது தேவையா? ஜாதிக்கு மாற்றாக  எதனை முன்வைக்கிறோம்? திராவிட(!) இயக்கக்(!!) கருத்தாங்களையா(!!!)? கொம்மிஸார்களையா? மதகுரு-முல்லாக்களின் கட்டமைப்பையா? அல்லது நம்முடைய செல்லமான புறநானூற்று வஞ்சித்திணைகளுக்குள் புகுந்துகொண்டு ரத்தத்தில் நீந்தப் போகிறோமா? அல்லது வேறொரு கிரகத்திலிருந்து வேறு எதையாவது இறக்குமதி செய்யப் போகிறோமா?

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் - நியூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் – ஃபெப்ரவர் 2, 2004 அன்று  ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது

அல்லது மாற்று என்பதையே பார்க்காமல், வன்முறையே அற்ற சுத்த சன்மார்க்க சத்திய சமூக உலகம் (utopia) ஒன்றை நிறுவப் போகிறோமா?

இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வோமானால், எப்படி அதனைச் சாதிக்கப் போகிறோம்? அந்த அதி உன்னத உலகத்தில் சமூகக் கட்டமைப்பு என்பது எப்படி எதை நோக்கியதாக இருக்கும்?

அல்லது, இவ்விரண்டும் இல்லாமல் பரிணாமப் பாதையில் பின்னோக்கி நகர்ந்து கல்லாய் பாம்பாகிப் பறவையாய்ப் பல் விருகமாகி மரமாகிப் புழுவாய் பூடாய்ப் புல்லாகிப் போய்ச்சேரப்போகிறோமா?

சரி, மேற்கண்ட அனைத்துக் கேள்விகளையும் விட முக்கியமானதொன்று: நாம், நம்முடைய தனிப்பட்ட முறையில், ஜாதி வெறி சார் பிரச்சினைகளை எப்படி அணுகப் போகிறோம்? Read the rest of this entry »

நேற்றைய முன்தினம் காலை உள்ளூர் மளிகைக் கடை ஒன்றுக்கு இரண்டு கோழிமுட்டைகள் வாங்கப் போயிருந்தேன். என் பிள்ளைகளுக்கு மதிப்பெண் போடுவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ அல்ல – சில பரிசோதனைகளைச் செய்து காட்டுவதற்காக. முட்டைகளை உபயோகப் படுத்தி பல கணித, இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான விஷயங்களைத் தொட முடியும். இதைத் தவிர முட்டை ஏன் உருண்டையாக இல்லை என்பதிலிருந்து பல பொதுப்புத்தி சார்ந்த அற்புதமான வடிவாக்கப் புரிதல்கள் பற்றியும் பேச முடியும். ஏன், கணினியியல் அடிப்படைகள் பற்றிக் கூடப் பேச முடியும்.  கடந்த இரண்டு வாரங்களாக, என் குழந்தைகளை இந்தப் பரிசோதனைகளுக்குத் தயார்ப் படுத்தியிருக்கிறேன்.

ஆனால், இந்தப் பதிவு இந்த முட்டைகளைப் பற்றி மட்டும் அல்ல. Read the rest of this entry »

அப்பால, வொலகத்துக் குப்பைங்கள போராடி அகத்தறத யோசிக்கலாம்… புர்ஞ்சுதா ஸ்டூடென்ட்-ப்ரொடெஸ்டடிச்சான் குஞ்சுகளா?

 நெல்ஸன் மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் - குத்துச் சண்டைப் பயிற்சி -

ரோலிஹ்லஹ்லா ‘நெல்ஸன்’ மன்டேலா + அவர் நண்பர் ஜெர்ரி மலோய் – தென் ஆஃப்ரிக செய்தித்தாள் குழும அலுவலக மாடியில், இளம்வயதுக் குத்துச் சண்டைப் பயிற்சி – ’ட்ரம்’ பத்திரிக்கைகாக எடுத்தது – ஆனால் பதிப்பிக்கப் படாதது. ( நான் எல்லெக் பீமர் எழுதிய நெல்ஸன் மன் டேலா புத்தகத்தில் இருந்து இந்தப் படத்தை ஸ்கேன் செய்தேன்)

பாவப்பட்டு, மறுபடியும் என் பதிவைப் படிக்க வந்திருப்பவர்களே! திரும்பவும் திட்டலா என்று வருத்தப் படாதீர்கள்.  என்னுடைய முந்தைய ஒரு பதிவிற்கு வந்த எதிர்வினை ஒன்றால்தான் இது. மன்னிக்கவும். செய்வினை என்பது இதுதானோ? (உங்களுக்கு வேறு உபயோககரமான வேலைவெட்டியிருந்தால், மேலே படிக்காதீர் – வொங்க நெல்த்துக்குத்தாம்பா ஸொல்றேன். பிர்ஞ்சிதா?)

… ஒரு நீள்நெடுநாள் ‘போராளி’(!) மிகவும் வருத்தப்பட்டு கொஞ்சம் கோபத்துடனேயே ஏகவசனத்தில் எழுதியிருக்கிறார்: (கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்) –

”உன்னைப் போன்ற அறிவுஜீவிகள், ஏதாவது பொது, மக்கள் எழுச்சிப் போராட்டம் என்றாலே நக்கல் செய்கிறீர்கள். இளைஞர்களின் போர்க்குணத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உனக்கு எவ்வளவு இளைஞர்களை, கல்லூரி மாணவர்களை தெரியும், இந்த மாதிரி பொத்தாம்பொதுவாக மட்டையடி அடிப்பதற்கு? நீ இந்த இளைஞர்கள் செய்வதை விட என்ன உபயோககரமாகச் செய்து கிழித்து விட்டாய்? … … அவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நீ தாங்க மாட்டாய் …  … உன்னைப் போன்ற தமிழினத் துரோகிகளின், பார்ப்பான்களின் சாயம் வெளுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.”

Read the rest of this entry »

(அல்லது) மாணவர்களும் அரசியலும்

என்னுடைய, தற்போதைய புத்தம்புதிய  புதிய ஆத்திச்சூடியில்,

அ: அரசியல் பழகு.
ஆ: ஆற்றாமை தவிர்.
இ: இலத்தல் இகழ்ச்சியல்ல
ஈ: ஈடுபாடு கொள்.


(ரொம்ப அறிவொர மாரி இருக்குல்ல, மன்ச்சுக்குங்க; எனக்குந்தாங்க இந்த அறிவொர, சொறிவொரல்லாம், சரீங்க்ளா?)

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது வாழ்க்கையில், சமூகத்தில், நம் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான, இன்றியமையாத அங்கம்.

மிகு பொது நலம் (’greater common good’) – மீதாகக் குவிந்த வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் விட்டுப் போனவற்றை / போனவர்களை / பாதிக்கப் பட்டவர்களை, தொடர்ந்து அரவணைத்து மேலெழுப்பிச் செல்வதும் அரசியல் நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியங்களாகவும் என்பதாகவே நான் அறிகிறேன்.

… பொதுவாக, நான் ஏற்றுக் கொண்ட தொழில், எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை அல்லது நான் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும்போது எனக்கு அவ்வேலைகளைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அவற்றுடைய இலக்குகளை அடைவது தான் முக்கியம். இந்த முனைவுகளில் இல்லாத அரசியலா! இதில் இல்லாத நடைமுறை தந்திரோபாயங்களா? இந்த முயற்சிகளில், தனிமனிதர்களின் தன்னல இச்சைகளையும் பொச்சரிப்புகளையும், மனமாச்சரியங்களையும் – அவை இலக்குகளை அடைவதற்கு உபயோகமாக இல்லாமலிருந்தால், அவற்றை மறித்தால், அந்த மனிதர்களையே கூட கடாசியே வந்திருக்கிறேன். நல்லிணக்கமா? க்கூட்டுறவா?? இன்னாங்கடா, இன்னாடா ஸொல்றீங்க?? இதெல்லாம் கிலோ என்ன விலை? Read the rest of this entry »